ஆண்ட்ராய்ட் போன் வைரஸ் ஜாக்கிரதை ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, September 30, 2013

ஆண்ட்ராய்ட் போன் வைரஸ் ஜாக்கிரதை !

Virus Affects Android Phones

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தங்கள் மொபைல் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் பயன்படுத்துவோர், அதிக ஜாக்கிரதையுடன் இயங்க வேண்டும் என Computer Emergency Response TeamIndia (CeRTIn) கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய வெளியில், இந்த வைரஸ் மிகவும் செயல் துடிப்போடு காணப்படுகிறது. இது ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.2.2 (ஜெல்லிபீன்) முந்தையை ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்களைப் பாதிக்கிறது. இந்த வைரஸ், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது. இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் காணப்படும் சரியற்ற குறியீட்டு வழுவே ஆகும். இதனைப் பயன்படுத்தியே, இந்த வைரஸ் பரவுகிறது. இவை இந்த சாதனங்களில், பல அப்ளிகேஷன்களில், கெடுதல் விளைவிக்கும் குறியீடுகளைப் புகுத்துகின்றன.

இதனால், அந்த அப்ளிகேஷன்களின், ஒரிஜினல் குறியீடுகள் பாதிக்கப்படுவதில்லை. பயனாளர், தான் பயன்படுத்துவது, ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயன்படுத்துகையில், கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகளின் அடிப்படையில் தகவல்கள் திருடப்படுகின்றன. இமெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.

இந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள பைல்களின் அதே பெயரில், புதிய பைல்களைப் பதிக்கிறது. இதனால், எந்த சோதனைக்கும், முதலில் உள்ள ஒரிஜினல் பைல் உள்ளாகிறது. ஆனால், பின்னர் செயல்பாட்டில், திருட்டு பைல் இயங்கி, சேதத்தினை விளைவிக்கிறது.
அது மட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது.

இதற்கு எதிராக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சைபர் கிரைம் பிரிவு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால், அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும். நம்பிக்கை யற்ற இணைய தளங்களுக்கான லிங்க்கினை, கிளிக் செய்திட வேண்டாம். மொபைல் ஆண்ட்டி வைரஸ் ஒன்றின் மூலம், போன் முழுவதனையும் சோதனை செய்திடவும். நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து எதனையும் டவுண்லோட் செய்திட வேண்டாம். முழுமையாக நம்பிக்கையான தளங்கள் என்று தெரிந்த பின்னரே, எந்த புரோகிராமினையும் டவுண்ட்லோட் செய்து பயன்படுத்துங்கள். கூகுள் பிளே ஸ்டோர் போன்ற தளங்கள் தரும் அப்ளிகேஷன்களையே பயன்படுத்தவும்.


------------------- நன்றி -------------------


இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment