அச்சுப் பொறிகளில் ஏற்படும் பிழைகளும் அதற்கான தீர்வுகளும் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, December 15, 2010

அச்சுப் பொறிகளில் ஏற்படும் பிழைகளும் அதற்கான தீர்வுகளும்


கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் ஏற்படும் பிரச்னைகளுக்குப் பல வகைகளில் தீர்வுகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால், அச்சுப் பொறிகளான பிரிண்டர்களின் வேலையில் தடங்கல் ஏற்படுகையில், நாம் சந்திக்கும் இடர்ப்பாடுகள் நம்மை சில வேளைகளில் அழவைக்கின்றன. எப்போது விரைவாக ஆவணங்களை அச்செடுத்து, அடுத்த வேலைக்குச் செல்லலாம் என்று திட்டமிடுகிறோமோ, அப்போது பார்த்து, பேப்பர் ஜாம், எர்ரர் மெசேஜ் எதுவும் காட்டாமல், அச்சிட மறுக்கும் நிலை, டோனர் சிதறிப் போய், அச்சுப் படிவம் பாதியாக அச்சிடும் நிலை என நம் பொறுமையை எல்லைவரை சென்று சீண்டிப் பார்க்கும் பல சூழ்நிலைகள் இந்த அச்சுப் பொறிகளால் ஏற்படுத்தப் படுகின்றன. இவற்றிற்கு என்ன காரணம்? என்ன காரணம் என்று பார்க்காமல், யார் காரணம் என்று பார்ப்போம்.

நாம் தான் காரணம். சற்றுக் கவனமாக இருந்தால், இவற்றை நாம் பொறுமையாகச் சமாளிக்கலாம். அந்த வழிகளை இங்கு காணலாம்.

1. பேப்பர் ஜாம்: இந்த ஜாம் இனிக்காத ஜாம். பேப்பரை நாம் அச்சுப் பொறிக்குள் செலுத்திய பின்னர், அச்சடித்து வெளியே வராமல், சிக்கிக் கொண்டு அப்படியே பிரிண்டரையும் நிறுத்திவிடும். சில வேளைகளில் கசங்கிய அச்சடிக்கப்பட்ட, மை உலராத காகிதம் வெளியே வரும். பல வேளைகளில் பாதி வெளி வந்த நிலையில் நின்றுவிடும். இதனை எப்படிச் சமாளிக்கலாம் என்று பார்க்கலாம்.




பிரிண்டரை நிறுத்துங்கள்: முதல் வேலையாக, பிரிண்டருக்கு வரும் மின்சாரத்தை நிறுத்துங்கள். உள்ளாக இருக்கும் சிக்கிய பேப்பரை எடுக்க வேண்டியுள்ளதால், மின்சாரம் உயிரோட்டத்துடன் இருக்கும். எந்த பகுதியிலாவது கைகளைக் கொண்டு சென்று, ஷாக் அல்லது சூடு பெறுவதைத் தடுக்க இது அவசியம். லேசர் பிரிண்டர் எனில், மின்சாரத்தை நிறுத்திய பின்னரும், சூடு குறையும் வரை, பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.
கதவுகளைத் திறக்கவும்: பேப்பர் செல்லும் வழி மற்றும் வெளியே வரும் வழிகளில் உள்ள அனைத்து கதவுகளையும் திறக்கவும். எவை என்று தெரியவில்லை எனில், அந்த பகுதியில் உள்ள ட்ரேயில் இருந்து தொடங்கி, ஒவ்வொன்றாக நீக்கவும். குறிப்பாக, எளிதில் எடுக்கும் வகையிலேயே பேனல்கள் செருகப்பட்டிருக்கும். எந்த ஸ்க்ரூவினையும் கழட்டாமல் இவற்றை நீக்கலாம்.

கவனமாகத் தாள் மற்றும் துகள்களை நீக்கவும்: சிக்கியிருக்கும் தாள் இப்போது தெரிய ஆரம்பிக்கும். மெதுவாக அதனை இழுத்துப் பார்க்கவும். வர மறுத்தால், ஓரங்களில் உள்ள சிறிய உருளைகளை, விரலால் ஏதேனும் ஒரு திசையில் உருட்டினால், தாள் வெளியேறும். முழுத்தாளையும் எடுப்பது அவசியம். ஏற்கனவே அவை கிழிந்து தாள்களின் துகள்கள் இருப்பின், அவற்றை, அவை எவ்வளவு சிறியதாக இருப்பினும் நீக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், இவை உள்ளே விடப்பட்டால், மேலும் பேப்பர் ஜாம் ஏற்பட வழி வகுக்கும். இந்தப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, ஒரே மாதிரியான பேப்பர்களையே பயன்படுத்தவும். இரு வேறு தன்மையுள்ள பேப்பர்களை, ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இந்த பிரச்னையை எளிதாக வரவழைக்கும். ட்ரேயில் சரியாக பேப்பரை வைத்து, அவை ஒவ்வொன்றாகச் செல்வதற்கான வகையில் அமைப்பதும், பிரச்னையைக் கொண்டு வராது.

2. பிரிண்ட் க்யூவில் தடை: எவ்வளவு அதி நவீன பிரிண்டராக இருந்தாலும், ஒரு நேரத்தில் ஒரு அச்சு வேலையை மட்டுமே, ஒரு பிரிண்டர் மேற்கொள்ளும். பிரிண்டருக்கு அடுத்தடுத்து பைல்களை அச்சடிக்க அனுப்பினால், அவை க்யூவில் வைக்கப்படும். எனவே ஒரு பைல் அச்சடிப்பில், பிரிண்டரில் கோளாறு ஏற்பட்டால், அனைத்தும் அப்படியே நின்றுவிடும். இது போன்ற தடை ஏற்படுகையில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில், பிரிண்ட் க்யூ பார்க்க வேண்டும். எந்த டாகுமெண்ட் அச்சில் பிரச்னை என்று பார்த்து, அதனை நீக்க வேண்டும்.




3.சிந்திய டோனர் அல்லது மை: சில வேளைகளில் உங்களின் பிரிண்டரில் உள்ள டோனர் கேட்ரிட்ஜ் அல்லது மை குப்பியில் இருந்து மை அல்லது டோனர் வெளியேறி, பிரிண்டருக்குள் சிதறியிருக் கலாம். இவை பெரும்பாலும் அச்சுக்கென அனுப்பப்பட்ட தாளிலேயே இருக்கலாம். இவற்றை நீக்குவதில் சில எச்சரிக்கைகளை மனதில் கொள்ள வேண்டும். சிதறிய மை, டோனரை உலர வைத்து நீக்கவும். சூடான அல்லது குளிர்ந்த நீரைச் சுத்தம் செய்திடப் பயன்படுத்தக் கூடாது. பொதுவான நீர் பயன்படுத்தவும். ஏதேனும் சுத்தப்படுத்தும் சொல்யூ சனைப் பயன்படுத்துவதாக இருந்தால், எச்சரிக்கை யுடன், சிறிய இடத்தில் பயன்படுத்திப் பார்த்து, கெடுதல் விளைவுகள் இல்லை எனில் பயன்படுத்தலாம். வேக்குவம் கிளீனரைப் பயன்படுத்தக் கூடாது. அதிலிருந்து அழுத்தத்தில் வெளியேறும் காற்று, டோனரை, மையை இழுத்து வெளியே விடும் வாய்ப்பு உண்டு.

எந்தக் காரணம் கொண்டும் டோனரை முகர்ந்து பார்க்கக் கூடாது. கைகளில் பட்டிருந்தால், கிருமி நீக்கும் சோப் கொண்டு சுத்தமாகக் கழுவுவது மிக மிக அவசியம். முறையான டோனர்களைப் பயன்படுத்தினால், சிதறும் நிலை உருவாகாது. விலை குறைவாக உள்ளது என்பதனால், ரீபில் டோனர்களைப் பயன்படுத்தக் கூடாது. அனைத்தும் முடிந்த பின்னர், சோதனை பைல் ஒன்றை உருவாக்கி, அச்சடித்துப் பார்த்த பின்னர், ஆவணங்களை அச்சடிக்கவும்.

4.மின்சாரம் நின்று போனால்: சில வேளைகளில், அச்செடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகையில், இடையே மின்சாரம் வருவது தடைப்படும். இந்த வேளையில் அச்சு வேலை நடந்து கொண்டிருந்தால், பேப்பர் சிக்கி இருக்கும். தாளை எளிதில் எடுக்க முடிந்தால் எடுக்கலாம். அல்லது மின்சாரம் வரும்வரை காத்திருந்து மீண்டும் இயக்கவும். சிக்கிய நிலையில் உள்ள தாள் தானே வரும் வாய்ப்புகள் அதிகம்.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment