விண்டோஸ் XPக்கு விரைவில் மூடு விழா - மைக்ரோசாப்ட் அறிவிப்பு - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, June 5, 2012

விண்டோஸ் XPக்கு விரைவில் மூடு விழா - மைக்ரோசாப்ட் அறிவிப்பு

Microsoft Windows XP Stop
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினைக் கை கழுவ பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏப்ரல் 2014க்குப் பின்னர், எந்த வித மான உதவியும் எக்ஸ்பி பயன்படுத்துபவருக்கு வழங்கப்பட மாட்டாது என்ப தனை, மிகவும் உறுதியாக அறிவித்துள்ளது. எச்சரிக்கையாக வும் தந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் விரும்பிப் பயன் படுத்தும் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, ஏன் மைக்ரோசாப்ட் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது என்று நாம் எண்ணலாம். இதற்குக் காரணம், எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துபவருக்கு சப்போர்ட் தருவதற்கான செலவு தொகையே ஆகும். விண்டோஸ் 7 சிஸ்டம் பராமரிப்பிற்கான செலவினைக் காட்டிலும், எக்ஸ்பி சிஸ்டத்தினை நிர்வகிக்க, பராமரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கூடுதலாக ஐந்து மடங்கு செலவாகிறது. இதனாலேயே, மைக்ரோசாப்ட் இந்த முடிவினை எடுத்துள்ளது. பல ஆண்டு களாக இதனைச் சொல்லி வந்தாலும், இந்த ஆண்டில் தான் அறிவிப்பினை எச்சரிக்கை கலந்த சொற்களில் வெளியிட்டது மைக்ரோசாப்ட்.

இது குறித்து வெளியாகியுள்ள மைக்ரோசாப்ட் வலைமனைச் செய்தியில், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு நிறுவனங்கள் மாறினால், அதற்கான முதலீடு சார்ந்து, லாபத்தினையும் கூடுதலாகப் பெறுவார்கள்; செலவு குறையும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மேலும் அண்மையில் எடுத்த ஆய்வின் படி, ஏப்ரல் 2014க்குப் பின்னரும் கூட, நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் 11% பேர், தொடர்ந்து எக்ஸ்பியினைப் பயன்படுத்துவார்கள் என்று அறியப்பட்டுள்ளது. எனவே தான் மைக்ரோசாப்ட் தொடர்ந்து தன் நிலைப் பாட்டினை அடிக்கடி எச்சரிக்கையாக வெளியிட்டு வருகிறது.

எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், தங்கள் கம்ப்யூட்டரினைப் பராமரிக்க 11.3 மணி நேரம் செலவழிக்கின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு 2.3 மணி நேரம் போதுமானது. இதனால் தகவல் தொழில் நுட்ப வல்லுநரின் நேரம், அதற்கான பணம் வீணாகிறது. விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்த, ஹார்ட்வேர் பிரிவில் ஏற்படுத்தப்படும் கூடுதல் மூலதனத்தினை, ஒரு நிறுவனம் ஓராண்டில் பெற்றுவிடலாம் என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் கூடுதல் லாபம் 137% ஆக இருக்கும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வெளியிட உள்ளது. எனவே, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், உற்பத்தி ஒப்பந்தம் மேற்கொண்ட கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 8 சிஸ்டத்துடனேயே வெளியிடுவார்கள். அப்படியானால் விண்டோஸ் 7 சிஸ்டம், அதன் பின்னர் கிடைக்காதா என்ற சந்தேகம் பலருக்கு வரலாம்.

விண்டோஸ் 8 வெளியான பின்னரும், இரண்டு ஆண்டுகளுக்கு, விருப்பமுள்ளவர்களுக்கு விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திட மைக்ரோசாப்ட் அனுமதி அளித்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இப்போது 46.1% கம்ப்யூட்டர்களில் இயங்கி வருகிறது. இது மறைந்து வரும் வேகத்தினைக் கணக்கிட்டால், ஏப்ரல் 2014க்குப் பின்னரும், எக்ஸ்பி 17.6% கம்ப்யூட்டர்களில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு மாற யோசிக்கிறீர்களா? அல்லது விண்டோஸ் 8 சிஸ்டம் வந்த பின்னர், அதற்கே மாறிக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறீர்களா?


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

3 comments:

 1. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.

  கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete
 2. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.

  கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete
 3. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.

  கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete