விண்டோஸ் 7 ஷட் டவுண் ஷார்ட் கட் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, December 15, 2010

விண்டோஸ் 7 ஷட் டவுண் ஷார்ட் கட்


விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியவர்கள், உடனே எதிர்பார்க்கும் ஒரு வசதி, சிஸ்டம் ஷட் டவுண், பவர் டவுண் மற்றும் சிஸ்டம் ரீ ஸ்டார்ட் போன்றவற்றிற்கான ஷார்ட் கட்களை அமைப்பதுதான்.

இதற்கான வழிமுறைகள், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவிற்கான வழிமுறைகளைப் போன்றேதான் உள்ளன. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதனை டாஸ்க் பார் அல்லது சிஸ்டம் ட்ரே அல்லது இரண்டிலும் பதித்து வைக்க முடியும் என்பது ஒரு கூடுதல் வசதியாகும். இந்த ஷார்ட்கட் வழியை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம்.






கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் எல்லாரும் ஷார்ட்கட் உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தெரிந்து வைத்துள்ளனர். இருப்பினும் அவற்றை எளிமையாக இங்கு உறுதிப்படுத்திக் கொள்வோம்.

முதலில், டெஸ்க்டாப்பில் எதுவும் இல்லாத ஓர் இடத்தில், ரைட்கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் New | Shortcut என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்தவுடன், சில தகவல்களை உங்களிடம் கேட்டுப் பெறுகின்ற உள்ளீடு செய்திடும் திரை உங்களுக்குக் கிடைக்கும். இங்கு தான் நீங்கள் உருவாக்க விரும்பும் ஷார்ட்கட் வழிக்கான அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

எடுத்துக் காட்டாக, விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றினை ஷட் டவுண் செய்திடுவதற்கான ஷார்ட்கட் உருவாக்குவது குறித்து இங்கு காணலாம். எடுத்துக் காட்டாக, இங்கு ஷட் டவுண் செய்திட கீழ்க்காணும் கட்டளை வரியினை, கட்டத்திற்குள் அமைக்கவும்.

Shutdown.exe -s -t 00

இதன் பின் Next என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோ இந்த ஷார்ட்கட்டிற்கு பெயர் ஒன்றினைத் தருமாறு கேட்கும். எந்த கட்டளைக்கான ஷார்ட்கட் அமைக்கப்படுகிறதோ, அதனை நினைவு படுத்தும் வகையிலான பெயர் ஒன்றை அமைக்கவும். இங்கு, எடுத்துக்காட்டாக Shutdown என அமைக்கலாம். இதோடு இங்கு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் இதற்கென ஐகான் ஒன்று அமைத்தால் நன்றாக இருக்கும். இங்கும் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் ஐகான்களை மாற்றுவது போல மாற்றலாம். இங்கு சம்பந்தப்பட்ட ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, காண்டெக்ஸ்ட் மெனு பெறவும். பின்னர் அதில் ப்ராப்பர்ட்டீஸ் மெனு செல்லவும். ப்ராப்பர்ட்டீஸ் கண்ட்ரோல் பேனலில், Change Icon பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து வரும் திரையில், ஐகான்கள் நிறைய காட்டப்படும். இதில் எதனை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து, இரண்டு முறை ஓகே பட்டனை இருமுறை கிளிக் செய்து முடிக்கவும். இப்போது உங்கள் டெஸ்க் டாப்பில் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்வதற்கான ஐகானைக் காணலாம். இதில் கிளிக் செய்தால், சிஸ்டம் ஷட் டவுண் ஆகும்.

இனி இதனை எப்படி ஸ்டார்ட் மெனு அல்லது சிஸ்டம் ட்ரே அல்லது இரண்டிலும் பின் செய்து வைப்பது என்று பார்க்கலாம். ஷார்ட்கட் மீது ரைட் கிளிக் செய்திடவும். காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். பின்னர் டாஸ்க்பாரில் அமைக்க வேண்டும் எனில் Pin to Taskbar என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இதில் பின் செய்தவுடன், சிஸ்டம் ஷட் டவுண் செய்வதற்கான அவசர திறவுகோலான ஷார்ட்கட் கைகள் அருகில் கிடைக்கும்.

இதே முறையில் இன்னும் சில ஷார்ட்கட் கீகளுக்கான கட்டளையைப் பார்ப்போமா!

கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட - Shutdown.exe -r -t 00

கம்ப்யூட்டரை ஹைபர்னேட் என்னும் நிலையில் வைத்திட - rundll32.exe PowrProf.dll,SetSuspendState

கம்ப்யூட்டரை ஸ்லீப் மோடில் வைத்திட - rundll32.exePowrProf.dll,SetSuspendState 0,1,0



------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?


No comments:

Post a Comment