வீடியோ பைல் பார்மட் மாற்றிட - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, May 2, 2010

வீடியோ பைல் பார்மட் மாற்றிட


வீடியோ பைல்களை நாம் நம்முடைய பல நிகழ்வுகளில் அமைக்கிறோம். இமெயில்களில் கூட வீடியோ காட்சிகளைப் பதிந்து அனுப்புகின்றனர். வீடியோ காட்சிகளின் பைல்கள் பல்வேறு பார்மட்களில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் சில இணைய தளங்களில், அல்லது கம்ப்யூட்டர் பைல்களில், கம்ப்யூட்டர் செட் அப்பில் சில வீடியோ பார்மட்களை மட்டுமே இயக்க முடியும். எனவே அடிக்கடி வீடியோ பைல்களின் பார்மட்டினை நாம் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம். இந்த வீடியோ பார்மட் மாற்றத்திற்கு, இணையத்தில் பல புரோகிராம்களைக் காண நேர்ந்தாலும், அண்மையில் பார்த்த ஒரு புரோகிராம் மிகச் சிறப்பானதாக, அனைத்து பார்மட்டிற்கான வசதிகளைக் கொண்டதாக உள்ளது. AVI, FLV, MOV, MP4, MPG, M2TS, MTS, RM, RMVB, QT, மற்றும் WMV ஆகிய பார்மட்களைக் கொண்ட வீடியோக்களை தேவைப்படும் இன்னொரு பார்மட்டிற்கு மாற்றிக் கொடுக்கிறது. இதன் பெயர் Any Video Converter.

இதன் இணையதள முகவரி http://www.any-video-converter.com/

பார்மட் மாற்றம் மட்டுமின்றி, ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ பைல்களிலிருந்து குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் கட் செய்து இணைக்க உதவுகிறது.

யு–ட்யூப் வீடியோக்களைக் கையாள்கையில் இந்த புரோகிராம் அதிக வசதிகளைத் தருகிறது. யு–ட்யூப் வீடியோக்களை ஏதேனும் புரோகிராம் மூலம் டவுண்லோட் செய்திடுகையில், அது FLV அல்லது MP4 பார்மட்களில் தரப்படுகிறது. ஆனால் இவற்றை விண்டோஸ் மீடியா பிளேயரால் இயக்க முடிவதில்லை. இந்த எனி வீடியோ கன்வெர்டர் புரோகிராம் மூலம் இந்த சிக்கலுக்குத் தீர்வு காணலாம். முதலில் யு–ட்யூப் வீடியோ தளத்திற்குச் செல்லுங்கள். பின் உங்களுக்குப் பிடித்த வீடியோவினைக் கிளிக் செய்து அந்த தளத்திற்குச் செல்லவும். அங்கே கிடைக்கும் யு.ஆர்.எல். முகவரியைக் காப்பி செய்திடவும். பின் எனி வீடியோ கன்வர்டர் புரோகிராமினை இயக்கி, அதில் காணப்படும் யு–ட்யூப் ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். அங்கு காப்பி செய்த யு.ஆர்.எல். முகவரியினை பேஸ்ட் செய்திட வேண்டும். மேலாக வலது புறம் உள்ள கீழ் விரி மெனுவினை இயக்கி, அதில் வின்டோஸ் மீடியா பிளேயரின் முகப்பினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். யு.ஆர்.எல். பட்டியலிட்ட பின், 'Convert' பட்டனை அழுத்தவும். உடனே அந்த வீடியோ பைல் டவுண்லோட் ஆகிறது. இறுதியில் விண்டோஸ் மீடியா பிளேயருக்கான பார்மட்டிலும், ஒரிஜினல் எம்பி4 பார்மட்டிலும் இந்த வீடியோ பைல் டவுண்லோட் ஆகிறது. இந்த புரோகிராமின் வீடியோ பிரிவியூ ஏரியாவினைப் பயன்படுத்தி, ஸ்நாப் ஷாட் எடுக்க முடிகிறது. வீடியோ பிளேபேக் செய்து, திரையில் காட்டப்படும் ஸ்நாப் ஷாட் என்ற பட்டனைக் கிளிக் செய்தால், காட்சி படமாகக் கிடைக்கிறது.

இது ஒரு இலவசப் புரோகிராம். இதனைத் தயாரித்தவர் சில மாதங்கள் கழித்து, நீங்கள் ஏன் இதனை வாங்கிக் கொள்ளக் கூடாது என்ற செய்தியை பாப் அப் விண்டோவாகக் கிடைக்கும் வகையில் அமைத்துள்ளார். ஆனால் விலை கொடுத்து வாங்கிடாமல், தொடர்ந்து இலவச புரோகிராமாகவே பயன்படுத்தலாம்.

------------------- நன்றி -------------------


1 comment: