மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாக அனைத்து வசதிகளையும் கொண்டதாக ஓப்பன் ஆபீஸ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேஷன் வகையை சேர்ந்ததனால், பலரும் புதிய வசதிகளை இதற்கு அளிக்கப் பாடுபட்டு வருகின்றனர். அவற்றில் சில புதிய வசதிகளை இங்கு காண்போம்.
1. ரிப்பன் ஸ்டைல் இன்டர்பேஸ்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஆபீஸ் தொகுப்பில் வழக்கமான தன் பட்டியல் வகை இன்டர்பேஸை விட்டு விட்டு, ரிப்பன் இன்டர்பேஸ் வகைக்குத் தாவிய போது, பலரும் முகம் சுழித்தனர். இது எல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுப்பா என்று முணுமுணுத்தவர்களும் உண்டு. சில நாட்கள் ரிப்பனைக் கஷ்டத்துடன் கிளிக்கியவர்கள், காலப்போக்கில், வழக்கம் போல, அதனையே எளிதானதும், விரைவானதுமானது என்ற முடிவிற்கு வந்தனர். இதனைப் பின்பற்றி ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில் ரிப்பன் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இது ரிப்பன் ஸ்டைல் இன்டர்பேஸ் 3.3 என அழைக்கப்படுகிறது.
2.ரைட் கிளிக்கில் தெசாரஸ்: நீங்களும் என்னைப் போல் எழுத்தாளர் என்றால், உங்களுக்கு டாகுமெண்ட் ஒன்றை உருவாக்குகையில் அதற்கான டூல்களெல்லாம், எளிதாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். ஓப்பன் ஆபீஸில் இப்போது காண்டெக்ஸ்ட் மெனு தரப்பட்டு, தெசாரஸ் போன்ற சமாச்சாரங்கள், எந்த விதமான அலைச்சல் இன்றி கிடைக்கின்றன.
3. பைண்ட் பார்: பெரிய டாகுமெண்ட்களில் நாம் தேடி அறிய வேண்டியது நிறைய உள்ளன. இதனால் ஓப்பன் ஆபிஸ் தொகுப்பில் இப்போது தேடி அறிவதற்காக ஒரு குறிப்பிட்ட டூல் பார் தரப்பட்டுள்ளது.
4. கால்க் ஷீட் டேப்கள் தனி வண்ணத்தில்: இது பலருக்கு மிகச் சாதாரண விஷயமாக இருக்கலாம். கால்க் ஸ்ப்ரெட் ஷீட்டில் இவற்றை அமல்படுத்திப் பார்க்கையில் அதன் திறன் தெரிகிறது.
மேலே விளக்கமாகத் தரப்பட்டவையுடன், கம்ப்யூட்டர் இணைய வடிவமைப்பில் ஈடுபடுபவர்களுக்கான விஷயங்களும் தரப்பட்டுள்ளன. டிஸ்ட்ரிபியூடட் எஸ்.சி.எம்., எஸ்.வி.ஜி. இம்போர்ட்டர், பிளாஷ் அனிமேஷன் போல செயல்பாட்டிற்கான தொழில் நுட்பம், நிறைய எழுத்துவகைகள்,டெம்ப்ளேட்கள், கிளிப் ஆர்ட் பைல்கள் மற்றும் பல பில்டர்கள், ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில் இப்போது கிடைக்கின்றன.
தொடர்ந்து பலரும் ஓப்பன் ஆபீஸ் தொகுப்பிற்கான, மேம்படுத்தும் தொழில் நுட்ப அடிப்படையில் சாதனங்களை அமைத்து வழங்கி வருகின்றனர். நிச்சயமாய் ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு, எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினைப் போல மக்களிடம் வரவேற்பைப் பெறும்.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.
என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com
நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.
என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com
------------------- நன்றி -------------------
No comments:
Post a Comment