அவர் ஒரு போட்டோஜெனிக் நபர் என்கிறார்களே.. அதெல்லாம் பொய் என்கிறது இப்புதிய கண்டுபிடிப்பு.
கமெரா பொய் சொல்கிறதாம். நீங்கள் என்னதான் அழகாக இருந்தாலும் கமெராவின் லென்ஸை மாற்றி போட்டு ஓரளவு அருவருப்பான உங்களது தோற்றத்தை காண்பிக்க முடியுமாம்.
இதனை செயன்முறை ரீதியாக விளக்குகிறார் ஸ்டீபன் ஏஸ்ட்வூட் எனும் புகைப்படக்காரர். இதற்காக ஒரே ஒரு மாடலை தெரிவு செய்து, அவரது மேக்கப், சூழல் வெளிச்சம், உள்ளடக்கப்பட்டிருக்கும் நிறம் என்பவற்றில் எந்தவித வேறுபாடும் காட்டாது வெறுமனே கமெரா லென்ஸை 19 மி.மீ - 350 மி.மீ அகல அளவு வரை மாற்றி மாற்றி, அந்த மாடலை புகைப்படம் எடுத்துள்ளார்.
அவரது ஆய்வு முடிவுகளின் படி ஆக குறைந்தது 135 மி.மீ லென்ஸ் கொண்ட கமெராக்கள் தான், எமது இயற்கையான முகத்தோற்றத்தை மிகத்துல்லியமாக வெளிக்காட்டுகிறது என்கிறார்.
இனி விடுமுறைக்கால புகைப்படங்களில் நீங்கள் ஏன் அழகாக இல்லை என்பதற்கு காரணம் சொல்ல ஒரு நல்ல தகவல் கிடைத்துவிட்டது என சந்தோஷப்படுங்கள்.
------------------ நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !
காரணம் சொல்ல ஒரு நல்ல தகவல் கிடைத்துவிட்டது :)
ReplyDelete