$type=grid$count=4$tbg=rainbow$meta=0$snip=0$rm=0

சிறார்கள் விரும்பும் கூகுளின் Doodle4Google போட்டி!

இணைய உலகில் பிரபலமாகியிருக்கும் நிறுவனமான கூகுளின் சின்னங்கள் முதன்முதலாக உருவானது இப்படித்தான். கூகுள் நிறுவனம் தனது முதல் லோகோவான Burni...


இணைய உலகில் பிரபலமாகியிருக்கும் நிறுவனமான கூகுளின் சின்னங்கள் முதன்முதலாக உருவானது இப்படித்தான்.

கூகுள் நிறுவனம் தனது முதல் லோகோவான Burning Man எனும் சிறிய மனித உருவை கூகுள் சொல்லில் உள்ள இரண்டாவது O எழுத்துக்குப் பின்னால் வரைந்து அதனை முதன் முதலாக 1998 தனது ஹோம்பேச்சில் வெளியிட்டது.


உலக மக்கள் அனைவராலும் பார்க்கப்பட்ட இந்த லோகோவுடன் தொடங்கப்பட்ட கூகுள் சின்னங்கள் இன்று வரை சுமார் 1000க்கும் மேற்பட்ட சின்னங்கள் உருவாக அடிப்படையானது. Dennis Hwang எனும் டூடுள் கலைஞரின் தலைமையில் 2000 ஆண்டிலிருந்து கூகுள் லோகோக்களை உருவாக்கும் ஒரு குழுவாகவே செயல்பட்டு வருகிறது கூகுள் நிறுவனம். பொதுவிடுமுறைகள், கலாச்சாரங்கள், பிரபல மனிதர்களை நினைவுபடுத்துவது போன்றவைகைகளையே பெறும்பாலும் கூகுள் லோகோவாக உருவாக்கின்றனர் இவர்கள்.

இப்படியாக கூகுள் நிறுவனம் மாணவ மாணவிகளின் ஓவியத் திறமைகளை வெளிகொண்டுவருதற்கும் அத் திறமையை ஊக்குவிப்பதற்காகவும் நடத்திவரும் போட்டிதான் Doodle4Google. சிறார்கள் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கேற்றவாறு புதுமையாக தங்களது ஓவியத்தை கூகுள் சின்னமாக வரையவேண்டும், இதுதான் போட்டி. முதன்முதலாக 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப் போட்டியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் நடத்திவந்தது. இப் போட்டியில் தேசிய மட்டத்தில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளருக்கு எதிர்பார்க்காத பல பரிசுகளை வழங்குகிறது கூகுள்.

கூகுள் நிறுவனம் இளையோர்களின் படைப்பாற்றலை ஊக்குவித்து அதனை கொண்டாட விரும்பியே இப்போட்டியை நடத்திவருகிறது. Doodle4Google போட்டியை தொடர்ந்து அமெரிக்காவிலும் இதுவரை 17 நாடுகளிலும் நடத்தியிருக்கிறது. இந்தியாவிலும் இப்போட்டியை நடத்தி வந்தது. அவ்வகையில் சென்ற ஆண்டில் போட்டியிட்ட சிறார்களில் நொய்டாவை சேர்ந்த 7வயது சிறுமி வரைந்த ஓவியம் தேசிய அளவில் வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடதக்கது. இந்திய பராம்பரிய இசைக்கருவிகள் எனும் தலைப்பின் கீழ் வர்ஷா குப்தா எனும் இச்சிறுமி வரைந்த ஓவியம் பல பிரிவுகளில் தேர்ச்சியாகி பின் சாதனைப்படைத்தது. இப்போட்டியில் 1,55,000 போட்டியாளர்கள் கலந்து கொண்டது கூகுள் நிறுவனத்திற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.


கூகுள் 4 டூடுள் போட்டி 5வது வருடமாக இப்போது அமெரிக்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் பல விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும்கேற்ப 7வயது முதல் 18 வயதுடைய பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டனர். சிறார்களின் கற்பனைத்திறனை தூண்டிவிடும் வகையில் வரைதலுக்கான தலைப்பு கொடுக்கப்படும். அவ்வகையில் இவ்வாண்டுக்கான தலைப்பு இதுதான் "என்னால் நேரத்தில் பயணிக்கமுடியுமாயின் நான் போக ஆசைப்படும் இடம்?" (If I could travel in time, I'd visit"?).

நான் எங்கே செல்வேன் என்று சிந்தித்து சித்தரித்து அதனை சென்ற ஜனவரி மாதத்திலிருந்து மார்ச்சுக்குள் சமர்ப்பித்திருந்தனர் சிறார்கள். 114,000க்கும் மேலான போட்டியாளர்கள் தங்களது ஒவியங்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கிறது கூகுள். இதில் வயதுப்படி போட்டியாளர்களை நான்காக பிரித்து ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மொத்தமாக 250 மாநில போட்டியாளர்களை நடுவர்கள் தேர்வு செய்வர், அதிலிருந்து 50 மாநில வெற்றியாளர்களை தேர்வு செய்தபின் தேசிய வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்கு இணையம் வழி வாக்களிப்பதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்கியிருந்தனர்.


பின்னர் மக்களின் ஆன்லைன் வாக்குப்பதிவுகளின் உதவியுடன் 8பேர் கொண்ட நடுவர் குழு தேசிய அளவில் வெற்றியாளர் யாரேன வருகிற 17ம் தேதி நியூயோர்க்கில் அறிவிக்கவுள்ளனர். தேசிய அளவில் வெற்றிபெரும் வெற்றியாளருக்கு காத்திருக்கும் பரிசுகளோ ஏராளம். அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு லேப்டாப்பும், கல்விச் செலவுகளுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் தொழில்நுட்ப வசதிகளை அவர் படித்த பள்ளிக்கு வழங்கவுள்ளதுடன் ஏனைய சில பரிசுகளும் அளிக்கவுள்ளது. அதுமட்டுமா வெற்றி பெற்றவர் வரைந்த Doodle ஐ வருகிற 18ம் தேதி அமெரிக்க கூகுள் ஹோம்பேச்சில் வைத்து பெரும் கௌரவத்தையும் அளிக்கவுள்ளது. கலந்துகொண்ட ஏனைய 50 மாநில போட்டியாளர்களுக்கும் பரிசுகள் காத்திருப்பதுடன் அவர்கள் வரைந்த ஒவியங்கள் அந்தந்த மாநிலங்களில் கண்காட்சிக்காக வைக்கப்படவும் உள்ளன.   

சென்ற வருடம் நியுயோர்க்கில் Doodle4Google 2011க்கான வெற்றியாளரை தேர்ந்தேடுக்கும் நிகழ்வு சிறப்பாகவே நடைபெற்றது. அதில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Matteo Lopez எனும் 7வயது சிறுவன் சென்ற வருடத்திற்கான போட்டியில் தேசிய அளவில் வெற்றிபெற்றிருந்தான். அதன் வீடியோ இங்கே:


எதுவாகியிலும் கூகுள் நிறுவனத்தால் பல நாடுகளில் நடாத்தப்படும் Doodle4Google போட்டிகளில் உற்சாகத்துடன் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் சிறார்களின் எண்ணிக்கை என்னமோ குறைந்தபாடில்லை.

அயர்லாந்து நாட்டில் வெற்றி பெற்ற Doodle 2012

ஆஸ்திரேலியா நாட்டில் வெற்றி பெற்ற Doodle 2012

நியூசிலாந்து நாட்டில் வெற்றி பெற்ற Doodle 2012


------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

COMMENTS

BLOGGER: 3
Loading...