
நீங்கள் டவுண்லோட் செய்த அல்லது உருவாக்கிய படங்களைச் சிறப்பாக வேறு நீங்கள் விருப்பப்படும் வடிவத்தில் அல்லது கவர்ந்திழுக்கும் வகையில் மாற்ற வேண்டுமா? அல்லது கூடுதலாக மெருகூட்ட வேண்டுமா? படங்களைப் புதிய கோணத்தில் அமைத்து உங்கள் இணைய தளங்களில் பதிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? இதற்கென இணையதளம் ஒன்றில் ஒரு டூல் தரப்பட்டுள்ளது. இதன் பெயர் Image Embellisher . இதனை எப்படிச் செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.
1. முதலில் நீங்கள் மாற்றம் செய்திட விரும்பும் இமேஜை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
2. பின் Image Embellisher இருக்கும் தளம் செல்லவும். இதற்கு http://www.chami.com/htmlkit/services/imge/ என்ற முகவரியினை அமைத்து என்டர் தட்டவும்.
3. இந்த தளத்தில் பலவகையான வடிவங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.
4. பின் பிரவுஸ் பட்டன் அழுத்தி, நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் இமேஜைத் தேர்ந்தெடுத்து Open கிளிக் செய்திடவும்.
5. சிறிது நேரம் கழித்து நீங்கள் அனுப்பிய படம், தேர்ந்தெடுத்த வடிவில், சிறிய அளவில் கிடைக்கும். இது உங்களுக்குப் பிடித்திருந்தால், டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
இதே போல வேறு சில வசதிகளையும் இந்த டூல் மூலம் மேற்கொள்ளலாம். உங்களுக்குப் பிடித்த படம் ஒன்றை, இணையத்தில் பதிக்க விரும்பு கிறீர்கள். ஆனால் மற்றவர்கள் அதனை டவுண்லோட் செய்திடக்கூடாது என விரும்புகிறீர்கள். Image Embellisher அந்த இமேஜ் எப்படித் தோற்றம் அளிக்கும் என ஒரு இமேஜைக் காட்டும். அதனை இணையத்தில் பதிக்கலாம்.
இணையம் மூலம் படங்களை விற்பனை செய்பவர்களுக்கு இது மிகவும் பயன்படும். இந்த டூலை ஆன் லைனில் வைத்துப் பயன்படுத்துவதால், எந்த புரோகிராமினையும் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை.
------------------- நன்றி -------------------
No comments:
Post a Comment