பேட்டரி பராமரிப்பு - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, September 13, 2012

பேட்டரி பராமரிப்பு

Mobile Battery Life Tips

மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளை இங்கு காணலாம்.

* மொபைல் போன்களுக்கு போன் நிறு வனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். போனின் சார்ஜரும், போனைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் சார்ஜராகவே இருக்க வேண்டும்.

* அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும் தீ பிடிக்கக் கூடிய இடத்திற்கு அருகேயும் மொபைல் போனை வைத்திருப்பது பேட்டரிகளுக்கு ஆபத்தினை வரவழைக்கும்.

* பேட்டரியை உயரமான இடத்திலிருந்து கீழே போடுவது, அதன் மீது தட்டுவது போன்ற செயல்கள் கூடாது.

* அதிக வெப்ப சூழ்நிலையில் போனை வைத்திருக்கக் கூடாது.

* ஈரம் மற்றும் அதிக சூடு இவை இரண்டுமே போன் பேட்டரிகளுக்கு கெடுதல் தரும் நிலைகளாகும்.

* பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடும் வகையில் தொடர்ந்து மின் இணைப்பிலேயே இருக்கக் கூடாது. இதனால் சூடு போனின் மற்ற பகுதிகளுக்குப் பரவும் வாய்ப்பு ஏற்படும்.

* பேட்டரிகளை அதிக நேரம் தொடர்ந்து சார்ஜ் செய்வது போனின் வாழ்நாளைக் குறைக்கும்.

* தொடர்ந்து மியூசிக் அல்லது வீடியோ பார்க்கும் சூழ்நிலையில் பேட்டரி சூடு அடைகிறது எனத் தெரிந்தால் போனை சிறிது நேரம் ஆப் செய்து வைக்கவும்.

* எந்த காரணத்தைக் கொண்டும் பேட்டரியைக் கழற்றிப் பார்ப்பதோ அதன் பாகங்களைக் கழற்றி மாட்டுவதோ கூடாது.

* பேட்டரிகளில் ஷார்ட் சர்க்யூட் பிரேக் ஏற்படக் கூடாது. இதனால் வெடிக்கும் நிலை ஏற்படலாம்.பேட்டரி பராமரிப்பு.


------------------- நன்றி -------------------

இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment