இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் பணி 2017! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, June 6, 2017

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் பணி 2017!

தாமிரம் தயாரிப்பதில் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனம்தான் இந்துஸ்தான் காப்பர் நிறுவனம். இந்த நிறுவனத்தின் குஜராத் காப்பர் புராஜக்டில் தற்சமயம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ டிரெய்னிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம் :
ஐ.டி.ஐ., டிரெய்னி பிரிவில் பிட்டரில் 4, எலக்ட்ரீசியனில் 5, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 2, வெல்டரில் 3, பிளம்பரில் 1ம் காலியிடங்கள் உள்ளன. டிப்ளமோ டிரெய்னி பிரிவில் மெட்டலர்ஜியில் 5ம், கெமிக்கலில் 2, மெக்கானிக்கலில் 4, எலக்ட்ரிகலில் 4ம் காலியிடங்கள் உள்ளன.

வயது : இந்துஸ்தான் காப்பரின் மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்த வயது மார்ச் 2017 அடிப்படையிலானது.

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ., டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய பிரிவில் என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் : ரூ.805/-ஐ இந்தப் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பப் படிவத்தை முழுமையாக நிரப்பி உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Senior Manager (HR),
Hindustan Copper Ltd.,
Gujarat Copper Project,
GIDC Industrial Estate, Jhagadia,
District Bharuch, Gujarat 393110.

கடைசி நாள் : 11.06.2017


விபரங்களுக்கு : http://www.hindustancopper.com/PDF/GCP%20Vacancy%20Notification-ITI%20and%20Diploma%20Trainees%202017.pdf

--------------------------------------நன்றி----------------------------------------

No comments:

Post a Comment