வேகமாக இணைய உலா மேற்கொள்ள !!! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, July 3, 2014

வேகமாக இணைய உலா மேற்கொள்ள !!!






மவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி, விரல்கள் இயக்கத்தினைக் குறைக்கலாம். இதன் மூலம் இணைய உலாவினையும் வேகமாக மேற்கொள்ள முடியும். அதற்கான வழிகள் சிலவற்றை இங்கு காணலாம்.

ஷார்ட்கட் வழிகளை உருவாக்கவும்: நாம் அடிக்கடி பார்க்க விரும்பும் இணைய தளங்களை அணுக, ஷார்ட்கட் கீகளை உருவாக்கலாம். குரோம் பிரவுசரில், முகவரிக்கான பார் கட்டத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Edit Search Engines என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸில், Other search engines என்ற பிரிவில், புதிய வழி ஒன்றைக் கீழ்க் குறிப்பிட்டுள்ளபடி உருவாக்கவும்:

1. எந்த இணைய தளத்தை ஷார்ட் கட் மூலம் அணுக திட்டமிடுகிறீர்களோ, அதன் பெயரை டைப் செய்திடவும்.

2. அடுத்து, அதற்கான ஷார்ட் கட் சொல்லை, இரண்டு அல்லது மூன்று எழுத்துக்களில், அமைக்கவும்.

3. அடுத்து, இணைய தளத்தின் முகவரியை இணைக்கவும்.

4. தொடர்ந்து Done என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி, நீங்கள் அமைத்த எழுத்துக்களை டைப் செய்தால், குறிப்பிட்ட தளம் திறக்கப்படும். இத்துடன், பிரவுசர்களுக்கான மாறா நிலையில் தரப்பட்டுள்ள சில ஷார்ட்கட் கீகளை நினைவில் வைத்துப் பயன்படுத்தவும்.

அவை:

1. புதிய டேப் திறக்க Ctrl + T, அப்போதைய டேப்பினை மூட Ctrl + W, அனைத்து டேப்களுக்கும் சென்று வர Ctrl + Tab, அப்போதைய பக்கத்தினை ரெப்ரெஷ் செய்திட F5, முழுத்திரை நிலையில் இணைய தளத்தினைப் பார்க்கவும், பின்னர் முந்தைய நிலைக்குத் திரும்பவும் F11, மற்றும் கர்சரை முகவரிக் கட்டத்தில் நிறுத்த அல்லது முகவரிக் கட்டத்தில் உள்ளதை ஹை லைட் செய்திட F6 .

மேலும் பல மாறா நிலையில் உள்ள ஷார்ட்கட் கீ தொகுப்புகளை அறிய http://www.makeuseof.com/tag/opengooglechromebookmarkskeyboardshortcuts என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

2. டேப்களைக் கையாளும் விதம்: பல இணைய தளங்களுக்கான டேப்கள் திறக்கப்பட்ட நிலையில், அவற்றைக் கையாளும் திறன், குறைந்த பட்ச கீகளை இயக்குவதில் உள்ளது. இதற்கு தயார் செய்திடும் வகையில், முதலில் தேடல் முடிவுகளை ஒரு புதிய டேப்பில் அமைக்கவும். இதனை, மாறா நிலையில் நீங்கள் அமைத்திருக்கும் சர்ச் இஞ்சினில் அமைக்கலாம்.

நீங்கள் கூகுள் பயன்படுத்துபவராக இருந்தால், search results பக்கத்தில் மேலாக வலது பக்கம் உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Search Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Where results open என்பதனைத் தேடிக் கண்டறியவும். இங்கு புதிய விண்டோவில் தேடல் முடிவுகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் டிக் செய்திடவும். உண்மையில், இது புதிய விண்டோவில் திறக்கப்பட மாட்டாது. புதிய டேப்பில் தான் திறக்கப்படும். கூகுள் தேடல் சாதனத்தில் இது ஒரு பிழையாக உள்ளது.

3.புக்மார்க்குகளை திறமையுடன் அமைக்கவும்: நாம் குறிப்பிட்ட இணைய தளங்களுக்கான, புக்மார்க்குகளை அமைக்கையில், ஒரு ஒழுங்கான நிலையில் அன்றி, ஏனோ தானோ என நினைவு செல்லும் வகையில் அமைக்கிறோம். இதற்குப் பதிலாக, இந்த புக்மார்க்குகளை ஒரு அமைப்பாக அமைத்துவிடலாம். நாம் புக் மார்க் அமைக்கையில் Ctrl+D என்ற கீகளைப் பயன்படுத்துகிறோம். இதற்குப் பதிலாக, இதற்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட தர்ட் பார்ட்டி புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். அப்படி ஒரு அப்ளிகேஷன் தான் pocket. இதனை https://getpocket.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். Saved.io என்பது இன்னொரு புரோகிராம். இதனை http://saved.io என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இவை, ஒவ்வொரு தளத்திற்கான லிங்க்குகளை, தங்கள் க்ளவ்ட் ஸ்டோரேஜில் தக்க வைத்து, நாம் விரும்பும்போது தருகிறது.

4.எக்ஸ்டன்ஷன்களை முறைப்படுத்தவும்: நமக்கு பல வழிகளில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் இயக்கங்கள் உதவி செய்கின்றன. ஆனால், சில நமக்கு இடையூறும் குறுக்கீடும் தருகின்றன. இவற்றிலிருந்து மீள, ஆம்னி பாருக்கு அடுத்து வலது பக்கம் உள்ள எக்ஸ்டன்ஷன் ஐகானில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் உள்ள Hide Button என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்த படியாக, நாம் பயன்படுத்தாத, அல்லது அடிக்கடி பயன்படுத்தாத எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை, இயக்கம் இன்றி முடக்கி வைக்க வேண்டும். இதற்கு முகவரி கட்டத்தில் chrome://extensions/ என டைப் செய்திடவும். உடன், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அனைத்தும் காட்டப்படும். பயர்பாக்ஸ் பிரவுசரிலும் இது போன்ற வசதி தரப்பட்டுள்ளது. மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தும் சாதாரண குறிப்புகள் போலத் தோன்றலாம். ஆனால், பழகிப் பார்த்தால் தான், விரைவாகவும் எளிதாகவும் இணைய உலா வர இவை உதவும் என அறியலாம்.





------------------- நன்றி -------------------



இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment