கூடுதல் வசதிகள் தரும் இணையதளம் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, September 13, 2010

கூடுதல் வசதிகள் தரும் இணையதளம்


இணையப் பயன்பாடு மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களுக்கான கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்களைத் தருவதற்காகவே ஓர் தளம் இணையத்தில் இயங்குகிறது.Lab Pixies என்ற பெயரில் உள்ள இந்த தளத்தில், பேஸ்புக், மை ஸ்பேஸ், ஹை 5, ஆர்குட், ஆண்ட்ராய்ட், ஐ போன், ஐ கூகுள் என்பவற்றுக்கான கூடுதல் வசதி புரோகிராம் களையும் இந்த தளம் கொண்டுள்ளது. கேம்ஸ், செய்யவேண்டிய பணிகள் கொண்ட பட்டியல், காலண்டர், கடிகாரம் என வழக்கமான வசதிகளைத் தரும் புரோகிராம்களும் உள்ளன. இந்த தளத்தில் உள்ள என்பதில் கிளிக் செய்தால் இவை அனைத்தும் கொண்ட பட்டியல் வகைப்படுத்தப்பட்டு கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, பேஸ்புக் தளத்தில் கூடுதல் வசதிகளைத் தரும் புரோகிராம்கள் பெற வேண்டுமென்றால் Facebook என்பதில் கிளிக் செய்தால் போதும். இங்கு கிடைக்கும் சில லிங்க்குகளை கிளிக் செய்தால், அவை உங்களை யு–ட்யூப் தளத்திற்கு எடுத்துச் சென்று, சில அப்ளிகேஷன்களை எப்படி இயக்குவதென்ற வீடியோக்களைக் காட்டும்.

இந்த தளத்தில் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும் சின்னஞ்சிறு வசதிகளைத் தருவதாகவே உள்ளன. இவை பற்றி பெரிய அளவில் எதுவும் கூற முடியாதென்றாலும் நாம் கொண்டுள்ள சிறிய அளவிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றன. சிறிய அளவிலான எரிச்சல்களைப் போக்குகின்றன. நாம் கம்ப்யூட்டரைத் திறந்து வீடியோக்கள், இமெயில், செய்திகள், சீதோஷ்ண நிலை தகவல்கள், கேம்ஸ் மற்றும் பல தகவல்களைத் தேடி அறிவதை நம் தினப்படி வேலைகளாக வைத்துள்ளோம். இவற்றை அறிய, அவற்றிற்கான ஐகான் அல்லது இலச்சினைகளைத் தேடி, கிளிக் செய்து, பின் மெனுவைத் தேர்ந்தெடுத்து எனப் பல கிளிக் செயல்களுக்குப் பின்னரே அறிய முடிகிறது. இந்த சிறிய புரோகிராம்கள் மூலம் ஒரே கிளிக்கில் இவற்றை அறிய முடிகிறது. 2005 ஆம் ஆண்டில் கூகுள் தளத்தில் கூடுதல் வசதிகளுக்காக இந்த தளம் ஐ கூகுள் (iGoogle) என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் உருவாக்கித் தரப்படுகின்றன.

இந்த தளம் குறித்த சிறப்பு செய்தி என்னவென்றால், இதனை அண்மையில் கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கி தனதாக்கிக் கொண்டது. எனவே நமக்குக் கூடுதல் வசதி அளிக்க, இனி அதிக புரோகிராம்களை இந்த தளத்தில் எதிர்பார்க்கலாம்.

இந்த தளத்தின் முகவரி http://www.labpixies.com/


------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?



No comments:

Post a Comment