மின்னஞ்சல் பிழைச் செய்திகள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, August 30, 2010

மின்னஞ்சல் பிழைச் செய்திகள்


சாப்பிடுகிறோமோ இல்லையோ, அன்றாடம் நமக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதுவும், அவற்றிற்கான பதில்களை அனுப்புவதும் நம் அன்றாட வேலையாக மாறி வருகிறது. இவை எல்லாம் சரியாகச் செல்லும் வரை நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் பல வேளைகளில், மின்னஞ்சல் பரிமாற்றத்திலும் நமக்குப் பல பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.Delivery Error: இந்த பிழைச் செய்தி சில வேளைகளில் 550 அல்லது 554 என்ற எண்ணுடன் குறிப்பிடப்படும். இது பொதுவாக அடிக்கடி பெறப்படும் பிழைச்செய்தியாகும். இதன் பொருள்: நீங்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி என ஒன்று இல்லவே இல்லை. இதற்கு எந்த மெயிலையும் அனுப்ப முடியாது என்பதுவே. இதற்குக் காரணம், முகவரி அமைப்பதில் ஏதேனும் சில எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். முகவரியில் உள்ள எண்கள் அல்லது வேறு குறியீடுகள் விடுபட்டிருக்கலாம்.

2.Unknown host: இதற்கான எண் எதுவும் இருக்காது. காரணங்கள்:1) முகவரியில் இறுதியில் உள்ள சர்வரின் பெயரில் எழுத்துப் பிழை, 2) அந்த பெயரில் இப்போது எந்த சர்வரும் இல்லை, அல்லது 3) அந்த சர்வரின் அமைப்பு இப்போது வேறாக இருக்கலாம்.

எனவே இந்த மின்னஞ்சல் முகவரியினை முழுமையாகச் சோதனை செய்திட வேண்டும். இதுவும் தீர்வு தரவில்லை என்றால், அஞ்சல் முகவரிக்கானவரை, வேறு வழிகளில் தொடர்பு கொண்டு சரியான முகவரியினைப் பெறவும்.

3. Mail not accepted: பிழை எண் 550 அல்லது 554 ஆக இருக்கலாம். யாருக்கு இந்த அஞ்சலை அனுப்பு கிறீர்களோ, அவருக்கான இந்த முகவரிக்கு ஒரு சிலர் மட்டுமே அஞ்சலை அனுப்பும் வகையில் வரையறை செய்யப்பட்டிருக்கலாம். அல்லது ஒரு குழு மட்டுமே அனுப்பும் வகையில் இருக்கலாம். இந்த அமைப்பினை அவர் மாற்றினால் தான் இந்த முகவரியினைப் பயன்படுத்தி, அஞ்சல் அனுப்ப முடியும்.

4. Service Unavailable: சில வேளைகளில் இது 550 என்ற எண்ணுடன் இருக்கும். அல்லது எண் இல்லாமல் இருக்கும். தற்போதைக்கு, இந்த முகவரிக்கான சர்வர் அஞ்சல் எதனையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை; அல்லது பராமரிப்பு காரணமாக அஞ்சல் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம். சில மணி நேரம் காத்திருந்த பின்னர், அஞ்சலை அனுப்பலாம்.

5. Sender’s address rejected:
பிழை எண் 550 அல்லது 554 ஆக இருக்கலாம். இது உங்களுக்கு ஒரு மோசமான செய்தி. உங்கள் முகவரியினை ஸ்பேம் மெயில் அனுப்பும் முகவரியாக, உங்கள் அஞ்சலைப் பெறுபவர் வரையறை செய்துள்ளார். அல்லது அவர் சார்ந்துள்ள குழு அது போல அமைத்திருக்கும். அவரை வேறு வழியில் தொடர்பு கொண்டு, கறுப்பு பட்டியலில் இருந்து உங்களின் முகவரியினை நீக்குமாறு கேட்டுக் கொள்ளலாம்.

6.Inbox Full :
சில வேளைகளில் 552 என்ற எண்ணுடன் இந்த பிழைச் செய்தி இருக்கலாம். குறிப்பிட்ட கால அவகாசத்தில், அஞ்சலைப் பெற வேண்டிய நபர், அதிக பட்ச மெயில்களைப் பெற்றிருக்கலாம். அவரின் அஞ்சல் பெறும் பெட்டியில் கொள்ளும் அளவிற்கு அஞ்சல்கள் பெறப்பட்டுள்ளதால், உங்கள் மெயில் திருப்ப அனுப்பப்பட்டுவிட்டது. எனவே மெயிலைப் பெற இருப்பவர், அவராக இந்த பாக்ஸில் உள்ள மெயில்களை நீக்கினால்தான், மேலும் அவருக்கு மெயில்கள் சென்றடையும்.

7.Message exceeds maximum file size: இந்த பிழைச் செய்தி சில வேளைகளில் 552 என்ற எண்ணுடன் தரப்படும். நீங்கள் உங்கள் அஞ்சலுடன் இணைத்துள்ள பைலின் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமானதாக இருப்பதாக பொருள். எனவே இணைக்கப்படும் பைலின் அளவை குறைக்க வேண்டும். அல்லது இணைப்பையே நீக்க வேண்டும். பைலின் அளவைக் குறைக்க இயலவில்லை என்றால், பைலை வேறு வழிகளில் அனுப்பலாம். வெளியாக பைல் மாற்றும் சேவைகள் தரும் பல தளங்கள் இதற்கென உள்ளன. இன்னும் பல பிழைச் செய்திகளை, மின்னஞ்சல் அனுப்பும்போது நாம் பெறலாம். இருப்பினும் மேலே காட்டப்பட்டுள்ள செய்திகளே நாம் அடிக்கடி சந்திக்கும் செய்திகளாகும்.

------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
No comments:

Post a Comment