மெயில் பேக் அப் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, August 29, 2011

மெயில் பேக் அப்மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர். Web Based E-Mail என அழைக்கப் படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே இலவசமாகவே கிடைக் கின்றன. எடுத்துக் காட்டாக, பிரபலமான ஜிமெயில், யாஹூ மெயில், ஹாட் மெயில் போன்றவற்றைக் கூறலாம். இந்த தளங்கள் தரும் இலவச அளவினை மீறுகையில், நம் முந்தைய மெயில்கள் அழிக்கப்படும். ஏன், இந்த வசதியினை இந்த தளங்கள் என்ன காரணத்தினாலோ, தருவதற்கு மறுத்தால், அல்லது அதன் சர்வர்கள் கெடுக்கப்பட்டால், நம் மின்னஞ்சல்கள் என்ன ஆகும்?

பெரும்பாலானவர்கள், நமக்குத் தேவையான முக்கிய தகவல்களை, இத்தகைய மின்னஞ்சல்களில் தான் வைத்துள்ளனர். அப்படியானால், இவற்றுக்கு பேக் அப் தான் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு எப்படி பேக் அப் எடுப்பது என்ற வழிகளை இங்கு காணலாம். ஜிமெயில், யாஹூ மற்றும் ஹாட் மெயில் தளங்களில் உள்ள மின்னஞ்சல்களுக்கான பேக் அப் வழிகள் இங்கு தரப்படுகின்றன.

1.ஜிமெயில்: கூகுள் நமக்குத் தந்துள்ள மிகப் பெரிய சேவை அதன் இலவச ஜிமெயில் ஆகும். ஏறத்தாழ 7.5 கிகா பைட்ஸ் அளவில் ஒவ்வொருவருக்கும் இடம் தந்து, நம் மின்னஞ்சல் கணக்கை வைத்துக் கையாள வசதி செய்துள்ளது. இதற்காக, நம் குப்பை மெயில்கள் அனைத்தையும் இதில் தேக்கி வைப்பது நியாயமாகாது. தேவையற்ற வற்றை நீக்கலாம். நமக்கு முக்கியமான மெயில்களைக் குறித்து வைக்கலாம். அவற்றை பேக் அப் செய்திடலாம். அதிர்ஷ்டவசமாக, இதற்கென ஜிமெயில் பேக் அப் என்று ஒரு புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.

ஜிமெயில் பேக் அப், விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்குகிறது. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, ஒரு சில நிமிடங்களில் நம் ஜிமெயில் அக்கவுண்ட்டை பேக் அப் செய்திடலாம்.

1.1. முதலில் ஜிமெயில் பேக் அப் புரோகிராமினை http://www.gmailbackup.com/download என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். மிக எளிதாக இதனை மேற்கொண்டவுடன், நம் ஸ்டார்ட் மெனுவில் ஒரு ஷார்ட் கட் மற்றும் டெஸ்க்டாப்பில் ஐகானாக இந்த புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.

1.2. ஜிமெயில் பேக் அப் புரோகிராமினைத் திறக்கவும். உங்கள் முழு ஜிமெயில் முகவரியினையும் பாஸ்வேர் டையும் தரவும். எந்த போல்டரில் பேக் அப் சேவ் செய்திட என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மாறா நிலையில் தரப்படும் ஜிமெயில் பேக் அப் போல்டரையும் வைத்துக் கொள்ளலாம்.

1.3. எந்த எந்த மின்னஞ்சல் செய்திகளை பேக் அப் செய்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேதி வாரியாகவும் தேர்ந்தெடுக்கலாம்.

1.4. அடுத்து Backup பட்டனை அழுத்தி, பேக் அப் வேலையைத் தொடங்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள அஞ்சல்களின் எண்ணிக்கைக்கேற்ப, நேரம் எடுத்துக் கொள்ளப்படும். பேக் அப் வேலை நடக்கையில், மற்ற பணிகளை நீங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளலாம். எவ்வளவு பேக் அப் ஆகியுள்ளது என்பதுவும் உங்களுக்குக் காட்டப்படும். மொத்தமாக அனைத்தையும் ஒரே நேரத்தில் பேக் அப் செய்திடாமல், குறிப்பிட்ட அளவில், நமக்கு வசதியான நேரத்திலும் பேக் அப் செய்திடலாம். அடுத்தடுத்து பேக் அப் செய்கையில், ஏற்கனவே பேக் அப் செய்த மெயில்களை ஜிமெயில் பேக் அப் விட்டுவிடும்.

1.5. பேக் அப் செய்த மெயில்களை, பின்னர் மீண்டும் அக்கவுண்ட்டிற்குக் கொண்டு செல்லலாம். மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்ட், பேக் அப் செய்து வைத்துள்ள போல்டர் ஆகிய தகவல்களை அளித்து மீண்டும் கொண்டு வரலாம். ஒரு அக்கவுண்ட் டிலிருந்து பேக் அப் செய்ததை, இன்னொரு அக்கவுண்ட்டிற்கும் மாற்றலாம்.

ஜிமெயில் பேக் அப் செய்து பார்த்தபோது, மிக அருமையாக இருந்தது. நம் இன்பாக்ஸ், சென்ட் போல்டர், லேபில் என அனைத்தும் பேக் அப் செய்யப்பட்டு மீண்டும் கிடைக்கின்றன.

ஜிமெயில் பேக் அப் பைல்கள் .EML என்ற பார்மட்டில் ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றை எந்த இமெயில் கிளையண்ட் புரோகிராமிலும் திறந்து பார்க்கலாம்.
இந்த பேக் அப்பில் ஒரே ஒரு குறை உள்ளது. ஜிமெயில் தொகுப்பில் நாம் ஏற்படுத்தும் சேட் லாக் (chat logs) பைல்கள் பேக் அப் செய்யப்படுவது இல்லை.

2.ஹாட் மெயில்: ஹாட் மெயிலுக்கென பேக் அப் புரோகிராம் எதுவும் அதன் தளத்தில் இல்லை. ஆனால், மற்றவர்கள் வடிவமைத்துக் கொடுத்துள்ள புரோகிராம்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இதில் Mail Store Home என்ற புரோகிராம் மிக நன்றாகச் செயல்படுகிறது.

2.1. இந்த Mail Store Home புரோகிராமினை http://www.mailstore.com/en/mailstoreserver.aspx?keyword=awensucheallemailstore என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.

2.2. புரோகிராமினை இயக்கி Archive email என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். POP3 Mailbox என்பதனைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மின்னஞ்சல் முகவரியினைத் தரவும். அடுத்து கேட்கப்பட்டுள்ள இடத்தில் பாஸ்வேர்டி னையும் அமைக்கவும். ‘Access via’ ட்ராப் டவுண் மெனுவில், POP 3SSL என அமைத்து, அடுத்து நெக்ஸ்ட் பட்டனில் கிளிக் செய்திடவும்.

2.3. அடுத்து உங்கள் விருப்பத்தினைத் தர வேண்டும். பேக் அப் செய்த பின்னர், உங்கள் மெயில் தளத்தில் உள்ள மெயில்களை அழித்துவிடவா என்று கேட்கப்படும். அழிக்காமல் வைப்பதே நல்லது. இதன் பின்னர், நீங்கள் POP3 அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இது எளிதான வேலை தான். பின்னர் உங்கள் மெயில்களை பேக் அப் செய்திடலாம். இதனை உங்கள் சிடி, டிவிடி அல்லது யு.எஸ்.பி. ட்ரைவில் கூட மேற்கொள்ளலாம். மெயில் ஸ்டோர், நீங்கள் உருவாக்கிய போல்டர்கள் உட்பட அனைத்தையும் பேக் அப் செய்கிறது. இங்கும் பல நிலைகளாக பேக் அப் செய்திடும் வழி தரப்படுகிறது.

இந்த புரோகிராம் குறித்து இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஜிமெயில் பேக் அப் புரோகிராமைக் காட்டிலும் வேகமாக இது செயல்படுகிறது.

3. யாஹூ மெயில்: நீங்கள் யாஹூ இலவச மெயில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு அதனை பேக் அப் செய்திடும் வசதியை யாஹூ தரவில்லை. பி.ஓ.பி.3 மெயில் வகை வசதியினை, கட்டணம் ( ஆண்டுக்கு 20 டாலர்) பெற்றுக் கொண்டு தான் யாஹூ தருகிறது. இருப்பினும் பேக் அப் செய்திட ஒரு வழி உள்ளது.

3.1. Zimbra Desktop என்ற புரோகிராம் இதற்கு உதவுகிறது. இதனை http://www.zimbra.com/downloads/zddownloads.html என்ற முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். இதனை மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று மெயில் அக்கவுண்ட்களை பேக் அப் செய்திடவும் பயன்படுத்தலாம்.

3.2. Zimbra Desktop புரோகிராமைத் திறந்து கொள்ளவும். Add New Account என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Yahoo என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்ட் மற்றும் கேட்கப்பட்டுள்ள தகவல்களைத் தரவும். விரும்பினால், calendars, contacts, and group ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கலாம்.

3.3. Validate and Save என்பதில் கிளிக் செய்திடவும். Zimbra தன்னை யாஹூவுடன் இணைக்கும். இதற்குச் சற்று நேரம் ஆகலாம். இணைத்த பின்னர், Launch Desktop என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Preferences டேப் தேர்ந்தெடுக்கவும். இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், Import/Export என்பதில் கிளிக் செய்திடவும்.

3.4. ‘Export’ என்பதில், Account என்பது செக் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். அடுத்து, Advanced Settings பாக்ஸில் செக் செய்திடவும். இங்கு எவை எல்லாம் உங்களுக்குத் தேவையில்லை என்று எண்ணுகிறீர்களோ, அவற்றிற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். ஆனால் Mail என்ற பாக்ஸிற்கு எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்க வேண்டும். இவற்றை முடித்த பின்னர், Export என்பதில் கிளிக் செய்திடவும்.

3.5. பேக் அப் பைலாக, (.TGZ) என்ற துணைப் பெயருடன் உங்களுக்கு ஒரு ஸிப் செய்யப்பட்ட பைல் கிடைக்கும். இதனை விண் ஆர்.ஏ.ஆர். மூலம் திறந்து பார்க்கலாம். உங்கள் இமெயில் மெசேஜ் அனைத்தும் .EML என்ற துணைப் பெயர் கொண்ட பைலாகக் கிடைக்கும். இவற்றை அவுட்லுக், தண்டர்பேர்ட், இடோரா போன்ற எந்த ஒரு டெஸ்க் டாப் இமெயில் புரோகிராம் மூலமும் திறந்து பார்க்கலாம்.

ஸிம்ப்ரா புரோகிராம், மேலே சொன்ன இரண்டு புரோகிராம் போல இயக்குவதற்கு எளிதானதல்ல. ஆனால் பயன் அதிகம் உள்ளது.
மேலே காட்டப்பட்டுள்ள வழிகளின்படி, உங்களின் முக்கிய மெயில் மெசேஜ் களையும், இணைப்பு பைல்களையும் பேக் அப் எடுத்து சிடி, டிவிடி, எக்ஸ்ட்ரா ஹார்ட் ட்ரைவ், ப்ளாஷ் ட்ரைவ் என ஏதாவது ஒன்றில் பேக் அப் பைலாக வைத்துக் கொள்ளவும்.------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?

2 comments:

  1. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  2. ஒட்டு போட்டுட்டு தான் வந்தேன்

    ReplyDelete