Windows 7 கேள்வியும் பதில்களும் ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, May 22, 2011

Windows 7 கேள்வியும் பதில்களும் !


புதியதாய் உருவாகும் தேவைகளினால், பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். இது குறித்த பல கேள்விகள் நமக்கு அடிக்கடி வருகின்றன  இவற்றில் பலரும் கேட்பது, விண்டோஸ் 7 சிஸ்டத்தில், 32 மற்றும் 64 பிட் பதிப்புகளில் எவற்றைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தான். அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, இங்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் 7க்கு மாற முடிவு செய்துவிட்டேன். 64 பிட் இயக்க விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறினால், வழக்கம்போல், கூடுதல் திறனுடன் செயல்பட முடியுமா?

பதில்: விண்டோஸ் 7 அறிமுகப்படுத்த இருந்த நிலையிலேயே, பல முறை தெளிவுரை கள் கம்ப்யூட்டர் மலரில் தரப்பட்டன. இதில் அடிப்படையில் இரண்டு கேள்விகளுக்கு நீங்கள் பதில் தர வேண்டும். உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டர், விண்டோஸ் 7 சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ளுமா? அடுத்ததாக, அது 64 பிட் ப்ராசசரைக் கொண்டுள்ளதா? முதல் கேள்விக்கு, மைக்ரோசாப்ட் தன் தளத்தில் இலவசமாகத் தரும் Windows 7 Upgrade Advisor புரோகிராமை, உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து, இயக்கிப் பார்க்கவும். உங்களுடைய கம்ப்யூட்டர் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்ளுமா இல்லையா என்பதற்கான பதில் மட்டுமின்றி, எவற்றை நீங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்பதுவரை தகவல்களைப் பெறலாம்.

இரண்டாவது கேள்விக்கும் இது பதில் தரும். இந்த புரோகிராம் இயங்கி முடிந்து, தன் அறிக்கையைத் தந்தவுடன், அறிக்கையின் தொடக்கத்தில், விண்டோவின் மேல் பக்கம் பார்க்கவும். அதில் “32bit report” மற்றும் “64bit report” என இரண்டு டேப்கள் இருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் து64 ப்ராசசரில் இயங்குகிறது எனவும், விண்டோஸ் 7 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பினை, பதிக்கலாம் எனவும் பொருளாகிறது. 64 பிட் டேப்பில் கிளிக் செய்து, மாற்றத்தினை எப்படி மேற்கொள்ளலாம் என்பது குறித்த தகவல்களைக் காணவும்.

இன்னொரு எளிய, விரைவான வழியும் உள்ளது. கிப்சன் ரிசர்ச் (Gibson Research) வழங்கும் Securable என்னும் புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கவும். இது உங்கள் சிபியுவினை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பான அம்சங்கள் குறித்து அறிக்கை தரும். கூடுதலாக, இது திரையில் வருகையில், பெரிய சைஸில் 32 அல்லது 64 என சிஸ்டம் பிட் அளவினைக் காட்டும். இதிலிருந்து உங்கள் சிபியு எதற்கு தயாராய் உள்ளது எனத் தெரியவரும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், 64 பிட் சிஸ்டத்தினைத்தான் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டுமா?

பதில்: என் தனிப்பட்ட கருத்து, 64 பிட் தேவை இல்லைதான். நீங்கள் 64 பிட் அளவில் இயங்கும் அப்ளிகேஷன் தொகுப்புகளைப் பயன்படுத்தவில்லை என்றால், 64 பிட் விண்டோஸ் 7 சிஸ்டம் தேவை இல்லை. அதே போல அப்ளிகேஷன் புரோகிராம்கள் சிலவும், 64 பிட்டில் கிடைக்கின்றன. இவையும் தேவை இல்லைதான். நீங்கள் மீடியா உருவாக்குவதில், கம்ப்யூட்டரைப் பயன் படுத்துபவராக இருந்தால், விர்ச்சுவல் மெஷின்களை இயக்குபவராக இருந்தால், உங்களுக்கு 64 பிட் சிஸ்டம் மற்றும் ப்ராசசர் உள்ள கம்ப்யூட்டர் தேவை.

அப்படியே 64 பிட் சிஸ்டம் அமைத்து விட்டால், நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் துணை சாதனங்கள், எடுத்துக் காட்டாக பிரிண்டர், ஸ்கேனர் போன்றவை, 64 பிட் இயக்கத்திற்கான ட்ரைவர் புரோகிராம்களைக் கொண்டிருக்க வேண்டும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் பயன் படுத்துவதாக இருந்தால், கம்ப்யூட்டரில் ராம் மெமரி எவ்வளவு இருக்க வேண்டும்? 1கிகா பைட்ஸ் போதுமா?

பதில்: சரியான கேள்வி. இப்போது விற்பனையாகும் கம்ப்யூட்டர் சிஸ்டங்க ளில், 2 ஜிபி ராம் தொடக்க நிலையிலேயே வழங்கப்படுகிறது. 64 பிட் விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துவதாக இருந்தால், இது போதாது. 64 பிட் சிஸ்டங்களில், அப்ளிகேஷன் புரோகிராம்கள், இரு மடங்கு மெமரியை எடுத்துக் கொள்கின்றன. இதனை நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டம் 32 மற்றும் 64 பிட் அமைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ராம் மெமரியைச் சோதனை செய்து அறிந்து கொள்ளலாம். விண்டோஸ் 7 புரபஷனல் (32 பிட்) சிஸ்டத்தினை புதியதாக இன்ஸ்டால் செய்து, எந்த அப்ளிகேஷன் புரோகிராமும் இயங்காமல், ராம் மெமரியைப் பார்த்தால், அது 800 எம்பி ராம் மெமரியைப் பயன்படுத்து வதனை அறியலாம். அதே ஆப்பரேட்டிங் சிஸ்டம் 64 பிட்டில், 1.6 ஜிபி ராம் மெமரி பயன்படுத்துவதனைக் காணலாம். எனவே 2 ஜிபி என்பது, இதற்குப் போதாது என்பதை உணரலாம். 2 ஜிபி ராம் மெமரியில், விண்டோஸ் 64 பிட்அமைத்து இயக்கலாம் என்றாலும், பல வேளைகளில் அது சிக்கலைத் தரும்.



----------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

1 comment:

  1. நண்பரே!நான் windows 7 ultimate பயன்படுத்தி வருகிறேன்.அதில் deep freez ஐ பயன்படுத்தினால் கணினி hang ஆகிறதே ஏன்?அதை சரி செய்ய வழி உண்டா?கூறுங்களேன்.

    ReplyDelete