நோக்கியாவின் 41 மெகா பிக்ஸெல் கேமரா போன் ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, March 28, 2012

நோக்கியாவின் 41 மெகா பிக்ஸெல் கேமரா போன் !


Nokia 808 Pureview

அண்மையில் நடந்து முடிந்த மொபைல் கருத்தரங்கில், நோக்கியா வெளியிட்ட அறிவிப்புகளில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது நோக்கியா 808 பியூர் வியூ மொபைல் போன். இதில் 41 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட சென்சார் உடைய கேமரா இருக்கும். திரை 4 அங்குல அகலத்தில் AMOLED CBD டிஸ்பிளே கொண்டிருக்கும். திரைக்கு கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த மொபைல் போனில் உள்ள கேமராவில் மட்டும் பயன்படுத்த என கார்ல் ஸெய்ஸ் ஆப்டிக்ஸ் உடன் இணைந்த புதிய தொழில் நுட்பத்தினை நோக்கியா உருவாக்கியுள்ளது. கேமராவின் ஸூம் தன்மை 4 எக்ஸ். ஸெனான் பிளாஷ் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் 1920x1080 ரெசல்யூசனுடன் கூடியமுழுமையான HD 1080p வீடியோ பதிவு (விநாடிக்கு 30 பிரேம்கள்) மற்றும் இயக்கம் கிடைக்கும்.

நோக்கியா ரிச் ரெகார்டிங் என்ற தொழில் நுட்பமும் முதன்முதலாக இதில் பயன் படுத்தப்படுகிறது. இதன் மியூசிக் பிளேயர் டோல்பி டிஜிட்டல் ப்ளஸ் 5.1 சேனல் சரவுண்ட் வசதியினைக் கொண்டிருக்கும். போனின் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். ஆப்பரேட்டிங் சிஸ்டமாக சிம்பியன் பெல் பயன்படுத்தப்படுகிறது. இதன் மெமரி 16ஜிபி. இதனை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலமாக, 48 ஜிபி வரை உயர்த்திக் கொள்ளலாம்.

நெட்வொர்க் இணைப்பிற்கு, 3G HSPDA, HSUPA (14.4Mbps), புளுடூத் 3.0, வை-பி, டி.எல்.என்.ஏ., ஏ-ஜி.பி.எஸ்., ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
கூடுதல் வசதிகளாக, என்.எப்.சி., எப்.எம். ட்ரான்ஸ்மீட்டருடன் கூடிய ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ ஆகியவை தரப்படுகின்றன.
இதன் பேட்டரி 1,400 mAh திறன் கொண்டது. தொடர்ந்து 6.5 மணி நேரம் பேசும் திறனை இது அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 540 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது.

வெள்ளை, சிகப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த மொபைல் போன் கிடைக்கும். ஐரோப்பிய நாடுகளில் மே மாதம் வர இருக்கும் இந்த மொபைல், தொடர்ந்து இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும்.


Nokia 808 Pureview போனின் சிறப்பம்சங்களை இந்த கானொளியில் காணுங்கள் 




------------------ நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

2 comments:

  1. முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு !

    Visit Here for More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/nokia-808-pureview.html

    ReplyDelete
  2. முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு !

    Visit Here for More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/nokia-808-pureview.html

    ReplyDelete