புதிதாய் வந்துள்ள விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விண்டோஸ் எக்ஸ்புளோரர் பல புதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அவை இங்கு பட்டியலிடப்படுகின்றன.
1.அதிக வசதிகளுடன் எக்ஸ்புளோரர்: ஒரு போல்டர் அல்லது பைல் தேர்ந்தெடுத்து என்ன என்ன செயல்பாடுகளை மேற்கொள்வோமோ, அவை அனைத்தும் தனித்தனியாக பல பட்டன்களில் இயங்கும் வகையில் தரப்பட்டுள்ளது. காப்பி மற்றும் பேஸ்ட் வசதியிலிருந்து, அட்வான்ஸ்டு செக்யூரிட்டி ஆப்ஷன் வரை அனைத்தும் தரப்பட்டுள்ளது. இத்தனை இங்கு எதற்கு? என நீங்கள் கருதினால், உங்களுக்குத் தேவையற்றைதை மறைத்து வைக்கலாம். பின்னர், தேவைப்படும்போது இயக்கி பெறலாம். இயங்கும் வசதிக்கான டேப்பில் கிளிக் செய்தால், அது மறைக்கப்படுகிறது. மறைக்கப்பட்ட டேப்பில் கிளிக் செய்தால், அது இயக்கப்படுகிறது.
2. கூடுதல் வசதிகள்: மேலே சொல்லப்பட்டது போல, பட்டன்களில் சிங்கிள் கிளிக் செய்து பல செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அவற்றில் முக்கியமாக cut,copy,paste, copy path,file history, add as email attachment, file properties, hide/unhide items, create zip archive ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
3. மீண்டும் அப் பட்டன்: விண்டோஸ் எக்ஸ்பி வரை தரப்பட்டுப் பின்னர் எடுக்கப்பட்ட அப், முன்னர் மேற்கொண்ட செயல்பாடு மேற்கொள்ள, பட்டன் செயல்பாடு மீண்டும் தரப்பட்டுள்ளது. ஆனால் அட்ரஸ் பாரில் அப்போதைய போல்டர் டைரக்டரி காட்டப்படுவதால், இந்த பட்டன் கூடுதல் வசதியாகவே உள்ளது.
4. காப்பி/பேஸ்ட்/அழித்தலை இடை நிறுத்தலாம்: விண்டோஸ் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏதேனும் பைல் ஒன்றில் காப்பி/பேஸ்ட் அல்லது அழிக்கும் செயல் ஒன்றை மேற்கொண்டிருக்கையில், அதனை இடையே நிறுத்தலாம். இதனால் தவறுதலாகக் கட்டளை கொடுத்துவிட்டால், பைல் மாற்றத்தைத் தவிர்க்கலாம்.
5. டேப்பில் குழுவாக அமைத்தல்: பொதுவாகவே விண்டோஸ் எக்ஸ்புளோரர் பிரிவு பல குழுக்களாகவே தான் அமைக்கப்படுகிறது. இப்போது இது இன்னும் செம்மைப்படுத்தப்பட்டு கிடைக்கிறது. பைல் அல்லது போல்டர் தொடர்பான செயல்பாடுகள் அனைத்தும், குழுவாக அமைக்கப்பட்டு அவற்றிற்கான பட்டன்கள் தரப்பட்டுள்ளன. மேலும் பைல் ஒன்றைத் தேர்ந்தெடுத்த பின்னர், பைல் தொடர்பான டேப் ஒன்று தரப்படுகிறது. இதன் மூலம் அதன் மாறா நிலையில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராமில் பைலைத் திறக்கலாம்.
6. பைல் திறக்க புதிய மெனு: இதுவரை எந்த குறிப்பிட்ட அப்ளிகேஷன் புரோகிராமுடன் தொடர்பில்லாத பைல் தேர்ந்தெடுக்கப்படுகையில், Open With டயலாக் பாக்ஸ் காட்டப்படும். அதுவே இப்போது புதிய வகையில் அமைக்கப்பட்டு, பார்க்கவும் இயக்கவும் சிறப்பாக உள்ளது.
7. பைல் தகவல்களைத் திருத்த: முன்பு ஒரு பைலைத் தேர்ந்தெடுத்து அதன் விபரங்களைப் பார்க்க முயற்சிக்கையில், அது குறித்த தகவல்கள், கீழாகக் காட்டப்படும். இப்போது பைலைத் தேர்ந்தெடுங்கள்; பின்னர் வியூ டேப் சென்று Details Pane தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவின் வலது பக்கம், பைல் குறித்த தகவல்கள் தரப்படும். இந்த புதிய ஸ்டைலில் அமைக்கப்பட்டதுதான் மாற்றம் என்றாலும், தோற்றம் நன்றாகவும், வசதியாகவும் உள்ளது. கூடுதலாக, பைல் குறித்த தகவல்களை இங்கு எடிட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது. எனவே இதற்கு பைல் ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் திறக்க வேண்டியதில்லை.
8. டைட்டில் பார் ஷார்ட்கட்: விண்டோஸ் எக்ஸ்புளோரரில் தரப்பட்டுள்ள பல்வேறு பிரிவுகளை,நாம் விரும்புபவற்றை, அதன் விண்டோவின் டைட்டில் பாரில், பட்டன்களாக அமைத்து இயக்கலாம். இது நமக்கு விரைவான இயக்கத்தினைத் தருகிறது. முதல் முறை பார்த்து இயக்கிய போது இவையே முக்கியமானவைகளாகத் தெரிந்தன. இன்னும் புதிய பல செய்திகள் தொடர்ந்து தரப்படும்.
------------------- நன்றி -------------------
இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment