ஒரு ஆர்வத்திற்காக, அல்லது யாருக்காவது உங்கள் பிரியத்தைக் காட்டுவதற்காக, ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தை எத்தனை முறை பார்த்தீர்கள் என்று நீங்களே அறிந்து கொள்ள ஆவலா! பயர்பாக்ஸ் பிரவுசரை நீங்கள் பயன்படுத்தினால், இதனைத் தெரிந்து கொள்ளலாம். வெப்சைட் சென்ற ஹிஸ்டரி பட்டியலை அழித்துவிட்டால், எப்படி தெரியும் என்ற வினா எழுகிறதா? ஆம், இறுதியாக இணைய தளம் சென்ற பதிவுத் தகவலை, வெப் ஹிஸ்டரியை, அழித்த பின் நீங்கள் எத்தனை முறை ஒரு குறிப்பிட்ட இணைய தளம் சென்றீர்கள் என்று தான் பார்க்க முடியும்.
இதற்கு, முதலில் குறிப்பிட்ட இணைய தளத்தினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கவும். Tools>Page Info என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Security ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இங்கு Privacy & History என்பதின் கீழ் see “Have I visited this website before today?” என்று இருப்பதனைக் காணலாம். இங்கு காட்டப்படும் எண், நீங்கள் எத்தனை முறை இந்த தளத்திற்கு, இறுதியாக வெப்சைட் ஹிஸ்டரி கிளியர் செய்த பின்னர் சென்றீர்கள் என்பதனைக் காட்டும்.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
No comments:
Post a Comment