பயர்பாக்ஸ் இயக்கத்தினை வேகப்படுத்த - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, August 13, 2012

பயர்பாக்ஸ் இயக்கத்தினை வேகப்படுத்த

Increase Firefox Speed
பல பயனாளர்கள், தங்களின் மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் முன்பு இயங்கியதைக் காட்டிலும் மெதுவாக இயங்குவதாகவும், சில வேளைகளில் கிராஷ் ஆகி நிற்பதாகவும் கேள்விகளை எழுப்பி உள்ளனர். இது போன்ற தகவல்களைப் படிக்கையில், ஆமாம், எனக்குக் கூட இது போல ஏற்படுகிறது என்று ஒத்துக் கொள்கின்றனர். இதற்கான தீர்வினை இங்கு காணலாம்.

1. ப்ளக் இன் நீக்கம்: ப்ளக் இன் புரோகிராம்கள், பயர்பாக்ஸ் பிரவுசர் ப்ளாஷ், சில்வர்லைட், ஜாவா மற்றும் ஆபீஸ் புரோகிராம்களை நிர்வகிக்க உதவுகின்றன. ஆனால், பல ப்ளக் இன் புரோகிராம்கள் நமக்குத் தேவையே இல்லை. இவை இயங்கிக் கொண்டிருப்பதால், பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கம் சற்றுத் தாமதம் அடையலாம். எனவே இவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம். இதில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ப்ளக் இன் புரோகிராம்களை நாம் நீக்கவோ அல்லது அன் இன்ஸ்டால் செய்திடவோ முடியாது; அவற்றின் இயக்கத்தை முடக்கி வைக்கலாம். ஏதேனும் எக்ஸ்டன்ஷன் புரோகிராமின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் ப்ளக் இன் புரோகிராம்களை மட்டுமே நீக்கலாம். அந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமினை நீக்கினால், அவை தாமாக நீக்கப்படும்.

ப்ளக் இன் புரோகிராமினை முடக்கி வைக்க, பயர்பாக்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி மெனுவில், Addons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Addons Manager புதிய டேப் ஒன்றைத் திறக்கும். இந்த டேப்பின் இடது பக்கம் காணப்படும் Plugins டேப் மீது கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் முடக்கி வைக்க விரும்பும் ஒவ்வொரு ப்ளக் இன் எதிரே Disable பட்டனை இயக்கிவைக்கவும். முடக்கி வைக்கப்படும் ப்ளக் இன் புரோகிராம்கள் கிரே கலரில் காட்டப்படும். இவை மீண்டும் இயக்கப்பட வேண்டுமாயின், இங்கு மீண்டும் சென்று, Disable பட்டனைத் தேர்ந்தெடுத்ததை ரத்து செய்திட வேண்டும். முடக்கி வைக்கப்பட்ட ப்ளக் இன் புரோகிராம்கள் அனைத்தும் ப்ளக் இன் பட்டியலில் இறுதிக்குக் கொண்டு செல்லப்படுவதனைக் காணலாம்.
சில ப்ளக் இன் புரோகிராம்களிலேயே அவற்றை அன் இன்ஸ்டால் செய்திட வழி காட்டப்பட்டிருக்கும். அவை தேவை இல்லை எனில் அன் இன்ஸ்டால் செய்துவிடலாம். ப்ளக் இன் புரோகிராம்களை முடக்கி வைப்பதில் கவனம் வேண்டும். Flash புரோகிராமிற்குத் தேவையான ப்ளக் இன் புரோகிராம்களை முடக்கக் கூடாது. ஏனென்றால், இணையத்தில் இவை அடிக்கடி தேவைப்படும்.

2. எக்ஸ்டன்ஷன் நீக்கம்: பயர்பாக்ஸ் பிரவுசர் அதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களுக்குப் பெயர் பெற்றது. பலர் இதற்கென இவற்றை வடிவமைத்து இணையத்தில் இலவசமாகத் தந்து வருகின்றனர். பலவற்றை, மொஸில்லா தன் இணையதளத்தில் தருகிறது. விளம்பரங்களைத் தடுக்க, வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட, சமூக வலைத் தளங்களில் இணக்கமாகச் செயல்பட, ஏன் மற்ற பிரவுசர்களுக்கான கூடுதல் அம்சங்களை இங்கு பயன்படுத்த என எத்தனையோ பணிகளுக்கு எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. எந்த அளவிற்கு இந்த புரோகிராம் களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு பயர்பாக்ஸ் வேகம் குறைவாக இருக்கும். எனவே தேவைப்படாத எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை இயங்கா நிலையில் அமைப்பதே நல்லது.

மேலே கூறியபடி Addons Manager ஐத் திறக்கவும். இங்கு எக்ஸ்டன்ஷன் புரோகிராம் பட்டியல் கிடைக்கும். இவற்றில் எவை எல்லாம் தேவையில்லையோ, அவற்றின் எதிரே உள்ள Disable பட்டனை இயக்கிவைக்கவும். பயர்பாக்ஸ் ரீ ஸ்டார்ட் செய்திட உங்களிடம் அனுமதி கேட்கும். கொடுக்கவும். அப்போதுதான், நீங்கள் மேற்கொண்ட செயல்பாடு அமலுக்கு வரும்.

3. பிரவுசிங் டேட்டா நீக்கம்: பயர்பாக்ஸ் நாம் இணையத்தில் செல்லும் தளங்கள் குறித்த தகவல்களைத் தொடர்ந்து சேகரித்து வரும். தேடல்கள், தள முகவரிகள், குக்கீகள் எனப் பல வகையான பைல்களாக இவை இருக்கும். இவை தொடர்ந்து சேரும்போது, இவற்றின் சுமையால், பிரவுசர் வேகம் குறைந்து இயங்கலாம். எனவே இவற்றை நீக்குவது நல்லது. இதற்கு பயர்பாக்ஸ் பட்டன் கிளிக் செய்து, History | Clear Recent History எனத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் Clear Recent History டயலாக் பாக்ஸில், பலவிதமான ஆப்ஷன் கிடைக்கும். குறிப்பிட்ட நாள் குறித்து பிரவுசிங் ஹிஸ்டரியை நீக்கலாம். அல்லது அனைத்தையும் நீக்கலாம். அழித்துவிட்டால், மீண்டும் கிடைக்காது என்று அப்போது ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும். அழிப்பது உறுதியாகிவிட்டபடியால், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

அனைத்தையும் நீக்காமல், குறிப்பிட்ட இணைய தளத்திற்கான ஹிஸ்டரியை வைத்துக் கொண்டு மற்றவற்றை நீக்கலாம். இதற்கு பயர்பாக்ஸ் பட்டன் கிளிக் செய்து, டைக்கும் மெனுவில், History | Show All History எனச் செல்லவும். இங்கு Library dialog box கிடைக்கும். எந்த இணைய தளத்திற்கான ஹிஸ்டரியை அழிக்க திட்டமிடுகிறீர்களோ, அதனைப் பார்த்ததற்கான உத்தேச நாளைத் தேர்ந்தெடுக்கவும். அந்த காலத்தில் பார்த்த இணைய தளங்கள் அனைத்தும் வலது பக்கத்தில் பட்டியலிடப்படும். இதில் நீங்கள் இலக்கு வைத்த இணைய தளத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Forget About This Site என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். ஹிஸ்டரி அழிக்கப்படும்.

4. தானாக ஹிஸ்டரி அழிக்கப்படுதல்:
பயர்பாக்ஸ் பிரவுசரை மூடுகையில், பிரவுசிங் ஹிஸ்டரி சார்ந்த டேட்டா தானாக அழிக்கப்படும் வகையில் செட் செய்திடலாம். பயர்பாக்ஸ் பட்டன் கிளிக் செய்து, மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். Options டயலாக் பாக்ஸில், டூல் பாரில் Privacy பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் ஹிஸ்டரி பிரிவில் Use custom settings for history என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Clear history when Firefox closes என்று உள்ளதன் எதிரே உள்ள செக் பாக்ஸில் டிக் செய்திடவும்.
இப்போது Settings பட்டனைக் கிளிக் செய்திடவும். இங்கே Settings for Clearing History டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில், நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை மூடுகையில் எவற்றை எல்லாம் நீக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி தேவையற்ற குப்பைகள் உங்கள் பிரவுசரில் சேராது. உங்கள் பிரவுசரின் இயக்கமும் வேகமாக இருக்கும்.


------------------- நன்றி -------------------

இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.

3 comments:

 1. முதலீடு இல்லாமல் இணையத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை மிக எளிமையாக சம்பாரிக்க முடியும்.

  எளிய வழி முறையை நான் கற்று தறுகிறேன் நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் செலவிட்டால் போதும்.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete
 2. முதலீடு இல்லாமல் இணையத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை மிக எளிமையாக சம்பாரிக்க முடியும்.

  எளிய வழி முறையை நான் கற்று தறுகிறேன் நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் செலவிட்டால் போதும்.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete
 3. முதலீடு இல்லாமல் இணையத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை மிக எளிமையாக சம்பாரிக்க முடியும்.

  எளிய வழி முறையை நான் கற்று தறுகிறேன் நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் செலவிட்டால் போதும்.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete