சிஸ்டம் டிப்ஸ் ..... - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, May 15, 2011

சிஸ்டம் டிப்ஸ் .....






கண்ட்ரோல் + இஸட் ( Ctrl + Z)

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் தாங்கள் அவசரத்தில் செய்த தவறை உடனடியாக நிவர்த்தி செய்திட, அதாவது செய்த தவறை ஒரு விளைவும் இல்லாமல் ஆக்கிட கண்ட்ரோல் + இஸட் கீ சேர்க்கையைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதனைப் பெரும்பாலும் வேர்ட் தொகுப்பில் பயன்படுத்துபவர்களே அதிகம். அதில் மட்டுமே இந்த கீகள் சேர்க்கை பயன்படும் எனப் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த கீ சேர்க்கை விண்டோஸின் அனைத்து பயன்பாட்டுத் தொகுப்புகளிலும் செயல்படும். எடுத்துக் காட்டாக, டெஸ்க் டாப் திரையில் ஐகான் ஒன்றைப் பதிக்கிறீர்கள். அதனை வைத்தது தவறு என்று அடுத்த கணம் எண்ணினால், உடனே கண்ட்ரோல் + இஸட் கீகளை அழுத்துங்கள். ஒட்டி வைத்த ஐகான் மறைந்து போகும். விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரிலும் இது செயல்படும். எடுத்துக்காட்டாக பைல் ஒன்றை அழிக்கிறீர்கள். பரவாயில்லை, அப்படியே இருக்கட்டும் என , அதனை மீட்க எண்ணினால் ரீசைக்கிள் பின் தேடிப் போக வேண்டாம். கண்ட்ரோல் + இஸட் கீகளை அழுத்தவும். பைல் உடனே கிடைக்கும். ஆனால் நீங்கள் பைலை அழிக்கும்போது, ரீசைக்கிள் பின் தொட்டிக்கு அது போகக் கூடாது என எண்ணி ஷிப்ட் கீயைச் சேர்த்து அழுத்தியிருந்தால் கண்ட்ரோல் + இஸட் கீயை அழுத்தினாலும் பைல் கிடைக்காது.

டூல் பார் பட்டன்கள்



உங்கள் டூல் பாரில் உள்ள பட்டன்கள் சிறியதாக உள்ளதே என்று கவலையாக உள்ளதா? அவற்றைப் பெரியதாக வைத்து இயக்க விருப்பமா? கீழே குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுங்கள். டூல்ஸ் ( Tools ) மெனு செல்லவும். அங்கு ( Customize ) என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது ஏதேனும் டூல்பாரில் வலதுபுறமாக மவுஸைக் கிளிக் செய்திடவும். அதன்பின் வரும் பிரிவுகளில் (Customize) ஐத் தேர்ந்தெடுக் கவும். பின் கிடைக்கும் விண்டோவில் ( Options tab ) பிரிவில் பார்த்தால் அங்கு ( Large Icons ) என்ற சொற்களுக்கு எதிரே ஒரு சிறிய கட்டம் கிடைக்கும். அதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். உடனே பட்டன்கள் அனைத்தும் பெரியதாக இருக்கும். டெக்ஸ்ட் அப்படியே தான் இருக்கும். இந்த பட்டன் அளவு உங்களுக்குப் பிடித்தால் குளோஸ் ( Close ) பட்டனைக் கிளிக் செய்திடவும். இனி பட்டன் புதிய அளவிலேயே இனி இருக்கும். இது உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். மீண்டும் பழைய அளவிலேயே இருக்கும். இதில் ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த செயல்பாட்டினை எந்த விண்டோஸ் தொகுப்பில் மேற்கொண்டாலும், அது அனைத்து விண்டோஸ் தொகுப்பிலும் எதிரொலிக்கும். எடுத்துக்காட்டாக வேர்ட் தொகுப்பில் மேற்கொண்டாலும், பிற எக்ஸெல் போன்ற ஆபீஸ் தொகுப்புகளிலும் இந்த பெரிய பட்டன்கள் கிடைக்கும்.

கர்சர் பெரிதாக வேண்டுமா?

உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் கர்சர் பெரியதாகவும், உங்களுடைய கம்ப்யூட்டரில் சிறியதாகவும் இருக்கிறதே என்று உங்களுக்குக் கவலையாக உள்ளதா? சற்றுப் பெரியதாக கர்சர் இருந்தால் தேவலாம் என்று எண்ணுகிறீர்களா? இந்த ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஸ்டார்ட் பட்டனை முதலில் அழுத்தி அதிலிருந்து மேலெழும் கட்டத்தில் செட்டிங்ஸ் மற்றும் கண்ட்ரோல் பேனல் (Settings, Control Panel.) செல்லவும். அதில் மவுஸ் ஐகான் ( Mouse icon ) என்றிருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள பாயிண்ட்டர்ஸ் ( Pointers ) என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு ட்ராப் பாக்ஸ் கிடைக்கும். அதன் தலைப்பாக “Scheme.” என்ற சொல் இருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் இயக்கும் விண்டோஸ் தொகுப்பிற்கேற்ற வகையில் Windows Standard (extra large) (system scheme) அல்லது Windows Standard (large) (system scheme) என ஒன்று இருக்கும். இதில் எந்த திட்டம் உங்கள் கணிப்பொறியில் இருந்தாலும், அது வழக்கமான கர்சரைக் காட்டிலும் சற்றுப் பெரிய கர்சரையே கொடுக்கும். மேலும் பல வகையான கர்சர்களை அங்கு பார்க்கலாம். தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி கர்சர் நீங்கள் தேர்ந்தெடுத்த அளவில், வகையில், தோற்றத்தில் இருப்பதனைக் காணலாம்.



------------------ நன்றி -------------------


இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
 

No comments:

Post a Comment