நாம் எடுக்கும் வீடியோ படங்களை இணையத்தில் பதித்து வைத்து, நாம் அனுமதிப் பவர்களைப் பார்ப்பதற்கு வழி தருகிறது யு–ட்யூப் வீடியோ தளம். கூகுள் நிறுவனம் அமைத்துள்ள இந்த தளத்தில் எந்தப் பொருள் குறித்தும் வீடியோ கிளிப்களைக் காணலாம். இவ்வாறு காணும் போது, அவற்றை நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, விரும்பும்போதெல்லாம் காண நாம் ஆசைப்படுவோம். இந்த வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட, இணையத்தில் பல புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.
ஆனால்,எந்த புரோகிராமின் துணை இல்லாமல், ஆன் லைனிலேயே இந்த வீடியோ கிளிப்களை டவுண்லோட் செய்திட முடியுமா என்று நமக்கு அடிக்கடி தோணும் ( தேவைப்படும் ) . இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், இணையத்தில் பல தளங்கள் இயங்குவது தெரிந்தது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. Keepvid (கீப்விட்): மிக எளிதாக டவுண்லோட் செய்திட வசதிகள் கொண்ட தளம். தள முகவரி www.keepvid.com. நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும் யு–ட்யூப் வீடியோ உள்ள தள முகவரியினை முதலில் காப்பி செய்து கொள்ளவும். பின் கீப்விட் இணைய தளம் செல்லவும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள, அட்ரஸ் பார் போன்ற நீண்ட கட்டத்தில், யு–ட்யூப் வீடியோவிற்கான காப்பி செய்த தள முகவரியினை பேஸ்ட் செய்திடவும். பின்னர், கீழாக, சாதாரண தன்மை கொண்ட வீடியோ பைல், சிறப்பான தன்மை கொண்ட வீடியோ பைல் எனப் பல பார்மட்டுகள் கொடுக்கப்பட்டு, நம் விருப்பம் கேட்கப்படும். நம் விருப்பத்தினைத் தேர்ந்தெடுத்தவுடன், பைல் நாம் குறிப்பிடும் இடத்தில் சேவ் செய்யப்படும். இந்த தளத்தில், யு–ட்யூப் தள படங்கள் மட்டுமின்றி, மை ஸ்பேஸ் மற்றும் டெய்லிமோஷன் தள வீடியோக்களையும் தரவிறக்கம் செய்திடலாம்.
2. Zamzar (ஸம்ஸார்): யு–ட்யூப் வீடியோக்களை டவுண்லோட் செய்திடத் தரும் வசதியுடன், அதனைத் தேவையான பார்மட்டில் மாற்றிப் பதியும் வசதியும் இங்கு தரப்படுகிறது. இது குறிப்பிட்ட பார்மட்டில் உள்ள வீடியோக்களை மட்டுமே இயக்கும் வசதி கொண்டவர்களுக்கு மிகவும் உதவியான தளமாகும். முதலில் டவுண்லோட் செய்து, பின்னர் அவரவர் கம்ப்யூட்டர்களில் பார்மட்டை மாற்றும் வேலை இந்த தளம் மூலம் மிச்சமாகிறது. இந்த தள முகவரி www.zamzar.com.
3. KCoolonline (கே கூல் ஆன்லைன்): யு–ட்யூப் தளம் உட்பட, 231 வீடியோ தளங்களை இந்த தளம் ஏற்றுக் கொண்டு, வீடியோ பைல்களை இறக்கிட உதவி செய்கிறது. முன்பு கூறியது போலவே, குறிப்பிட்ட வீடியோ, இணையத்தில் உள்ள தள முகவரியினைப் பதிந்து இயக்க வேண்டும். பல்வேறு இணைய தளங்களில் உள்ளவற்றை டவுண்லோட் செய்திட விருப்பப்படு பவர்களுக்கு இது உகந்த தளமாகும். இந்த தள முகவரி: www.kcoolonline.com.
4. Video Downloader (வீடியோ டவுண்லோடர்): யு–ட்யூப், டெய்லி மோஷன் மற்றும் மை ஸ்பேஸ் போன்ற தளங்களிலிருந்து வீடியோக்களை டவுண்லோட் செய்திட உதவும் தளம். இங்கு வீடியோவின் flv ஒரிஜினல் பார்மட்டிலும் டவுண்லோட் செய்திடலாம். இந்த தளத்தின் முகவரி: http://javimoya.com/blog/youtube_en.php.
5. SaveVid (சேவ்விட்): இந்த தளம் மூலமாக வீடியோ பைல்களை flv மற்றும் எம்பி 4 பார்மட்டில் டவுண்லோட் செய்திடலாம். இந்த தளத்தில் ஒரு சிறப்பாக, டவுண்லோட் செய்யக் கூடிய பிரபலமான வீடியோ பைல்களும் காட்டப்படும். அவற்றுக்கான நேரடியான தள முகவரிகளும் கிடைக்கும். இந்த தளத்தின் முகவரி: http://www.savevid.com/
6. Vidgrab (விட்கிராப்): இந்த தளத்தில் வெப் பார்ம் ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம், யு–ட்யூப் வீடியோக்களை இதில் ஒட்டி வைக்கலாம். பின்னர், இதிலிருந்து டவுண்லோட் செய்திடலாம். இதன் தள முகவரி www.vidgrab.com.
7.Vixy (விக்ஸி): இந்த தளத்தில் ஒரு வீடியோ கன்வர்டர் தரப்படுகிறது. இந்த தளத்திலிருந்து யு–ட்யூப் வீடியோக்களை அப்படியே அதன் பார்மட்டில் டவுண்லோட் செய்திட முடியாது. avi, 3gp, mov அல்லது mp4 ஆகிய பார்மட்டுகளில் ஒன்றில் மாற்றிய பின்னரே டவுண்லோட் செய்திடலாம். இதன் தள முகவரி: www.vixy.net.
8.KeepTube (கீப் ட்யூப்): யு–ட்யூப் வீடியோக் களை முன் பார்வையிட்டுப் பின்னர் பிடித்திருந்தால், இந்த தளம் மூலம் டவுண்லோட் செய்திடலாம். வீடியோ எந்த தரத்தில் இருக்க வேண்டும் என ஆப்ஷன் தரப்படுகிறது. இந்த தளத்தில் யு–ட்யூப் வீடியோ இருக்கும் தளத்தின் முகவரியைத் தருகையில், அதன் பெயருக்கு முன் Keep என்று இணைத்து டவுண்லோட் செய்திடலாம். தள முகவரி www.keeptube.com.
9.KissYoutube (கிஸ் யு ட்யூப்): மேலே சொல்லப்பட்ட கீப் ட்யூப் போல இதுவும் செயல்படுகிறது. இதில் தளப் பெயருக்கு முன்னால் Kiss என்ற சொல்லை இணைத்துப் பின் டவுண்லோட் செய்திடலாம். தள முகவரி www.kissyoutube.com.
10. Video Getting (வீடியோ கெட்டிங்): இந்த தளத்திலும் வீடியோ பைல் டவுண்லோட் செய்வதும், பார்மட் மாற்றுவதும் இணைந்து கிடைக்கிறது. இதிலும் யு–ட்யூப் வீடியோவினை ஒட்டி, பின்னர் எட்டு வெவ்வேறு வகையான பார்மட்டில் டவுண்லோட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது.
இந்த தளத்தின் முகவரி: http://www.videogetting.com/download-youtube.php.
Source : http://www.dinamalar.com/
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
No comments:
Post a Comment