மவுஸ் இயங்க மறுக்கையயில்.... - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, April 17, 2010

மவுஸ் இயங்க மறுக்கையயில்....


உங்கள் மவுஸ் திடீரென இயங்க மறுக்கலாம், அல்லது பட்டன்கள் கிளிக் செய்தாலும் எந்த வித செயலும் இன்றி சும்மா இருக்கலாம். இதனால் நாம் மவுஸை எடுத்து மீண்டும் கம்ப்யூட்டரில் இணைத்துப் பார்ப்போம். புதிய யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து வேலை செய்கிறதா எனச் சோதனை செய்திடுவோம். அல்லது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுவோம்.அப்படியும் மவுஸ் எனக்கென்ன என்று இருந்தால் நம் பொறுமை எல்லை மீறிப்போய் மவுஸை தூக்கி எறியும் அளவிற்குச் சென்று விடும். ஆனால் கம்ப்யூட்டரை இயக்க வேண்டுமே. என்னதான் தீர்வு? என எண்ணுகிறீர்களா? இதோ விண்டோஸ் அதற்கான வழிகளைத் தந்துள்ளது. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நம்லாக் கீ பேட் உங்களுக்கு மவுஸாக துணை புரியும் வகையில் செட் செய்திடலாம். அந்த வழிகளைப் பார்ப்போமா!


முதலில் ஆல்ட்+ஷிப்ட்+நம்லாக் கீகளை (Alt+Shift+NumLock) அழுத்துங்கள். ஒரு சிறிய மவுஸ் கீ விண்டோ கிடைக்கும். மவுஸ் கீகளை இயக்க நிலையில் வைக்க விரும்பினால் ஓகே கிளிக் செய்திடுங்கள்.மவுஸ் கர்சர் குறித்த டீடெய்ல்ஸ் தகவல்களைத் திருத்தி அமைக்க வேண்டுமென்றால் Settings பட்டனில் கிளிக் செய்திடுங்கள். மவுஸ் கர்சர் ஸ்பீட் மற்றும் பலவற்றை இதில் செட் செய்திடலாம். செட் செய்து முடித்தவுடன் கீழ்க்காணும் வகையில் உங்கள் நம்லாக் பேட் மவுஸாகச் செயல்படும்; அல்லது நீங்கள் செயல்படுத்தலாம்.* 1,2,3,4,6,7,8,9 ஆகிய கீகள் மவுஸ் கர்சர் செல்லும் திசையை நிர்ணயிக்கும்.


* 5 ஆம் எண்ணுக்கான கீ மவுஸ் கிளிக் பட்டனாகச் செயல்படும்.


* இன்ஸெர்ட் கீ மவுஸ் கிளிக் பட்டனாக இயங்கும்.


* + கீ ஏதேனும் ஒரு ஆப்ஜெக்ட் மீது கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்திட பயன்படும்.


* டெலீட் பட்டன் மவுஸை ரிலீஸ் செய்திட பயன்படும்.


நம்பர் கீ பேட் மவுஸுக்குப் பதிலாக இயங்குவதை நிறுத்த நம்லாக் பட்டனைத் தட்டவும்.

------------------- நன்றி -------------------


1 comment: