DNS (Domain Name System): நாம் சொற்களில் தரும் இணைய தள முகவரியினை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் அதன் எண் முகவரியினைத் தரும் சிஸ்டம். ஒவ்வொரு இன்டர்நெட் சேவை நிறுவனமும் இப்படி ஒரு சிஸ்டத்துடன் தொடர்பு கொண்ட பின்பே நாம் விரும்பும் இணைய தளத்தைப் பெற்றுத் தருகிறது.
Netiquette: இணையத்தில் உலவுகையில் மற்றவர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்கையில் ஆன் லைனில் தொடர்பு கொள்கையில் நாம் கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளை இந்த சொல் குறிக்கிறது.
Quicktime : ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மல்ட்டி மீடியா புரோகிராம். இதன் மூலம் மல்ட்டி மீடியா (ஆடியோ மற்றும் வீடியோ) உருவாக்கவும், இயக்கிப் பார்க்கவும் எடிட் செய்திடவும் முடியும். இன்டர்நெட்டில் இந்த புரோகிராம் மட்டுமே இயக்கிப் பார்க்க முடியும் பைல்களை நீங்கள் கிளிக் செய்தால் இந்த ஆட்– ஆன் புரோகிராம் வேண்டும் என்றும் அதன் தளத்திலிருந்து இறக்கிப் பதியவா என்றும் உங்கள் பிரவுசர் கேட்கும். இந்த புரோகிராமினை ஏற்கனவே பதிந்து வைத்திருந்து அதற்குப் பின் புதியதாக அது மேம்படுத்தப்பட்டு இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராமினை மேம்படுத்தவா என்றும் உங்கள் பிரவுசரில் செய்தி கிடைக்கும்.
Traceroute: இணையத் தொடர்பில் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் உள்ள தொடர்புப் பாதையைக் கண்டுபிடிக்கும் கட்டளைச் சொல். இந்த கட்டளைச் சொல்லை எம்.எஸ். டாஸ் பிராம்ப்டில் கொடுத்து ஏதேனும் ஒரு இணைய தளத்தின் முகவரியைக் கொடுத்துப் பாருங்கள். அப்போது உங்கள் கம்ப்யூட்டர் இணைய தொடர்பில் இருக்க வேண்டும். அந்த முகவரி குறிப்பிடும் இணைய தளம் உள்ள சர்வரை எந்த வழியாக உங்கள் கம்ப்யூட்டர் சென்றடைகிறது என்ற தகவல் கிடைக்கும்.
எச்.டி.எம்.எல். (HTML) டாக்குமெண்ட்: எச்.டி.எம்.எல். (HTML) என்பதனை விரித்தால் Hyper Text Markup Language என வரும். தொழில் நுட்ப ரீதியில் சொல்வதென்றால் இது வெப் பக்கங்களுக்கான புரோகிராமிங் மொழி என்று கூட கூறலாம். (உண்மையில் இது புரோகிராமிங் மொழி அல்ல.) சுருக்கமாகச் சொல்வதென்றால் இது ஓர் வெப் பேஜ் என்று சொல்லப்படும் இணைய தளம் ஆகும். வெப்பேஜ் என்பது இன்னொரு வகையான டாகுமெண்ட் . இந்த டாகுமெண்ட் ஒரு குறிப்பிட்ட வகையில் உங்கள் வெப் பிரவுசர் படித்து உணரும் படி எழுதப்பட்டிருக்கும்.
பி.ஓ.பி.3 (P.O.P.3) – போஸ்ட் ஆபீஸ் புரோடோகால் – (Post Office Protocol) இணைய இணைப்பில் இமெயில்களை நம் கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பவும், நமக்கு வந்துள்ள இமெயில்களை கம்ப்யூட்டருக்கே பெற்று கையாளவும் அமைக்கப்பட்ட ஒரு வழிமுறை.
சில பிழைச் செய்திகள்
400 Bad Request: நீங்கள் டைப் செய்த இணைய தள முகவரி தவறாக டைப் செய்யப்பட்டிருக்கலாம். அதனால் உங்கள் இணைய சர்வர் நீங்கள் எந்த தளத்தைத் தேடுகிறீர்கள் என அறிந்து கொள்ள முடியாமல் திணறுகிறது. அப்போது இந்த செய்தி கிடைக்கும். ஒரு வேளை இணைய தள முகவரியை டைப் செய்திடுகையில் பெரிய எழுத்து சிறிய எழுத்துக்களைக் கலந்து கூட அடித்திருக்கலாம். கவனத்துடன் அதனை மீண்டும் நீங்கள் கவனித்துத் திருத்திக் கொள்ளலாம்.
401 Unauthorized Request : நீங்கள் அனுமதிக்கப்பட முடியாத இணைய தளத்தை நீங்கள் பெற முயன்றால் இந்த பிழைச் செய்தி கிடைக்கும். இந்த தளத்தைப் பெற்று தகவல்கள் பெற ஒரு வேளை உங்களுக்கு ஒரு பாஸ்வேர்ட் தேவைப்படலாம். அல்லது உங்கள் சர்வரே இத்தகைய தளங்கள் உங்களுக்குக் கிடைக்காத வகையில் சில வரையறைகளை வகுத்திருக்கலாம். அதன் காரணமாகவும் இந்த செய்தி கிடைக்கும். சரி என்ன செய்யலாம்? எனக் கேட்கிறீர்களா? இந்த தளத்தை அணுகும் முயற்சியைக் கைவிட வேண்டியதுதான்.
403 Forbidden: இந்த செய்தி வந்தாலும் அந்த இணைய தளத்தைக் கைவிடும் முயற்சியைக் கைவிட வேண்டியதுதான். இந்த இணைய தளத்தைப் பார்க்கும் அனுமதி உங்களுக்குக் கிடையாது என்று இதற்குப் பொருள்.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.
என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com
நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.
என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
No comments:
Post a Comment