ஆறு மாதங்களுக்கு மொபைல் மெசேஜ் ஸ்டோரேஜ் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, December 15, 2010

ஆறு மாதங்களுக்கு மொபைல் மெசேஜ் ஸ்டோரேஜ்


மொபைல் வழி மெசேஜ் அனுப்புகையில் அவை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே, மொபைல் நிறுவனங்களின் சர்வர்களில் ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும். தற்போது இந்த நடைமுறையை மாற்றி, குறைந்தது ஆறு மாதங்களுக்காவது அவற்றை வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு, மொபைல் சேவை நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் ஒரு மாதத்தில் 13,000 கோடி முதல் 15,000 கோடி வரையிலான எண்ணிக்கையில் மொபைல் வழியாக மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன. எனவே இவற்றை சர்வரில் பாதுகாக்க வேண்டும் எனில், இந்த நிறுவனங்கள் கூடுதலாக சாதனங்களில் முதலீடு செய்திட வேண்டியதிருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு மெசேஜ்களை சேவ் செய்து வைத்திட வேண்டியுள்ளது என்று அரசின் உள்துறை அமைச்சக அலுவலகங்கள் தெரிவித்துள்ளன. இதனை அடுத்து மொபைல் வழி மேற்கொள்ளப்படும் அழைப்புகளையும் பதிந்து சேவ் செய்து வைத்திட அரசு வலியுறுத்தும் என்று நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

தற்போது பன்னாட்டளவில் இந்தியாவில் தான் மொபைல் பயன் பாட்டுக் கட்டணம் மிகக் குறைவாக உள்ளது. பதிவு செய்து வைப்பதற்காக கூடுதலாக செலவு ஏற்படுகையில், அந்த செலவு வாடிக்கை யாளர்கள் தலையில்தான் விழும். கட்டணங்கள் உயரும் வாய்ப்புகள் அதிகமாகும்.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment