லேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி பயன்பாடு ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, August 16, 2011

லேப்டாப் கம்யூட்டரில் மின்சக்தி பயன்பாடு !


பேட்டரி சக்தியில் இயங்கும் லேப்டாப்பில், நாம் எந்த அளவிற்கு அதனைச் சரியாக, செட் செய்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு அதன் திறன் நமக்கு நீண்ட நேரம் கிடைக்கும். லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கான செட்டிங்ஸ் அமைத்திடும் விண்டோக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

மின்சக்தி நிர்வாக அமைப்பினை மேற்கொள்ள நமக்குத் தரப்படும் விண்டோ Power Options என்பதாகும். இதனைப் பெற ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன. எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில், Run கட்டளை மூலம் இயக்கிப் பெறலாம். Win+R கீகளை அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில் powercfg.cpl என டைப் செய்திடவும். அல்லது விஸ்டாவிலும், விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் ரன் கட்டளை கொடுக்காமல், power options என ஸ்டார்ட் சர்ச் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டினால், இந்த விண்டோ கிடைக்கும். கிடைக்கும் பவர் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில், மின்சக்தி யை நிர்வாகம் செய்திட பல ஆப்ஷன்ஸ் தரப்பட்டுள்ளதைக் காணலாம்.

விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Balanced, Power saver, and High performance. Power saver எனப் பல வழிமுறைகள் காட்டப்படுகின்றன. இவை வழக்கமான மின் சக்தி மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வழி காட்டுகின்றன. இவற்றுடன் தரப்படும் Balanced என்ற திட்டம், மின்சக்தி சேமிப்பு மற்றும் கூடுதல் திறன் இயக்கத்தினை இணைத்துத் தருகிறது. மூன்றாவதாக, High performance என்ற திட்டம், எப்படி அதிக திறன் கொண்டதாக லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கலாம் என்று வழி காட்டுகிறது.

இந்த விண்டோவின் இடது பக்கத்தில் மேலும் சில ஆப்ஷன்கள் காட்டப் படுகின்றன. இவற்றில் ஒன்று நாம் லேப்டாப் கம்ப்யூட்டரின் மேல் பகுதியைக் கொண்டு அதனை மூடுகையில் (Choose what closing the lid does) என்ன நடக்கிறது என்று சொல்கிறது.

இதில் Change plan settings என்ற லிங்க்கில் கிளிக் செய்கையில், Edit Plan Settings என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படுகிறது. இங்கு எப்படி மின்சக்தியை மிச்சப்படுத்துவதுடன், கம்ப்யூட்டரையும் கூடுதல் திறனுடன் இயக்கலாம் என்பதற்கான வழிகள் காட்டப்படுகின்றன.

நாம் அமைத்த மாற்றங்களை, சில காரணங்களுக்காக நீக்க வேண்டும் என்றால், Restore default settings for this plan என்பதில் கிளிக் செய்திட மீண்டும் தொடக்க நிலைக்கு நாம் அழைத்துச் செல்லப்படுவோம்.

Power Options டயலாக் பாக்ஸில் Change advanced power settings என்பதில் கிளிக் செய்தால், மேலும் சில கூடுதல் வழிகள் காட்டப்பட்டிருப்பதனைக் காணலாம். இதனைக் கிளிக் செய்தவுடன் Advanced settings என்ற விண்டோ கிடைக்கும். இதன் மூலம் மின்சக்தியினை நிர்வாகம் செய்திட, கூடுதலாக அது குறித்து நன்கு அறிந்திருப் பது நல்லது. அல்லது இதனைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்.
------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?

No comments:

Post a Comment