பெர்சனல் கம்ப்யூட்டர் - தீராத புதிர்கள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, May 28, 2012

பெர்சனல் கம்ப்யூட்டர் - தீராத புதிர்கள்


கணிப்பொறி பயன்படுத்துபவர்களுக்கு பெருமப்பாலும் எற்படும் சந்தேகங்கள்  , கம்ப்யூட்டர் செயல்பாடு, ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கம், சின்ன சின்ன பிரச்னைகள் எனப் பல இருக்கின்றன. இங்கு சில கேள்விகளையும் அதற்கான தீர்வுகளையும் தருகிரேன்.


கேள்வி: என் கம்ப்யூட்டரைத் தொடங்கும் போது, சில புரோகிராம்கள் தானாகவே தொடங்கி விடுகின்றன?


பதில்: விண்டோஸ் இயக்கம், சில புரோகிராம்களைத் தான் இயங்கும் போதே இயக்குவதற்கென பட்டியலிட்டு வைத்துள்ளது. இவற்றில் ஆண்ட்டி வைரஸ் போன்ற புரோ கிராம்கள் நம் கம்ப்யூட்டரைக் காப்பாற்றுபவை. ஒரு சில நாமே அவற்றை இன்ஸ்டால் செய்கையில் இயங்கும் வகையில் வைத்திருப்பவை ஆகும். எடுத்துக்காட்டாக, தமிழில் அதிகம் டெக்ஸ்ட் அமைப்பவர்கள், தமிழ் சாப்ட்வேர் ஒன்றை உடன் இணைந்து இயக்கும்படி வைத்திருப்பார்கள். இவற்றில் எதனையாவது நீக்க வேண்டும் எனில், ஸ்டார்ட் அழுத்தி, ரன் விண்டோவில் msconfig என டைப் செய்து கிடைக்கும் விண்டோவினைப் (system configuration utility) பார்க்கவும். இதில் startup என்று உள்ள டேப்பினை அழுத்தினால், எந்த எந்த புரோகிராம்கள், விண்டோஸ் இயக்கத் துடன் இயக்கப்படுகின்றன என்று காட்டப்படும். இவற்றில் தேவைப்படாதவை என நீங்கள் சரியாக முடிவு செய்திட முடியும் என்றால், அவற்றின் முன் உள்ள கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்து விட்டு, பின்னர் apply என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.


கேள்வி: என் கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குகையில், சிறிய மாவு மெஷின் கிரைண்ட் செய்வது போல ஓசை கேட்கிறது. சிறிது நேரத்தில் இதன் ஒலி குறைந்துவிடுகிறது. ஏன்?


பதில்: இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாமே நமக்கு மோசமான ஒரு விஷயத்தை தெரியப் படுத்துகின்றன. பெரும்பாலும், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பேன் அல்லது ஹார்ட் ட்ரைவ் சீக்கிரம் தன் இறுதிநாளுக்குச் செல்லப் போகிறது என்று அர்த்தம். எதுவாக இருந்தாலும், உடனே உங்கள் ஹார்ட் ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களுக்கும் பேக் அப் காப்பி எடுப்பது உத்தமம்.

கேள்வி:
சில பைல்களை அழிக்க, ஏன் அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமை வேண்டும் என கம்ப்யூட்டர் கேட்கிறது?பதில்: இந்த தேவை ஒரு பாதுகாப்பு கவசம் தான். விண்டோஸ் 7 சிஸ்டம், உங்கள் பைல்களில் சிலவற்றை மாற்றி அமைக்க அல்லது நீக்க நீங்கள் முயற்சித்தால், இந்த கேள்வியைக் கேட்கும். ஏனென்றால், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு அந்த பைல் தேவையாய் இருக்கலாம் அல்லவா? எனவே அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்ட் இருப்பவர்கள் மட்டுமே அந்த செயலை மேற்கொள்ளலாம்.


கேள்வி: ஏன் விண்டோஸ் இயக்கத்துடன், தேவையற்ற பல புரோகிராம்கள் சேர்த்து தரப்படுகின்றன? மைக்ரோசாப்ட் இது போல நம் தலையில் தேவையற்றைதைச் சுமத்தலாமா?


பதில்: இதற்கு மைக்ரோசாப்ட் மட்டும் பொறுப்பல்ல. கம்ப்யூட்டர் தயாரித்து விற்பனை செய்திடும் பல நிறுவனங்கள், இப்படி நாம் விரும்பாத பல புரோகிராம்களை நம் தலையில் கட்டுகின்றன. இவற்றில் சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களாகவும், கேம்ஸ் புரோகிராம்களாகவும் இருக்கலாம். இவற்றைச் சோதனை செய்து பார்க்க இவை தரப்படலாம். இவற்றை நீங்கள் நீக்குவதற்கான வழிகளை ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரில் தந்துள்ளோம்.


கேள்வி: சில வேளைகளில் விண்டோஸ் சில பைல்களை அழிக்க அனுமதிப்பதில்லை. ஏன்?


பதில்: அந்த பைலை, சில புரோகிராம்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். அது போன்ற வேளைகளில், அதனை அழிக்கவும், வேறு பெயர் மாற்றவும் விண்டோஸ் அனுமதிப்பதில்லை. அந்த புரோகிராமினை மூடிய பின்னரே, பைலை அழிக்க முடியும்.


கேள்வி:விண்டோஸ் பல வேளைகளில் தானாக ரீ பூட் ஆகிறது. ஏன்?


பதில்: இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆட்டோமேடிக் அப்டேட் செய்திடுகையில், உங்கள் அனுமதி இல்லாமலேயே இன்ஸ்டால் செய்திடும் வகையில் செட் செய்யப்பட்டிருந்தால், இன்ஸ்டால் செய்தவுடனேயே, சிஸ்டம் ரீ பூட் செய்யப்படும். ஏதேனும் புரோகிராம் கிராஷ் ஆனாலும், விண்டோஸ் தானாக ரீ பூட் ஆகும். இதனைத் தடுக்க, சிஸ்டம் செட் அப் சென்று மாற்ற வேண்டும்.


கேள்வி: என்னுடைய கிராபிக்ஸ் கார்டுக்கான ட்ரைவர் பைல்களை அப்டேட் செய்தேன். இப்போது எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது. இதனை எப்படி சரி செய்வது?


பதில்: கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட்வேர் சாதனங்களுக்கான புதிய ட்ரைவர் புரோகிராம்களைக் கொண்டு அப்டேட் செய்வது சரியான செயல் என்றாலும், சில வேளைகளில் புதிய அப்டேட் ட்ரைவர்கள், பழைய ஹார்ட்வேர் சாதனத்துடன் இணைந்து இயங்குவதில்லை. புதிய ட்ரைவர் பைலை நீக்கி, பழைய ட்ரைவர் பைலை, அதன் இணைய தளத்திலிருந்து பெற்று, மீண்டும் அமைப்பதே இதற்கான வழியாகும்.

கேள்வி:
கம்ப்யூட்டரில் பிளாஷ் ட்ரைவ் போர்ட்டில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை ‘safely remove’ என்ற முறையில் தான் எடுக்க வேண்டுமா?பதில்: நிச்சயமாக. நீங்கள் விண்டோஸ் இதற்கென தரும் அன்பான அறிவுரையை மீறினால், உங்கள் ஹார்ட் டிஸ்க் அல்லது இணைக்கப்படும் சாதனம் கரப்ட் ஆகிச் செயல் படா நிலைக்குத் தள்ளப்படலாம்.


கேள்வி: நான் டவுண்லோட் செய்திடும் பைல்கள் எங்கு செல்கின்றன? ஏன் என்னால் அவற்றை எளிதில் பார்க்க இயல்வதில்லை?


பதில்: உங்கள் பிரவுசர், தன் வழியாக டவுண்லோட் செய்திடும் பைல்களை, அதன் செட் அப் அமைப்பிற்கேற்ற வகையிலேயே இந்த பைல்களைப் பதிந்து வைக்கும். பொதுவாக மை டாகுமெண்ட்ஸ் (My Documents) போல்டரில் உள்ள மை டவுண்லோட்ஸ் (My Downloads) என்ற போல்டரிலேயே இவை இருக்கும். இருப்பினும், இவை உங்களிடம் கேட்கப்பட்டு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் போல்டரில் சேவ் செய்திடும் வகையில், பிரவுசரில் செட் செய்திட வழிகள் உள்ளன.


கேள்வி: ஏன் சில பைல்கள் கம்ப்யூட்டரில் மறைத்தே வைக்கப்பட்டுள்ளன?


பதில்: இவை ஒன்றும் ரகசிய பைல்கள் இல்லை. கம்ப்யூட்டர் இயங்குவதற்கு முற்றிலும் தேவையான சில பைல்களே இவை. எடுத்துக்காட்டாக boot.ini பைல். இவற்றின் முக்கியத்துவம் தெரியாதவர்கள், அறியாமலேயே இவற்றை நீக்கிவிடலாம் அல்லவா? எனவே தான், இவை சாதரணமாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பெற வேண்டும் என்றால், தாராளமாகப் பெறலாம்.


கேள்வி: என்னுடைய ஐ-பேட் சாதனத்தை என் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தால், சார்ஜ் ஆவதில்லை. ஏன்?


பதில்: உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. போர்ட் மூலம் ஐ-பேடுக்கான மின் சக்தி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இருப்பினும், பொறுமையாக அதனை இணைத்து வைத்தால், சார்ஜ் ஆகும்.


கேள்வி: சில வீடியோ கிளிப்கள் என் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இயங்குகின்றன. ஆனால், லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்குவதில்லை. ஏன்?


பதில்: குறிப்பிட்ட வீடியோ பார்மட்டை இயக்குவதற்கான டிகோடர் என்னும் பைல் இல்லை என்றால், அவை இயங்காது. எனவே இயக்காத கம்ப்யூட்டரில் இந்த டிகோடர்கள் உள்ளனவா என்று பார்க்கவும்.


கேள்வி: என்னுடைய பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குகையில் பீப் ஒலிகள் வருவது ஏன்?


பதில்: இந்த ஒலிகள், கம்ப்யூட்டர் இயங்கும் முன் தன்னைச் சுயசோதனை செய்வதற்கென உள்ள பயாஸ் என்னும் புரோ கிராமினால் தரப்படுகிறது. இந்த சாப்ட்வேர் புரோகிராம் மதர் போர்டிலேயே இருக்கும். ஒவ்வொரு வகையான பீப் ஒலிக்கும் ஒரு பொருள் உள்ளது. மவுஸ் இணைக்கப்படவில்லை; கீ போர்ட் பொருத்தப்படவில்லை போன்ற செய்திகளும் இதில் அடக்கம்.

கேள்வி:
ஏன் யு.எஸ்.பி. போர்ட்களின் கலர் கம்ப்யூட்டர்களில் மாறுபட்டு உள்ளது?பதில்: யு.எஸ்.பி. போர்ட்டுக்கான வண்ணத்தினை முடிவு செய்வது, கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனம் தான். இதில் ஒன்றும் வேறுபாடு இல்லை. தற்போது வரும் யு.எஸ்.பி. 3.0. வகைக்கான போர்ட் அனைத்தும் நல்ல பளிச் சென்ற நீல வண்ணத்தில் உள்ளன. மிக வேகமாக இயங்கும் இவற்றைப் பழைய யு.எஸ்.பி. 2.0 லிருந்து வேறுபடுத்திக்காட்டவே இந்த ஏற்பாடு. இருப்பினும், இந்த போர்ட்களில் பழைய யு.எஸ்.பி. 2 சாதனங்களையும் இயக்கலாம்.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

4 comments:

 1. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  இதுவரை $2,500,900.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

  மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 2. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  இதுவரை $2,500,900.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

  மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 3. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  இதுவரை $2,500,900.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

  மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 4. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete