உங்களுக்குத் தெரியுமா ? விலைக்கு வாங்கும் சாப்ட்வேரே எங்கள் விருப்பம் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, December 15, 2010

உங்களுக்குத் தெரியுமா ? விலைக்கு வாங்கும் சாப்ட்வேரே எங்கள் விருப்பம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் 20 நாடுகளில் 38,000 ஆண் மற்றும் பெண்களிடையே எடுத்த ஆய்வு ஒன்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. போலியான, நகலெடுத்த சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துக்களை மக்களில் பெரும்பகுதியினர் அறிந்து வைத்துள்ளனர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. தகவல் களவு போதல் மற்றும் பெர்சனல் தகவல்கள் மற்றவர்களுக்குச் செல்லுதல் ஆகிய விளைவுகள் இதனால் ஏற்படும் என்று அஞ்சுகின்றனர். குறிப்பாக இந்தியர்கள் திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்துவது குறித்து அதிகம் கவலை கொண்டு ள்ளனர் என்றும் தெரிவித் துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏறத்தாழ 6,000 இந்தியர்கள், மைக்ரோ சாப்ட் நிறுவனத்திடம், தாங்கள் நகல் எடுக்கப் பட்ட சாப்ட்வேர் தொகுப்பு களைப் பெற்று ஏமாந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் அறிவித்துள்ளனர். இவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனமும், அரசும் இத்தகைய சாப்ட்வேர் தொகுப்புகளை விற்று ஏமாற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இந்தியர்களில் 75% பேர், கட்டணம் செலுத்திப் பெறும் நல்ல சாப்ட்வேர் தொகுப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இவை மட்டுமே பாதுகாப்பான கம்ப்யூட்டர் அனுபவத்தினைத் தரும் என்று உறுதியாக இவர்கள் நம்புகின்றனர். விலை 14% அதிகமாக இருந்தாலும், நிறுவனங்கள் தருகின்ற முறையான சாப்ட்வேர் தொகுப்பினையே வாங்கிட 86% இந்தியர் விரும்புகின்றனர். 36% பேர், போலி நகல் சாப்ட்வேர் தொகுப்பினால், இந்திய பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி, பயன்படுத்துபவருக்கும் கேடு எனக் கூறி உள்ளனர். 87% பேர் தாங்கள் வாங்கிய சாப்ட்வேர் தொகுப்புகள், உண்மை யானவையா என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நாடி இருக்கின்றனர். தாங்கள் வாங்கிய சாப்ட்வேர் தொகுப்புடன் தரப்பட்ட ப்ராடக்ட் கீயினையே இவர்கள் பயன்படுத்த விரும்புகின்றனர். தங்களிடம் பதிந்து கொண்ட நிறுவனங்கள் மூலமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தொடர்ந்து மக்களிடையே உண்மையான சாப்ட்வேர் தொகுப்பு வாங்கிப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தும் எனவும் மைக்ரோசாப்ட் அலுவலர் வர்கீஸ் தெரிவித்தார்.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment