ஃபைல்கள்
.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபர் ரீடர் உட்பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபைல்கள்
.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப் படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.
ரைட் க்ளிக் எத்தனை முறை
புரோகிராம்களை இயக்க மவுஸின் இடது பட்டனைக் கிளிக் செய்கிறோம். அதே போல நாம் அடிக்கடி பயன்படுத்தும் இன்னொரு செயல்பாடு மவுஸின் வலது பட்டனைக் கிளிக் செய்வது. இதனால் வித்தியாசமான மெனு ஒன்று கிடைக்கும். எடுத்துக்காட்டாக, டெஸ்க்டாப்பில் புதிய போல்டர் வேண்டுமா? ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் சென்று புதிய போல்டரைத் தயார் செய்கிறோம். பைல்களின் பெயர்கள் மீது ரைட் கிளிக் செய்து அதனை அழிக்கிறோம்; காப்பி செய்கிறோம்; சேவ் செய்கிறோம்; மறு பெயர் கொடுக்கிறோம். டெக்ஸ்ட் மற்றும் படங்களைத் தேர்வு செய்து அவற்றையும் மேலே சொன்ன அனைத்து செயல்பாடுகளுக்கும் உட்படுத்துகிறோம். இது ஒரு சில தான். எத்தனையோ செயல் பாடுகளுக்கு நாம் ரைட் கிளிக்கினைத்தான் சார்ந்திருக்கிறோம். மவுஸில் மேற்கொள்ளும் இந்த ரைட் கிளிக் பயன்பாட்டினை, கீ போர்டு வழியாகவும் மேற்கொள்ளலாம். ஷிப்ட் + எப்10 என்ற பட்டன்களை ஒரு சேர அழுத்துங்கள். நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கான ரைட் கிளிக் மெனு உங்களுக்குக் கிடைக்கும்.
75 கல்லூரிகளில் ஐ.பி.எம். மையம்
கம்ப்யூட்டர் பிரிவில் முதல் நிறுவனமாக பன்னாட்டளவில் இயங்கும் ஐ.பி.எம். நிறுவனம், இந்தியாவில் 60 நகரங்களில், 75 பொறியியல் கல்லூரிகளில் புதிய சிறப்பு கம்ப்யூட்டர் மையங்களை நிறுவ இருக்கிறது. ஏற்கனவே இயங்கும் மையங்களுடன் சேர்த்து இனி 150 மையங்களை ஐ.பி.எம். இயக்கும். இந்த மையங்கள் மூலம், மாணவர்கள் தாங்கள் கற்கும்போதே, புதிய கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களில் அனுபவ அறிவைப் பெறலாம். மேலும் சாப்ட்வேர் தொகுப்புகளை உருவாக்கும் திறனை வளர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் சாப்ட்வேர் தொழிலில் இயங்கும் நிறுவனங்களுக்கும், கம்ப்யூட்டர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கும் இணைப்பு ஏற்படும் என்று ஐ.பி.எம். தெற்காசிய பிரிவின் தலைவர் கோயல் தெரிவித்துள்ளார். பன்னாட்டளவில் இது போல, 2000 கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் ஐ.பி.எம். சிறப்பு கம்ப்யூட்டர் திறன் மையங்களை அமைத்து இயக்கி வருகிறது.
* கவனத்திற்கு
பயாஸ் (BIOS Basic Input Output System) : அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம். ஒரு கம்ப்யூட்டருக்கு மின்சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவயான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தேடிப் பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். இல்லை என்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
thevaiyaana thagaval....
ReplyDelete