நம் கம்ப்யூட்டரில் பயன்படுத்த பல இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன. எந்த வேலைக்கு என்றாலும், அதற்கென ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட புரோகிராம்கள் கிடைக்கலாம். சில நமக்கு மிகவும் பிடித்துப் போய்விடும். வெகு நாட்களுக்கு முன்னால் டவுண்லோட் செய்தாலும், அதனையே தொடர்ந்து பயன்படுத்துவோம். அந்த புரோகிராம் பின் நாளில் அப்டேட் செய்யப்பட்டதா எனப் பார்க்க மாட்டோம். நம் தேவைக்கு இருந்தால் சரி என்று இருந்துவிடுவோம்.
அப்படியானால், இந்த பைல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்று பார்க்க வேண்டுமானால், எங்கு சென்று பார்ப்பது? ஒரே இடத்தில் அனைத்து இலவச பைல்களுக்குமாக அப்டேட் செய்யப்பட்ட பைல்கள் கிடைக்குமா? அப்டேட் செய்யப்பட்ட விபரங்கள் கிடைக்குமா? என்ற கேள்விகள் நம் மனதில் எழத்தான் செய்திடும்.
இந்த கேள்விகளுக்கான அனைத்து பதில்களையும், மேலும் பல கூடுதல் வசதிகளையும் கொண்டு ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முகவரி www.filehippo.com இந்த தளம் சென்றால், இதன் முகப்புப் பக்கத்தில், அன்றைய நாள் அப்டேட் செய்யப்பட்ட புரோகிராம்கள், அதன் பதிப்பு எண்ணுடன் தரப்படுகிறது. இப்படியே இதற்கு முன் அப்டேட் செய்யப்பட்ட புரோகிராம்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த புரோகிராம்களின் பெயர்கள் மீது கிளிக் செய்தால், அந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளத்திற்கான லிங்க் கிடைத்து, அந்த தளங்கள் திறக்கப்படுகின்றன. அங்கு நாம் விரும்பும் புரோகிராம்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
அனைத்து இலவச புரோகிராம்களும் இந்த தளத்தில் வகைப்படுத்தப்பட்டு காட்டப்படுகின்றன. பயன்பாட்டின் அடிப்படையில் இவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆடியோ மற்றும் வீடியோ, மால்வேருக்கு எதிரான புரோகிராம்கள், பிரவுசர் மற்றும் ப்ளக் இன், பிரபலமான டவுண்லோட் புரோகிராம்கள், மெசேஜ் மற்றும் சேட், பைல் பார்மட் மாற்றம், ஆபீஸ் மற்று நியூஸ், டெவலப்பர் டூல்ஸ், பயர்வால் மற்றும் பாதுகாப்பு,சிஸ்டம் அமைத்தல்,கம்ப்ரஸ்ஸன் அண்ட் பேக் அப், நெட்வொர்க்கிங், சிடி மற்றும் டிவிடி டூல்ஸ், டெஸ்க்டாப், போட்டோ மற்றும் இமேஜஸ், ட்ரைவர்ஸ் என இப்படி பல பிரிவுகளில் இவை கிடைக்கின்றன. நமக்குத் தேவைப்படும் பிரிவில் கிளிக் செய்தால், அந்தப் பிரிவில் உள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியலும் கிடைக்கின்றன.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.
என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com
நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.
என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com
------------------- நன்றி -------------------
No comments:
Post a Comment