பயர்வால் – கம்ப்யூட்டர்களைத் தாக்க வரும் நச்சு புரோகிராம்களை நிறுத்தி நுழையவிடாமல் செய்து சிஸ்டங்களைக் காக்கும் ஒரு பெரிய புரோகிராம். பல இணைய தளங்கள் இத்தகைய பயர்வால் புரோகிராம்களை நமக்கு இலவசமாகத் தந்து உதவுகின்றன.
கூடுதலாக வசதிகள் உள்ள பயர்வால் புரோகிராம்களை கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இந்த பயர்வால் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் வேகத்தை மட்டுப் படுத்துகிறது என்று நீங்கள் எண்ணினால் அதன் இயக்கத்தினை தேவையற்ற போது நிறுத்தி வைக் கலாம்; பின் தேவைப்படும் போது இயக்கலாம். இதனை எப்படி மேற் கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
1. Start மெனு சென்று Control Panel செல்லவும்.
2. பின் Network Connections என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. பாப் அப் ஆகும் விண்டோவில் Local Area Connection என்பதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Properties டேப் மீது கிளிக் செய்திடவும். நீங்கள் Local Area Connection பயன்படுத்தாமல் விர்ச்சுவல் பிரைவேட் நெட் வொர்க் வி.பி.என். அல்லது டயல் அப் இன்டர்நெட் பயன்படுத்தினால் அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் டேப்களில் Properties டேப் தேர்ந்தெடுத்து பின் Advanced Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இனி பயர்வால் தேவை என்றால் "Protect my computer and network by limiting or preventing access to this computer from the Internet" என்பதில் செக் செய்திடவும். பயர்வால் தேவை இல்லை என்றால் இந்த டிக் மார்க்கை எடுத்துவிடவும். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.
5. நீங்கள் விண்டோஸ் பயர்வால் பயன்படுத்துபவராக இருந்தால் கண்ட்ரோல் பேனலில் உள்ள விண்டோஸ் பயர்வால் ஐகானில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் On (Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பயர்வால் இயக்கம் தேவை இல்லை என்றால் Off (Not Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
------------------- நன்றி -------------------
No comments:
Post a Comment