இதில் நான் யாரையும் கூறிப்பிட்டு சொல்லவில்லை
என் மனதில் பட்டவை
நாம் அனைவரும் ஒவ்வொரு தலைப்பில் இங்கு ( இணையத்தில் ) பதிவினை இடுகிறோம்.
எதற்க்காக?
ஒரு தகவலை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் பதிவினை இடுகிறோம்.
இங்கு பதிவினை இடுபவர்கள் அனைவரும் படிப்பறிவு உள்ளவர்கள் தானே?
நாம் அனைவரும் மற்றவர்களுக்கு உதைவி செய்ய வேண்டும் & அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் & நம் வாழ்கை தரம் உயர வேண்டும் என்று நினைப்பவர்கள் தானே?
ஆனால் நாம்மில் சிலர் இன்னும் ஏன் திருந்தவில்லை?
* கற்பழிப்பு.
* காம கதைகள்.
* கள்ள காதல்.
* நண்பனின் மனைவியை கூட்டிக்கொண்டு நண்பன் ஓட்டம்.
* 16 வயது சிறுமியை மனந்ததார் 112 வயது பெரியவர்.
சிலர் இன்னும் இப்படிப்பட்ட பதிவினை இட்டால் நாம் ( தமிழ் மக்கள் ) எப்படி முன்னேற முடியும்?என்று நம் வாழ்கை தரம் உயரும்?
இப்படிப்பட்ட செய்திகளை போடுவதால் என்ன பயன்? ஒன்றும் இல்லையே!
இதை விட கொடுமை என்னவென்றால்,இது மாதிரி இடுகைக்கு தமிழிஷ் போன்ற திரட்டியில் ஓட்டும் போட்டு அந்த செய்தியை "சூடான செய்திகள்" வரிசையில் கொண்டு வந்து விடுகிறோம்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள் இப்படிப்பட்ட செய்திகளையே நாம் அதிகம் படித்தால் என்று தான் தமிழன் உயருவான்?
செய்தித்தாள்கள் தான் இது மாதிரி செய்தியை இட்டு நம்மை இன்னும் முட்டாள்கள் வரிசையில் வைத்து உள்ளனர்.
நாம் அனைவரும் அரசியல் வாதிகளை கூறை கூறுகிறோம், இந்த நாடு எப்ப தான் உருப்படும் என்று தெரியவில்லை என்று பொலம்புகிறோம்.
ஆனால்?
படிப்பறிவு உள்ள நாமே இப்படிப்பட்ட செய்திகளை இடலாமா? பதிவர்கள் ஆகிய நாம் இதே தவறை செய்யலாமா?
இதனால் யாருக்கு பயன்?
இவர்களும் பதிவர்கள் தான்
* பிகேபி
* செந்தழல் ரவி
* தமிழ்நெஞ்சம்
* சூர்யா கண்ணன்
இன்னும் பலர் உள்ளனர் . . . . . .
இவர்கள் அனைவரும் நமக்கு எப்படி பட்ட நல்ல தகவல்களை தருகிறார்கள்.இவர்கள் போல நாமும் பயனுள்ள செய்திகளையும், தகவல்களையும் தர வேண்டாமா?
நம் மீடியாகள் பற்றி Dr A.P.J அப்துல் கலாம் கூறியதை இங்கு சென்று படித்து பாருங்கள். Dr A.P.J அப்துல் கலாம் அவர்கள் நம் தவறுகளை எவ்வளவு சரியாக கூறி உள்ளார்.
யோசித்து பாருங்கள் நண்பார்களே ?
இனியாவது இந்த தவறை நாம் செய்ய கூடாது அல்லவ!
இனி நல்ல பயனுள்ள செய்திகளையும், தகவல்களையும் சொல்லி நாம் நம் சமுதாயத்தை உயர்த்துவோம் வாருங்கள்.
இவை என் மனதில் தவறாக பட்டதால் இங்கு கூறி உள்ளேன்.மற்றப்படி யாரையும் கூறிப்பிட்டு சொல்லவில்லை.
---------------------------------------------------------நன்றி------------------------------------------------
Good Point. We are following this to the letter.
ReplyDeleteengalblog.
இவற்றில் அரசியல் ஜாதிகளை விட்டுவிட்டீர்களே நண்பரே. தமிழ் உலகம் 5 வருடங்களில் நிறைய மாறி இருக்கிறது. நல்ல பதிவர்களா காணாமல் போய், நிறைய அராத்துகள் (நானும் கூட இருக்கலாம்!) சேர்ந்திருக்கின்றன. எவ்வளவு படித்தாலும்,எந்தப் பதவியில் இருந்தாலும் இதுதான் எனது தரம் என்று பரைசாற்றிக்கொண்டு!
ReplyDeleteநெறய பேரு டவுசரை அவுக்கனும்னு முடிவோட எழுதியிருக்கீங்க.....
ReplyDeletegood
ReplyDeleteராஜா : நாடு எப்படி உள்ளது ?
ReplyDeleteமந்திரி : மக்கள் ஏழ்மையில் வாடுகிறார்கள் ! ஒரு துளி தங்கம் கூட ஒருவரிடம் இல்லை !
ராஜா : உமது தகவல் தவறு
ராஜா : நாடு எப்படி உள்ளது ?
சிகை அலங்கரி : நன்றாக உள்ளது . எல்லோரிடமும் ஒரு கட்டி தங்கம் உள்ளத்து
மந்திரி அந்த தங்கத்தை திருடிய பிறகு
ராஜா : நாட்டில் ஒரே திருட்டு . உடனடி சட்டம் தேவை
நண்பரே நீங்கள் சொல்வது சரியே , அப்படி நமக்கு தெரிந்த சில சிறிய கருத்தை எழுதினால் கூட பின்னூட்டத்தில் தரக்குறைவாக கருத்து சொல்லும் ஒருவரை இதில் தவறாக முன் உதாரணம்மாக போட்டிருக்கிறீர் ,முதலில் அதை சரி செய்யுங்கள் ...யார் என்பதை இங்கு சென்று பாருங்கள் அவரின் பயனுள்ள தகவல் உங்களுக்கு புரியும் ....
ReplyDeletehttp://saidapet2009.blogspot.com/2009/09/usename-password-firefox.html
உங்களின் பதிலுக்காக காத்திருக்கும் சக பதிவன்
ReplyDeleteஸ்ரீ.கிருஷ்ணா
ஒரு பார்வையில் உங்கள் எண்ணம் நலலதே.
ReplyDeleteமறு பார்வையில் தவறானது.
நம் சமூகம் பல படிமங்களில் வாழ்கிறது. நல்லது, கெட்டது. Good Bad and Ugly. இப்படி.
உங்கள் கருத்துப்படி, நல்லதை மட்டுமே சொல்லவேண்டும்; படிக்கவேண்டும் என்றால், உலகப்பார்வை ஒருபட்ச பார்வையாக்வே முடியும். அப்படி முடியின், நாம் எடுக்கும் முடிவுகள் பலவேளைகளில் முட்டாள்தனமாக்வே இருக்கும்.
நான் நீங்கள் வெறுத்தொதுக்க பரிந்துரை சொல்லும் பதிவுகளை நாடிப்படிப்பதுண்டு, அவை எனக்கு நம் சமூகப்போக்கை எனக்கு காட்டிச்சொல்கின்றன். இன்று குற்றங்கள் யாவை? அவை ஏன் அன்று செய்யப்பட்வைல்லை. சமூகக்காரணிகள் உண்டா? குற்றம்செய்தவரே பொறுப்பா? அவற்றைத் தடுக்க நாம் செய்யும் முயற்சிகள் வெற்றியத்த்ந்தனவா? அன்று பெண்கள் செய்யத்துணியாத காமக்கொலைகள் இன்று ஏன் துணிகிறார்கள்? பெண்களின் வாழ்க்கை எப்படி மாறிக்கொண்டு வருகிறது? ஹார்டி சொன்னமாதிரி:
If a woman kills her husband for a paramour, she does not kill a her husband. Rather, she eliminates a situation.
ஒருத்தி தன் காதல்னுக்காக் கணவனைகொன்றாலென்றால், அவள் அங்கு ஒரு கணவனைக்கொல்லவில்லை. மாறாக, அங்கு தன்மீது சமூகத்தால் திணிக்கப்பட்ட ஒரு போலிவாழ்க்கைச்சிறையை தக்ர்க்கிறாள்/
ஹார்டி சொன்னது சரியா?
நீங்கள் வெறுக்கும் பதிவுகள் எனக்குக் கற்றுக்கொடிப்பவை ஏராளம்...ஏராளம்.
நாசூக்காக சாப்பிட்டு, நாசூக்காக உடை உடுத்தி, நாசூக்காக இலக்கியம் படித்து, நாசூக்காக சிலாகித்து, நாசூக்காக கொட்டாவி விடுவது மட்டும் வாழ்க்கையல்ல. உண்மையில் அது போலி வாழ்க்கை. கண்ணைமூடிக்கொண்டு, ப்ரொவினிங் எழுதியது போல,
God is in his Heaven
All is right with the world
என்ற பொய்பேசித்திரியும் வாழ்க்கை.
ராவணனனும் ராமனும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பது இறைவன் வகுத்த வழி.
இயற்கையை வளைக்க முயுலாதீர். தோல்விதான் உமக்கு.
This comment has been removed by the author.
ReplyDelete// நண்பரே நீங்கள் சொல்வது சரியே , அப்படி நமக்கு தெரிந்த சில சிறிய கருத்தை எழுதினால் கூட பின்னூட்டத்தில் தரக்குறைவாக கருத்து சொல்லும் ஒருவரை இதில் தவறாக முன் உதாரணம்மாக போட்டிருக்கிறீர் ,முதலில் அதை சரி செய்யுங்கள் ...யார் என்பதை இங்கு சென்று பாருங்கள் அவரின் பயனுள்ள தகவல் உங்களுக்கு புரியும் ....
ReplyDeletehttp://saidapet2009.blogspot.com/2009/09/usename-password-firefox.html
//
நீங்கள் சொன்ன நபரை அடையாளம் கண்டுபிடித்து விட்டேன்,அந்த நபரின் பெயரை நீக்கி விட்டேன்.
உண்மையில் அவர் கருத்து மிக கேவலமாக உள்ளது. நீங்கள் சொல்லுவது போல உங்கள் இரண்டு மாத பதிவினை நான் படித்து பர்க்கிறேன்.
விடுங்கள் பிறர்க்காக நாம் வாழ்வது இல்லை.நீங்கள் அதை கண்டு கொள்ளாதீர்கள்,உங்கள் பதிவை நீங்கள் இடுங்கள்.
இங்கு இதை பற்றி மேலும் பெரிது படுத்த வேண்டாம்,மற்றதை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்,அவரின் தவறுகளை என்னிடம் கூருங்கள் நானும் அவரின் நடவடிக்கையை கன்கானிக்கறேன்.
என் மின்னஞ்சல் முகவரி: mytamilpeople@gmail.com
நன்றி
சக பதிவரின் கருத்தை மதித்து செயல்படும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ,, தொடரட்டும் உங்கள் சேவை ,..
ReplyDeleteஎனது பதிவில் தவறு இருக்கலாம் ஆனால் சக பதிவர் என்றமுறையில் நாசூக்காக சொல்லி இருக்கலாம் என்று தான் வருத்தம் . என்னை
போல் வரும் புதியவர்களுக்கு இந்த நிலை வரக்கூடாது என்பதுதான் முழுநோக்கம்
நான் இதை குறிப்பிட்டது அவரை காயப்படுத்த அல்ல நல்ல பதிவில் கொஞ்சம் தீமை இருந்தாலும் அது பதிவை தவறாக ஆக்கிவிடும் .
என்றுதான் ,,, நன்றி நண்பா....
// ஒரு பார்வையில் உங்கள் எண்ணம் நலலதே.
ReplyDeleteமறு பார்வையில் தவறானது.
நம் சமூகம் பல படிமங்களில் வாழ்கிறது. நல்லது, கெட்டது. Good Bad and Ugly. இப்படி.
உங்கள் கருத்துப்படி, நல்லதை மட்டுமே சொல்லவேண்டும்; படிக்கவேண்டும் என்றால், உலகப்பார்வை ஒருபட்ச பார்வையாக்வே முடியும். அப்படி முடியின், நாம் எடுக்கும் முடிவுகள் பலவேளைகளில் முட்டாள்தனமாக்வே இருக்கும்.
நான் நீங்கள் வெறுத்தொதுக்க பரிந்துரை சொல்லும் பதிவுகளை நாடிப்படிப்பதுண்டு, அவை எனக்கு நம் சமூகப்போக்கை எனக்கு காட்டிச்சொல்கின்றன். இன்று குற்றங்கள் யாவை? அவை ஏன் அன்று செய்யப்பட்வைல்லை. சமூகக்காரணிகள் உண்டா? குற்றம்செய்தவரே பொறுப்பா? அவற்றைத் தடுக்க நாம் செய்யும் முயற்சிகள் வெற்றியத்த்ந்தனவா? அன்று பெண்கள் செய்யத்துணியாத காமக்கொலைகள் இன்று ஏன் துணிகிறார்கள்? பெண்களின் வாழ்க்கை எப்படி மாறிக்கொண்டு வருகிறது? ஹார்டி சொன்னமாதிரி:
If a woman kills her husband for a paramour, she does not kill a her husband. Rather, she eliminates a situation.
ஒருத்தி தன் காதல்னுக்காக் கணவனைகொன்றாலென்றால், அவள் அங்கு ஒரு கணவனைக்கொல்லவில்லை. மாறாக, அங்கு தன்மீது சமூகத்தால் திணிக்கப்பட்ட ஒரு போலிவாழ்க்கைச்சிறையை தக்ர்க்கிறாள்/
ஹார்டி சொன்னது சரியா?
நீங்கள் வெறுக்கும் பதிவுகள் எனக்குக் கற்றுக்கொடிப்பவை ஏராளம்...ஏராளம்.
நாசூக்காக சாப்பிட்டு, நாசூக்காக உடை உடுத்தி, நாசூக்காக இலக்கியம் படித்து, நாசூக்காக சிலாகித்து, நாசூக்காக கொட்டாவி விடுவது மட்டும் வாழ்க்கையல்ல. உண்மையில் அது போலி வாழ்க்கை. கண்ணைமூடிக்கொண்டு, ப்ரொவினிங் எழுதியது போல,
God is in his Heaven
All is right with the world
என்ற பொய்பேசித்திரியும் வாழ்க்கை.
ராவணனனும் ராமனும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பது இறைவன் வகுத்த வழி.
இயற்கையை வளைக்க முயுலாதீர். தோல்விதான் உமக்கு. //
அந்த மாதிரி பதிவினை படிக்க கூடாது,போட கூடாது என்று நான் கட்டாய படுத்தவில்லை.
// நான் நீங்கள் வெறுத்தொதுக்க பரிந்துரை சொல்லும் பதிவுகளை நாடிப்படிப்பதுண்டு, அவை எனக்கு நம் சமூகப்போக்கை எனக்கு காட்டிச்சொல்கின்றன். //
இந்த இடுக்கைகள் மூலம் தான் நாம் நம் சமூகப்போக்கை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
எத்தனையோ நல்ல கருத்துகள் உள்ளன அதை தெரிந்து பயன் அடையலாமே?அதை விட்டு விட்டு நாம் ஏன் இன்னும் அந்த கேவலமான இடுக்கையை படித்து கொண்டே இருக்கனும்?
மாறினால் தனே நம் வாழ்கை தரம் உயரும்?
நீள படங்களை பார்பவர்களும் உள்ளனர்,அதற்க்காக நீள படங்களை பார்க்க கூடாது என்று நான் கூறவில்லை.அதே போல அனைவரும் நீள படங்களையே பாருங்கள் என்று நான் கூறவில்லை.
மணிதனாகிய நமக்கு சந்தோஷம்,துக்கம்,செக்ஸ் போன்ற அனைத்தும் ஆண்டவன்
கூடுதுள்ளான். அனைத்தும் நமக்கு தான்.
அதற்காக இந்த மாதிரி இடுகையை நாடிப்படித்து கொண்டே இருந்தால்,என்றும் நாம் முன்னுக்கு வர முடியாது .
நீங்கள் சொல்லுவது போல இயற்கையை வளைக்க நான் முயற்சிக்கவில்லை.அது போல தோல்வி பற்றி எனக்கு கவலையும் இல்லை.
நன்றி
நீங்கள் சொல்வது நம்மை நாமே கத்தியால் குத்துவது போல தான், இந்தியா ஒன்றும் சிறு நாடு இல்லை, ஒருவன் தவறு செய்யும் போது அதை பிரபலபடுத்தி அதை பல நபர்களுக்கு கொண்டு செல்வது தான் செய்தி, ஒருவன் 8 வயது சிறுமியை கற்பழிக்கிறான் அவனை அப்படியே விட்டு விடுவதா, அவனுக்கு என்ன தண்டனை என்று செய்தி இட்டால் தான் அடுத்தவருக்கும் தெரியும், படிப்பவர்களும் ஒகோ இப்படியும் ஒரு தண்டனை இருக்கிறது என்று நினைப்பார்கள், சும்மா கம்புயூட்டர் செய்திகள், கவதைகள் படித்தால் நாடு உருப்படவே உருப்படாது தான், ஒருவருக்கு கிடைக்கும் தண்டனை பலருக்கு கண்டிப்பாக தெரிய வரவேண்டும்,அதற்க்கு பல பதிவர்கள் வேண்டும் தான்,நீங்கள் சொல்வது போல
ReplyDelete"சிலர் இன்னும் இப்படிப்பட்ட பதிவினை இட்டால் நாம் ( தமிழ் மக்கள் ) எப்படி முன்னேற முடியும்?என்று நம் வாழ்கை தரம் உயரும்" 16 வயது சிறுமியை ஒரு முதியவர் மணந்தார் என்றால் இந்த செய்தியை வெளியிடாமல் விட்டால் திருடனுக்கு கொண்டாடம் தானே, முதலில் நீங்கள் திருந்துங்கள் தலைவரே,
// நீங்கள் சொல்வது நம்மை நாமே கத்தியால் குத்துவது போல தான், இந்தியா ஒன்றும் சிறு நாடு இல்லை, ஒருவன் தவறு செய்யும் போது அதை பிரபலபடுத்தி அதை பல நபர்களுக்கு கொண்டு செல்வது தான் செய்தி, ஒருவன் 8 வயது சிறுமியை கற்பழிக்கிறான் அவனை அப்படியே விட்டு விடுவதா, அவனுக்கு என்ன தண்டனை என்று செய்தி இட்டால் தான் அடுத்தவருக்கும் தெரியும், படிப்பவர்களும் ஒகோ இப்படியும் ஒரு தண்டனை இருக்கிறது என்று நினைப்பார்கள், சும்மா கம்புயூட்டர் செய்திகள், கவதைகள் படித்தால் நாடு உருப்படவே உருப்படாது தான், ஒருவருக்கு கிடைக்கும் தண்டனை பலருக்கு கண்டிப்பாக தெரிய வரவேண்டும்,அதற்க்கு பல பதிவர்கள் வேண்டும் தான்,நீங்கள் சொல்வது போல
ReplyDelete"சிலர் இன்னும் இப்படிப்பட்ட பதிவினை இட்டால் நாம் ( தமிழ் மக்கள் ) எப்படி முன்னேற முடியும்?என்று நம் வாழ்கை தரம் உயரும்" 16 வயது சிறுமியை ஒரு முதியவர் மணந்தார் என்றால் இந்த செய்தியை வெளியிடாமல் விட்டால் திருடனுக்கு கொண்டாடம் தானே, முதலில் நீங்கள் திருந்துங்கள் தலைவரே, //
நன்றி,உங்கள் கருத்தை படித்தால்எனக்கு சிரிப்பு தன் வருது,வராத பின்ன?
நீங்கள் சொல்லுவது போல பல திருடர்களுக்கு பல தண்டனை கூடுத்து உள்ளனர் ஆனால் திருடர்கள் திருந்தினார்களா?
பெரிதாக என்ன தண்டனை கூடுத்தார்கள் திருடர்களுக்கு, ஜெயில் போய்ட்டு வந்து மீண்டும் அதே தவறை செய்கிறான்.
நீங்கள் சொல்லும் தண்டனை அவளோதான்.
// ஒருவன் 8 வயது சிறுமியை கற்பழிக்கிறான் அவனை அப்படியே விட்டு விடுவதா //
யார் அவனை விட சொன்னது?அதே சமயம் சட்டம் என்ன செய்தது அவனை?
கெட்டதை தெரிந்தால் தான் நல்லது பண்ண முடியுமா?
// 16 வயது சிறுமியை ஒரு முதியவர் மணந்தார் என்றால் இந்த செய்தியை வெளியிடாமல் விட்டால் திருடனுக்கு கொண்டாடம் தானே //
இந்த நாட்டில் காவல் நிலையத்தில் பெண் காவலர் கற்பழிக்க படுகிறாள் தவறு செய்தவனுக்கு சட்டம் என்ன மரண தண்டனை கூடுத்துதா?
// அவனுக்கு என்ன தண்டனை என்று செய்தி இட்டால் தான் அடுத்தவருக்கும் தெரியும், படிப்பவர்களும் ஒகோ இப்படியும் ஒரு தண்டனை இருக்கிறது என்று நினைப்பார்கள் //
சும்மா நினைக்க மட்டும் தான், எந்த தண்டனையும் யாரையும் ஏதும் செய்யவில்லை,இவளோ தன் தண்டனையா என்று தெரிந்து கொண்டு மீண்டும் தவறு செய்கிறான்.
செய்த தவறுக்கு தண்டனை கூடுத்தாலும் ,யாரும் திருந்தவில்லை,அதே தவறு தான் திரும்ப நடக்கிறது.
நீங்கள் சொல்லுவதை பார்த்தால் திரும்ப தவறு நடக்க கூடாது அல்லவா?ஆனால் ஏன் திரும்ப அதே தவறு நடக்குது?
நீங்கள் சொல்லுற இப்படிப்பட்ட செய்தியை வெளியிடுவதற்கு பதில் அவர்களின் திறமையை சொல்லலாம்.
திருந்தாத அதே தவறை படித்து என்ன பயன்?
கேவலமான பதிவுகள் என்றால் என்ன என்பதில்தான் உங்களுக்கும் எனக்கும் வேறுபாடு?
ReplyDeleteநீளப்படத்தைச் சொல்லி ஒப்பிடுகிறீர்கள். இதிலிருந்தே தெரிகிறது வாதததை தம்பக்கம் வளைக்கப்பார்க்க்றீர்கள்.
நீங்கள் எழுதியதென்ன?
//கற்பழிப்பு.
* காம கதைகள்.
* கள்ள காதல்.
* நண்பனின் மனைவியை கூட்டிக்கொண்டு நண்பன் ஓட்டம்.
* 16 வயது சிறுமியை மனந்ததார் 112 வயது பெரியவர். //
இவைதான். இவைகள் பத்தரிக்கைகள் வெளியிடுகின்றன. போலீசு ஐ.பி.எஸ் அதிகாரிகளை வைத்து துப்பு துலக்குகிறது. உங்களது கருத்தின் படி, இவைகள்ப்பற்றி யாரும் மூச்சுவிடக்கூடாது. பத்தரிக்கைகள் எழுதி மக்களுக்கு இன்றைய் சமூகம் எப்படியிருக்கிறது என்று காட்டுகிறது. மக்களும் ஊடகங்கள் மூலமாக்த்தான் தெரிந்துகொள்கிறார்கள். இணையதள் வலைபதிவுகள் ஒரு ஊடகமே. இதிலென்ன பாரபட்சம்? அங்கு சரி. இங்கு சரியில்லையா?
உங்களுக்கு வாழ்க்கையின் இருண்ட பக்கத்தைப் பார்த்து வாழ்க்கை எப்படி பல்ரால் தவறாக வாழப்படுகிறது என்ற வாழ்க்கைக்கல்வி வேண்டாம் என்று, கதவை அடைத்து இருந்து இராமாயணம் படிக்கபோனால், அங்கேயும் வால்மீகி வாழ்க்கையின் இருண்ட பக்கத்தைத்தான் காட்டுகிறான்: ஒரு அப்பாவியின் அப்பாவியான் பெண்டாட்டியை இன்னொருவன் கடத்திச்செல்ல அதிலிருந்து முளத்தெழுவ்தைத்தான் படிக்கவேண்டும்.
எங்கு திரும்பினும் வாழ்க்கை இருண்டு கிடக்கிறது. தன் மகளை, தன் தமக்கையை, கொடூரமான கொலை செய்கிறான். அவள் ஜாதி மாறி ஒருவனைக்கட்டிக்கொண்டாலாம். பெண்கள் வாழமுடியவில்லை.
இதையெல்லாம் கேட்கக்கூட உங்களுக்கு மனதிடம் இல்லை. இதையெல்லாம் கேட்க வைத்து மக்களைக் கொதிப்படையச்செயதால் சமூகமாற்றம் வரும்.
100 வய்து கிழவனைக்கூட நம்பாதே என்பதைப் பெண்ணைப்பெற்றோருக்குச் சொல்லும் warning தான் அது.
காமக்கதைகளை நான் பதிவர்களிடம் வாசித்ததில்லை. என்வே அது பற்றி க்ருத்தில்லை.
நண்பனின் மனைவியைக்கூட்டிக்கொண்டு நண்பன் ஓட்டம் - இது நடப்பது எங்கோ எப்போதோ அல்ல. அடிக்கடி. இதைப்பதிவர் போடுவது அவர் இன்பத்துக்காகவும். படிப்பவர் voyerist delight பெறுகிறார் எனவும் நீங்கள் கருதினால், you are still like the Sithartha in the palace. He started learning everything only after he came out of his palace.
A childish protest from you on such blogs. I don't take the stand that they have the liberty to write what they like. My stand is that all that dark side of the society we live in, should be laid bare to common people.
Unexamined life is not worth living. We cant live smartly without knowing how the society lives to day.
After reaching certain age, you should be bold enough to learn from anything: positive or negative. Bright or dark!
You are not a hothouse plant to be protected always. Palace life wont teach you anything.
Jo
// நீளப்படத்தைச் சொல்லி ஒப்பிடுகிறீர்கள். இதிலிருந்தே தெரிகிறது வாதததை தம்பக்கம் வளைக்கப்பார்க்க்றீர்கள் //
ReplyDeleteஇது உங்களுக்கு தோன்றுவது.
// 100 வய்து கிழவனைக்கூட நம்பாதே என்பதைப் பெண்ணைப்பெற்றோருக்குச் சொல்லும் warning தான் அது //
இதை படித்தால் சிரிப்பு தான் வருகிறது.
நான் இந்த தகவல்களை ஏன் திரும்ப திரும்ப சொல்ல வேண்டும் என்று தான்,தவறு நடக்கிறது அதே தவறு தான் திரும்ப திரும்ப நடக்கிறது ஆனால் யார் திருந்துவார்கள்?
மேலும் இதை விவாதிக்க எனக்கு நேரம் இல்லை.
நன்றி
//இங்கு இதை பற்றி மேலும் பெரிது படுத்த வேண்டாம்,மற்றதை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்,அவரின் தவறுகளை என்னிடம் கூருங்கள் நானும் அவரின் நடவடிக்கையை கன்கானிக்கறேன்.//
ReplyDeleteஎன்னை கண்காணிக்க நீ யார்?
இந்த உலகில் யார் யாரை வேண்டும் ஆனாலும் கன்கானிக்கலாம்
ReplyDeleteஉங்கள் மீது தவறு இல்லை என்றால் நீங்கள் ஏன் கோவப்படவேண்டும் & கவலைப்படவேண்டும்?
உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை ஆகையால் இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
நன்றி
//உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை ஆகையால் இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.//
ReplyDeleteரொம்ப சரி. மூட்டிவிட்டவன் நாசமாக போக!
//பின்னூட்டத்தில் தரக்குறைவாக கருத்து சொல்லும் ஒருவரை இதில் தவறாக முன் உதாரணம்மாக போட்டிருக்கிறீர் ,முதலில் அதை சரி செய்யுங்கள் //
ReplyDeleteகவனிக்கவும். விஷயம் என் பதிவில் நடந்தது அல்ல. வேறு ஏதோ பதிவில் நடந்தது. அதற்கு இங்கு பஞ்சாயத்து செய்ய வேண்டாம்.
//ஸ்ரீ.கிருஷ்ணா said :எனது பதிவில் தவறு இருக்கலாம் //
தன்மேல்தான் தவறு என்று அவரே ஒத்துக்கொண்டார்.
இந்தமாதிரி தலைப்பு வைத்தது உங்கள் தவறு என்று நீங்கள் கிருஷ்னாவிடம் சொல்லாமல்..........
//நீங்கள் சொன்ன நபரை அடையாளம் கண்டுபிடித்து விட்டேன்,அந்த நபரின் பெயரை நீக்கி விட்டேன்.
உண்மையில் அவர் கருத்து மிக கேவலமாக உள்ளது.//
கிருஷ்னாவின் கருத்து மட்டும் நோபல் பரிசுக்கு உகந்ததோ?
என் வலைப்பூ தன் முதல் நாள் முதலே சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கிறது.
அதில் என்ன குறை கண்டீர்?
அவர் வந்து சொன்னாலும் உங்கள் புத்தி எங்கே போயிற்று.
//உண்மையில் அவர் கருத்து மிக கேவலமாக உள்ளது.//
ReplyDeleteமுள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்.
விஷத்தை விஷத்தால்தான் முறிக்கவேண்டும்.
தீய வார்த்தையை தீய வார்த்தையால்தான் எதிர்கொள்ள வேண்டும்.
அதுதான் இயற்கை.
////உண்மையில் அவர் கருத்து மிக கேவலமாக உள்ளது.//
அதனால்தான் ஆனந்தவிகடனில் அத்தனை முறை என் பதிவுகள் குட்பிளாக் செக்ஷனில் வந்ததா?
என் வயது என்ன? அவர் வயது என்ன?
மாணவப் பருவத்திலேயே இந்த மாதிரி தலைப்பு வைக்க முடியுமா?அருவருப்பாக உள்ளது.
என் புத்தி என்னுடன் இருந்ததால் தான் நான் உங்களை பற்றி வேறு எந்த தவறான கருத்தும் தெரிவிக்கவில்லை.
ReplyDeleteஇரண்டு தரப்பையும் தீற விசாரிக்காமல் ஏதும் சொல்ல கூடாது என்ற காரனத்தினால் தான்
உங்களை:-
// அவரின் தவறுகளை என்னிடம் கூருங்கள் நானும் அவரின் நடவடிக்கையை கன்கானிக்கறேன் //
அவரை:-
// நீங்கள் சொல்லுவது போல உங்கள் இரண்டு மாத பதிவினை நான் படித்து பர்க்கிறேன். //
என்று கூறினேன்.
// என் வலைப்பூ தன் முதல் நாள் முதலே சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கிறது.
அதில் என்ன குறை கண்டீர்? //
நீங்கள் எழுதிய Comment தான் குறை,அப்படி நீங்கள் கூறியது தவறு.
மற்றபடி உங்கள் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் இல்லை
நன்றி
//நீங்கள் சொன்ன நபரை அடையாளம் கண்டுபிடித்து விட்டேன்,அந்த நபரின் பெயரை நீக்கி விட்டேன்.//
ReplyDeleteஆமாமாம். அந்த செயல் ரொம்ப முக்கியம்.
அப்புறம் அவருக்கு நண்பராகும் செயலையும் செய்துவிடுங்கள். சொர்க்கம் நிச்சயம்.
// இவர்கள் அனைவரும் நமக்கு எப்படி பட்ட நல்ல தகவல்களை தருகிறார்கள்.இவர்கள் போல நாமும் பயனுள்ள செய்திகளையும், தகவல்களையும் தர வேண்டாமா?//
இப்படி சொன்னவர் ஒரு கமெண்டை பார்த்தவுடன் தான் சொன்னதையே மறந்து பதிவுகளை வைத்து அல்ல. கமெண்டுகளை வைத்து எடை போட ஆரம்பித்து விட்டார்.
நல்ல லாஜிக்!?
ReplyDelete//நீங்கள் எழுதிய Comment தான் குறை,அப்படி நீங்கள் கூறியது தவறு//
ReplyDeleteஏன் இந்த அரைகுறை தீர்ப்பு நீதியரசரே!. கிருஷ்னா எழுதியது சரியா தவறா? அதை ஏன் இன்னும் சொல்லவில்லை. அதை சொல்லும்வரை இதற்கு முடிவு இல்லை.
கிருஷ்னா அப்படி ஒரு தலைப்பை கூடுத்து இருக்க கூடாது.
ReplyDelete// நீதியரசரே!//
ஐயோ நான் நீதியரசர் ஒன்றும் இல்லை
//தமிழ்மகன் said :
ReplyDeleteகிருஷ்னா அப்படி ஒரு தலைப்பை கூடுத்து இருக்க கூடாது.//
அதை முன்னாலேயே சொல்லி இருக்க வேண்டும். இப்போதாவது சொன்னீர்களே.
நன்றி.
நன்றி.
நன்றி.
நன்றி
ReplyDeleteதடை செய்துவிட்டார்களாமே. தெரியுமா?
ReplyDeletehttp://saidapet2009.blogspot.com/2009/11/blog-post_15.html