இந்தியாவில் "ஸ்மார்ட்போன் பயன்பாடு" - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, December 28, 2011

இந்தியாவில் "ஸ்மார்ட்போன் பயன்பாடு"


ஸ்மார்ட்போன்கள் அதன் பன்முக வசதிகளுக்காகவும், இணைய இணைப்பு வசதிக்காகவும், கம்ப்யூட்டர் போல செயல்படும் தன்மைக்காகவும், ஸ்டேட்டஸ் அடையாளமாகவும் இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்ட நீல்சன் நிறுவனம் சில எதிர்பார்க்காத முடிவுகளை அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள், சராசரியாக நாள் ஒன்றுக்கு 2.5 மணி நேரம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 75% பயன்பாடு இணைய தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவே செயல்படுகின்றன. போன் அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மற்றும் பிற டேட்டா விஷயங்களுக்கு ஸ்மார்ட் போன்கள் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக இளைஞர்கள் இன்று ஸ்மார்ட் போன்களில், சேட்டிங் மற்றும் டெக்ஸ்ட் வழி எஸ்.எம்.எஸ். ஆகியவற்றிற்கே முதலிடம் தருகின்றனர். போன் கால்கள் மூலம் பேசும் வேலை மிக மிகக் குறைவே. இதனை மொபைல் சேவை நிறுவனங்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்கள் சேவைத் திட்டங்களை வகுக்கின்றன.

இந்த ஆய்வில் தரப்பட்டுள்ள வேறு சில ஆர்வமூட்டும் முடிவுகளைக் காண்போம். 15 வயது முதல் 25 வயது பிரிவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் நாளொன்றுக்கு 3 மணி நேரம் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் 60%பொழுது போக்கு வேலைகளுக்கே செலவிடப்படுகிறது. இணையத்தில் கேம்ஸ், மல்ட்டிமீடியா ஆகிய பிரிவுகளில் தான் இவர்கள் கவனம் செல்கிறது. சேட் எனப்படும் அரட்டை அடிக்க உதவிடும் புரோகிராம்களை இந்த வயதில் உள்ளவர்களில் 68% பயன்படுத்துகின்றனர். ஆனால், 31 வயதுக்கு மேல் உள்ளவர்கள், இந்த பிரிவுகளில் 42% நேரத்தைச் செலவிடு கின்றனர்.

மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில், ஆண்ட்ராய்ட் பயன்பாடு, சிம்பியன் சிஸ்டம் பயன்பாட்டினைக் காட்டிலும் அதிகமாகக் காணப்படுகிறது. ஆண்ட்ராய்ட் மூலம் சராசரியாக ஒரு மாத காலத்தில் 19 அப்ளிகேஷன்கள் டவுண்லோட் செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்படுகின்றன. ஆனால் சிம்பியன் சிஸ்டம் பயன்படுத்துபவர்களில் இது 10 அப்ளிகேஷன்களாக உள்ளது.

ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்களில் 84% பேர் ஒரு மாத காலத்தில் ஏதேனும் ஒரு கேம் விளையாடுகின்றனர். சிம்பியன் சிஸ்டத்தில் இது 59% ஆக உள்ளது.------------------ நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

4 comments:

 1. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 2. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 3. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 4. இணயத்தில் சம்பாதிக்கலாம் என்பதே சரி. எந்தச் சிக்கலிலும் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.

  ReplyDelete