பிளாக்பெரி போன்களைத் தயாரித்து வழங்கும் ரிசர்ச் இன் மோஷன் (ஆர்.ஐ.எம்.) நிறுவனம், டேப்ளட் பி.சி. ஒன்றை வடிவமைத்து 500 டாலருக்கும் குறைவாக விற்பனை செய்திட அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இது அமெரிக்காவில் விற்பனைக்கு வரும்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–பாட் சாதனத்திற்குப் போட்டியாக இது விலையிடப்படும் எனத் தெரிகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–பேட் வெளியான பின், மக்கள் ஐ–பேட் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் களுக்கிடையே, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஒரு சாதனத்தை எதிர்பார்த்தனர் என்றும், அதனைத் தரும் முயற்சியில் ஆர்.ஐ.எம். நிறுவனமும் இணைந்துள்ளது என்றும் இந்நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் டேப்ளட் பி.சி. மற்ற நிறுவனங்கள் தராத ஒரு வசதியைத் தரும் என்று அறிவித்துள்ளார். அடோப் நிறுவனத்தின் பிளாஷ் தொழில் நுட்பத்தின இது கொண்டிருக்கும் என்றும், அதன் மூலம் இன்டர்நெட்டில் இடம் பெற்றிருக்கும் பல வீடியோ பைல்களின் இயக்கம், இதனைப் பயன்படுத்துபவருக்கு எளிதாகக் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
No comments:
Post a Comment