"கூகுள்" தரும் தகவல் வகைப்படுத்தல் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, May 30, 2012

"கூகுள்" தரும் தகவல் வகைப்படுத்தல்


இணையத்தில் தகவல்களைத் தேடித்தருவதில், கூகுள் நிறுவனத்தின் தேடல் சாதனத்தை மிஞ்சுவதில் மற்ற தளங்கள் போட்டியிட முடிவதில்லை. தொடர்ந்து தன் தேடல் சாதனத்தின் தொழில் நுட்பத்தினை மேம்படுத்திக் கொண்டுள்ளது கூகுள்.

அண்மையில் “Knowledge Graph” என்ற பெயரில் புதியதொரு மேம்பாட்டினைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஒரு சொல் தரும் பலவகையான முடிவுகளை வகைப்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, ‘Taj Mahal’ என அமைத்துத் தேடினால், இது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலாக இருக்கலாம்; அல்லது இசைக் கலைஞனாக இருக்கலாம்; ஒரு கேசினோ வினைக் குறிக்கலாம்; இந்திய உணவு வழங்கும் ஒரு விடுதியாக இருக்கலாம் அல்லது தேயிலையாக இருக்கலாம். இவை அனைத்துமே கலந்து தேடலின் முடிவுகளாகக் கிடைக்கும். எனவே தேடுபவருக்கு, தேடல் முடிவுகளின் முதல் பக்க முடிவுகளே அபத்தமாகத் தெரியும்.

இந்தப் பிரச்னைக்கு முடிவு காணும் வகையில் “Knowledge Graph” என்ற தொழில் நுட்பத்தினை கூகுள் கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஓர் இணைய தளத்தினை எந்த வகையில் கொண்டு செல்லலாம் என 350 கோடி வகைகளை உருவாக்கியுள்ளது. இதில் ஒன்றில் ஓர் இணைய தளம் வகைப்படுத்தப்படும். தேடுபவர்கள், தங்களின் தேடலை இடுகையில், கூகுள் அதன் தேடல் முடிவுகளுடன், சில பட்டன்களைக் காட்டும். இந்த பட்டன்களை அழுத்தி, குறிப்பிட்ட வகை தளங்களை மட்டும் காட்டும்படி அமைத்திடலாம்.

இன்னும் போகப்போக, தேடுபவரின் விருப்பம் இல்லாமலேயே, தளங்கள் வகைப்படுத்தப்பட்டு அமைக்கப்படும். அதே போல, குறிப்பிட்ட பயனாளர் இதற்கு முன்னர் தேடிய தேடல்களின் அடிப்படையிலும், ஓர் இணையதளம் வகைப்படுத்தப்படும்.

எடுத்துக்காட்டாக, ஒரு பயனாளர், தாஜ் மஹால் என்ற சொல்லின் மூலம் ஒரு இசைக் கலைஞரை முன்பு தேடி இருந்தால், இந்த வகையில் உள்ள தளங்கள் மட்டும் முதலில் அவருக்கான முடிவுகளாகப் பட்டியலிடப்படும். அவர் உலக அதிசயங்களைத் தேடி இருந்தால், நம் ஊர் தாஜ்மஹால் குறித்த தளங்கள் முதலில் காட்டப்படும்.

சிறப்பு அம்சங்கள் பட்டியல்: கூகுள் இன்னொரு தொழில் நுட்ப வசதியும் தர உள்ளது. இதனை ‘summary box’ என ஆங்கிலத்தில் அழைக்கலாம். கம்ப்யூட்டர் பயனாளர் ஒருவர் தேடலை மேற்கொள்கையில், ஒருவரைப்பற்றி அறிய முற்படுகையில், அவர் குறித்த சில சிறப்பு செய்திகள், வலது பக்கம் ஒரு கட்டத்தில் பட்டியலிடப்படும். பல வேளைகளில், இந்த கட்டத்தில் காட்டப்படும் தகவல்களே தேடுபவர்களுக்கான எதிர்பார்ப்பினை நிறைவேற்றுபவையாக இருக்கும். சில வேளைகளில் இந்த பட்டியல் சில தளங்களுக்கு எதிர்மறை யாகவும் இருக் கும் எனவும், அதனால், தங்கள் தளங்களுக்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் சில இணைய தள நிர்வாகிகள் குறை சொல்லி உள்ளனர். கூகுள் என்ன பதில் அளிக்கப்போகிறது என காத்திருந்து பார்க்கலாம்.

பலர் இந்த செய்திகளைப் பார்த்தவுடன், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தேடல் சாதனத்தின் சில கூறுகளைத் தன் தேடல் தளத்திலும் கொண்டு வர கூகுள் எடுக்கும் முயற்சிகளே இவை எனக் கூறி உள்ளனர். இந்த புதிய வசதிகள் குறித்து அறிய http://googleblog.blogspot.in/2012/05/introducing-knowledge-graph-things-not.html என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

3 comments:

  1. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இதுவரை $2,500,900.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

    மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

    ReplyDelete
  2. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இதுவரை $2,500,900.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

    மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

    ReplyDelete
  3. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இதுவரை $2,500,900.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

    மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

    ReplyDelete