வருகிறது பேஸ்புக் இமெயில் சேவை - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, December 15, 2010

வருகிறது பேஸ்புக் இமெயில் சேவை






சென்ற வாரம் பேஸ்புக் இணையதளம், தன் 50 கோடி நேயர்களுக்காக, இமெயில் சேவையினைத் தொடங்குவதாக அறிவித்தது, இணைய உலகில் பெரிய செய்தியாக வலம் வருகிறது. இன்னும் இரண்டொரு மாதங்களில் இது கிடைக்கும் என இதன் தலைமை நிர்வாகி ஸக்கர் பெர்க் அறிவித்துள்ளார்.

இதில் இமெயில் என்பது பேஸ்புக் மெசேஜஸ் ( Facebook Messages ) என்பதின் ஒரு பகுதியாகத் தான் இருக்கும். இந்த சிஸ்டத்தில் இமெயில், பேஸ்புக் மெசேஜ், எஸ்.எம்.எஸ். மற்றும் சேட் எனப்படும் அரட்டை வசதி ஆகிய அனைத்தும் கொண்டதாக அமையும். இவற்றின் மூலம் தங்களுக்குப் பிடித்த வகையில், தகவல்களையும் கோப்புகளையும் வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ளலாம். இமெயில் கணக்கு வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு, அவர்கள் பயனாளர் பெயர் இணைந்த @Facebook.com என்ற இமெயில் முகவரி தரப்படும். இதனைப் பயன்படுத்தி, பேஸ்புக் மட்டுமின்றி வேறு எந்த இமெயில் நெட்வொர்க் அக்கவுண்ட்டிற்கும், மெயில் அனுப்பிப் பெறலாம். விரைவில் ஐ-போனிலும் இது அமல்படுத்தப்படும் என்றும், அதற்கென 15 தகவல் தொழில் நுட்ப பொறியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த இமெயில் பிரிவில் கீழ்க்காணும் வசதிகள் தரப்படும்.

1. இமெயில் மூலம் பேஸ்புக் மற்றும் வெளி நெட்வொர்க்குகளில் உள்ளோருடன் தொடர்பு மற்றும் தகவல், கோப்புகள் பரிமாற்றம்.




2. இருவருக்கு இடையே உள்ள அனைத்து தொடர்புகளும், ஒரே உரையாடலாக அமைக்கப்படும். இவை வெவ்வேறு தலைப்பில் இருந்தாலும், ஒரே உரையாடலாகவே கிடைக்கும்.

3. மற்ற இமெயில் தளங்களில் இல்லாத ஒரு வசதி இதில் தரப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. உங்கள் இமெயில்களில் அதிக முக்கியத்துவம் கொண்டவை அனைத்தும் தனியே முன்னுரிமை தொகுப்பாக வைக்கப்படும். இவற்றிற்கு சிறப்பு போல்டர்கள் தரப்படும். அதே போல முக்கியமானவர்கள் என நீங்கள் கருதும் ஒருவரின் மெயில்களும் பாதுகாக்கப்பட்டு தனியே போல்டரில் கிடைக்கும்.




பேஸ்புக் மெயில் வசதி, வரும் சில மாதங்களில் இன்விடேஷன் மூலம் தரப்படும். தற்போது நீங்கள் உங்களுக்கான இமெயில் முகவரியினை, முன்கூட்டியே பதிவு செய்து வைத்திட வசதி தரப்பட்டுள்ளது. பேஸ்புக் மெசேஜ் பக்கத்தில் இதற்கான அறிவிப்பினைக் காணலாம்.

இந்த வசதி, பேஸ்புக், கூகுள் நிறுவனத்தை நோக்கி எறியும் புதிய அம்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் ஒரே இரவில், அனைத்து ஜிமெயில் பயன்படுத்துபவர்களும், அதனை விட்டுவிட்டு பேஸ்புக் இமெயிலுக்கு மாறுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சில மாதங்களுக்குப் பின், இமெயில் சேவை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என அனைவரும் குறிப்பிடும் வகையில், எங்கள் சேவை இருக்கும் என பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கூகுள் தன் தேடும் வசதிகளுடன் தரும் பிற வசதிகள் அனைத்தையும், பேஸ்புக் தர முயற்சிக்கிறது. போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வது, உடனடி மெசேஜ் விண்டோ, ஸ்கைப் உடன் இணைந்து வீடியோ அழைப்பு அமைத்தல் ஆகியவையும் கிடைக்கின்றன. இப்படி இலவச சேவைகளை இந்த முன்னணி நிறுவனங்கள் தருவது நமக்கு நல்லதுதானே. நம்ம காட்ல மழைதான் என்று இப்போதைக்குச் சொல்லிக் கொள்ளலாம்.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment