நாம் தினந்தோறும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறோம். ஆனால் பார்ப்பது எல்லாம் மானிட்டர் திரையைத்தான். உங்கள் கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கிறது என்றாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு சிலர் சிபியூ கேபினை மூடி வைத்த சிறிய பெட்டிக்குள் வைத்து இயக்குவார்கள். இயக்கும்போது மட்டும் அதனைத் திறந்து வைத்துக் கொள்வார்கள். எப்படி இருந்தாலும் அதன் வெளிப் புறத்தைத்தானே பார்க்கிறோம்.
சரி, கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கப் போகிறது. மதர்போர்டு, ஹார்ட் டிஸ்க், டிரைவ்கள் மற்றும் இவற்றை இøணைக் கும் கேபிள்கள். இவற்றைப் பார்த்துப் பெரிதாக என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம். நாம் அறிந்து கொள்ள வேண்டியது எல்லாம் நம் ஹார்ட் டிஸ்க் கொள்ளளவு என்ன? சிப்பின் தன்மை என்ன? அதன் சைக்கிள் ஸ்பீட் என்ன? ராம் எவ்வளவு? இன்னும் எத்தனை போர்ட் உள்ளன? எத்தனை சாதனங்களை இணைக்கலாம்? ஓ.எஸ். எத்தனாவது பதிப்பு? அதில் சர்வீஸ் பேக் என்ன இணைந்துள்ளது? என்பவற்றை அறிந்து கொள்வதில்தான் நன்மையே உள்ளது.
அடேயப்பா எத்தனை விஷயங்கள்! இவற்றை எல்லாம் எப்படி அறிந்து கொள்வது? ஒவ்வொன்றாய் தெரிந்து கொள்ள முயற்சித்தால் நேரம் எவ்வளவு செலவாகும்? இதற்கெல்லாம் ஒரு வழி தரும் வகையில் சில சாப்ட்வேர் தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்ததாக இரண்டு தெரிய வந்தன. அவை குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
முதலாவதாக CPUID என்ற நிறுவனம் தயாரித்து வழங்கும் CPUZ என்ற புரோகிராம். இது ஒரு டயாக்னஸ்டிக் புரோகிராம். அதாவது மேலே சொன்ன அனைத்து கம்ப்யூட்டர் பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து அதன் தன்மைகளை ஒரு டெக்ஸ்ட் பைலாகத் தரும் புரோகிராம். இதனை http://www.cpuid. com/cpuz.php என்ற தளத்தில் காணலாம். இதனை காப்பி செய்து உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி இயக்கினால் கம்ப்யூட்டரில் உள்ள சிலிக்கான் பாகங்களின் இயல்பு அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
CPUZ புரோகிராமினைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்ட புரோகிராம் ஒன்றினைக் காண முடிந்தது. அதன் பெயர் Sandra. இதனை வழங்குவது SiSoftware என்ற நிறுவனம். இது அடிப்படையில் இலவசமாய்க் கிடைக்கிறது. ஆனால் கூடுதல் தகவல்கள் பெற கட்டணம் செலுத்திப் பெறலாம். இலவசமாய்க் கிடைக்கும் புரோகிராமே நமக்குப் போதும். இது மேலே சொன்ன CPUZ புரோகிராம் தரும் அனைத்து தகவல்களையும் தருவதுடன் கூடுதலாகச் சில தகவல்களையும் தருகிறது. கம்ப்யூட்ட ரின் பிரிவுகள் அனைத்தும் இன்னும் சிறப்பாகச் செயல்பட சில பரிந்துரை களையும் தரும். இந்த புரோகிராமினை http://www.sisoftware.net என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
எனவே கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கிறது? என்ற கேள்வியைப் பார்த்தவுடன் ஸ்குரூ டிரைவரை எடுத்துக் கொண்டு இறங்கிவிட வேண்டாம். மேலே சொன்ன சாப்ட்வேர் புரோகிராம்களை இறக்கிப் பதிந்து இயக்கிவிட்டு கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தாலே போதும்.
------------------ நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !
பயனுள்ள பகிர்வு நண்பரே......
ReplyDelete//எனவே கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கிறது? என்ற கேள்வியைப் பார்த்தவுடன் ஸ்குரூ டிரைவரை எடுத்துக் கொண்டு இறங்கிவிட வேண்டாம்//
பிளம்பர் கூட வன்பொருள் பற்றி சுலபமாக தெரிந்து கொள்ளலாம், ஆனால் மென்பொருள் தான் விஷயமே....