விரைவில் பரவலாக்கப்பட இருக்கும் 4ஜி தொழில் நுட்பத்தின் இயக்கத்தையும் இணைத்து, டேப்ளட் பிசி ஒன்றை வடிவமைத்து, பட்ஜெட் விலையில் வழங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்தில் தங்களுடன் ஒத்துழைக்க கனடா நாட்டின் டேட்டாவிண்ட் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் தான், உலகிலேயே மிக மலிவான விலையில் ஆகாஷ் என்னும் டேப்ளட் பிசியினை அண்மையில் வெளியிட்டது.
மேல் நாடுகளில், பல நிறுவனங்கள் 4ஜி தொழில் நுட்பத்துடன் டேப்ளட் பிசியினை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றன. ஆனால் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரையிலான விலையில் இதனைத் தர ரிலையன்ஸ் முன்வந்துள்ளது சிறப்பான முயற்சி ஆகும். ஏனென்றால், இந்த விலை மேல்நாட்டு விலையில் நான்கில் ஒரு பங்காகும்.
வரும் டிசம்பர் மாதம் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பத்துடன் இயங்கும் டேப்ளட் பிசி ஒன்றை டேட்டாவிண்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் விலை ரூ. 2,999 என்ற அளவில் இருக்கும்.
முன்பு மொபைல் போன் பயன்பாடு அறிமுகமான போது மிகவும் மலிவான விலையில் நாடு முழுவதும் சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தில் இயங்கும் மொபைல் போன் மற்றும் சேவையினை வழங்கி ரிலையன்ஸ் முன்னணி இடத்தைப் பிடித்தது. இதே வழியில், டேப்ளட் பிசி விற்பனையிலும் தன் தடத்தைப் பதிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிடுகிறது.
இனி எல்லாமே டேப்ளட் பிசி தான்
லிஸப்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை டேப்ளட் பிசிக்கள் பிடித்து வருகின்றன. குறிப்பாக, வர்த்தகப் பணிகள் மற்றும் நிர்வாக வேலைகளை மையமாகக் கொண்டு இயங்குபவர் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, டேப்ளட் பிசிக்களை இயக்கத் தொடங்கி வருகின்றனர். இந்த மாற்றம் தொடர்ந்து பெருகி வருகிறது. பன்னாட்டளவில் இந்த டிஜிட்டல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எதனால் லேப்டாப் இடத்தில் டேப்ளட் பிசிக்களை விரும்புகிறீர்கள் என்று பலரைக் கேட்டதில், கீழ்க்காணும் சிறப்பியல்பு களை அவர்கள் குறிப்பிட்டுக் கூறுகின்றனர்.
1. மின்சக்தி பயன்பாடு: இதனைப் பொறுத்தவரை, டேப்ளட் பிசியின் அருகில் கூட லேப்டாப் வர முடியாது. டேப்ளட் பிசியை ஒருமுறை சார்ஜ் செய்தால், ஒரு முழு நாள் கூட பயன்படுத்தலாம். லேப்டாப் அப்படி இல்லை. அதிக பட்சம் மூன்று மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது.
2. வைரஸ்: ஒரு டேப்ளட் பிசி எந்த வைரஸ் தாக்குதலையும் கொண்ட தில்லை. மால்வேர் எதுவும் அதனைப் பாதித்ததில்லை. ஆனால், லேப்டாப் கம்ப்யூட்டரில், குறிப்பாக விண்டோஸ் இயக்கத்தில், வைரஸ் மற்றும் பிற மால்வேர் நுழைவது எளிதாகிறது.
3. எடுத்துச் செல்ல எளிது: சட்டை அல்லது கோட் பாக்கெட், பாதுகாப்பாக சட்டைக்குள்ளாக என ஒரு டேப்ளட் பிசியினை வைத்துக் கொண்டு செல்ல லாம். எனவே ஏர்போர்ட், ஹோட்டல் விடுதி, டாக்ஸி, கருத்தரங்கங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள் என எங்கும் எளிதாக டேப்ளட் பிசியைக் கொண்டு செல்ல முடியும். எடையும் குறைவு. மற்றவர் அறியாமல் ஓரிடத்தில், ஒரு டாக்சியில், மாடிப் படிகளின் கீழாக என எந்த ஒரு தனி இடத்தில் வைத்துப் பயன்படுத்த டேப்ளட் பிசிதான் சிறந்தது. ஏன், குளியலறையில் கூட வைத்து எளிதாக இயக்கலாம்.
4. விலை: டேப்ளட் பிசியின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அனைத்து மக்களும் வாங்கிப் பயன்படுத்த வேண்டுமாயின், இதன் விலை குறைவாக இருந்தால் தான் முடியும் என்பதனை டேப்ளட் பிசி யினைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உணர்ந்திருக்கின்றன. எனவே, லேப்டாப்பின் விலையில் மூன்றில் ஒரு பங்கில், அல்லது நான்கில் ஒரு பங்கில் நல்ல டேப்ளட் பிசி ஒன்றை வாங்க முடியும்.
5. ஆன்லைன் நெட்வொர்க் தொடர்பு: கொஞ்சம் கூடுதலாகப் பணம் செலுத்தி, ஒரு டேப்ளட் பிசிக்கு 4ஜி அல்லது 3ஜி தொடர்பினைப் பெற முடியும். நெட்வொர்க் இணைப்பிற்கு வை-பி இணைப்பு உள்ள இடம் எங்குள்ளது என்று தேடி அலைய வேண்டியதில்லை. கிளவ்ட் கம்ப்யூட்டிங் போன்ற பணிகளுக்கான நெட்வொர்க் வழங்குவதற்காக, மேல் நாடுகளில் பல நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் டேப்ளட் பிசிக்களில், குறிப்பிட்ட நெட்வொர்க் இணைப்பினை ஏற்படுத்தியே தருகின்றனர். அல்லது டேப்ளட் பிசிக்களுக்கான நெட்வொர்க் இணைப்பு கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.
6. ஆயிரக் கணக்கில் அப்ளிகேஷன்கள் ரெடி: டேப்ளட் பிசிக்களுக்கென பல்லாயிரக் கணக்கான அப்ளிகேஷன்கள் இப்போதே கிடைக்கின்றன. பெரும்பாலான பயனுள்ள அப்ளிகேஷன்கள் இலவச மாகவே தரப்படுகின்றன. மேலும் இவற்றை ஓர் இணைய இணைப்பிலேயே டேப்ளட் பிசியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். பயன்படுத்தியபின் அன் இன்ஸ்டால் செய்து நீக்கிவிடலாம்.
7. எளிமையான இன்டர்பேஸ்: டேப்ளட் பிசிக்களும், அவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களும் மிக எளிமையான இன்டர்பேஸ் கொண்டு இயங்குவதால், சிக்கல்கள் எதுவுமின்றி அவற்றை இயக்க முடிகிறது.
8.புளுடூத் இணைப்பு: ஹெட்போன், ஹெட்செட், கீ போர்ட் என டேப்ளட் பிசி தொடர்புக்கென எதனை எடுத்தாலும், அவை புளுடூத் பயன்பாட்டில் இயங்கு பவையாகக் கிடைக்கின்றன. இதனால், குழப்பமான இணைப்புகளுடன் நாம் போராட வேண்டியதில்லை.
9. உடனடி இயக்கம்: எந்த நேரத்திலும் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டேப்ளட் பிசியை, மீண்டும் இயக் கத்திற்குக் கொண்டு வரலாம். லேப்டாப் கம்ப்யூட்டர் போல, டேப்ளட் பிசி அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. எனவே, போகிற போக்கில் பல செயல்பாடுகளை ஒரு டேப்ளட் பிசியில் மேற்கொள்ள முடியும்.
10. சமுதாய இணைய தள இணைப்பு: வர்த்தகம் மற்றும் அலுவலக ரீதியான பணிகளுக்கு சமுதாய இணைய தள இணைப்பு தேவையில்லையே! எனச் சிலர் எண்ணலாம். அவை வர்த்தக நிறுவனங்களுக்கு எந்த அளவிற்கு உதவுகின்றன என்பதனை, அவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே அறிவார் கள். அதனால் தான் இன்றைய சூழலில் பல நிறுவனங்கள், சமுதாய தளங்களில் தங்களைப் பதிந்து கொண்டு வருகின்றன. இந்த வகையில், ஒரு டேப்ளட் பிசிதான் கூடுதல் பயனுள்ளதாக இருக்க முடியும்.
லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பிசி என எடுத்துக் கொண்டால், நிச்சயம் டேப்ளட் பிசிதான் பின்னாளில் நிலையாக இயங்கப் போகிறது என்பது உண்மை. ஆனால் அந்த நாள் விரைவிலா அல்லது சில ஆண்டுகள் கழித்தா என்பது மக்களின் மனநிலையைப் பொறுத்து அமையும்.
------------------ நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !
நம்ம ஊருக்கு எப்ப வரும் நண்பா
ReplyDeleteஇன்டலி 3
ReplyDelete