ஈமெயில் இணைப்புகளை ஸ்கேன் செய்க ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, May 27, 2011

ஈமெயில் இணைப்புகளை ஸ்கேன் செய்க !

படம், பாடல், வீடியோ பைல்கள் உங்கள் இமெயிலுடன் இணைக்கப் பட்டு வந்தால் என்ன செய்வீர்கள்? ஆர்வம் மேலிட அதனை உடனே டவுண்லோட் செய்திடக் கிளிக் செய்வீர்கள். டவுண்லோட் ஆனவுடன், பைல் மீது கிளிக் செய்து இயக்குவீர்கள். இயக்கத் தொடங்கியவுடன், சில பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரை மூடலாம்! அல்லது வேறு பாதக விளைவு களை ஏற்படுத்தலாம். இந்த இணைப்பு கள் அல்லது அவற்றுடன் இணைக்கப் பட்ட புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரின் தகவல்களைக் கைப்பற்றும் கெடுதல் புரோகிராம்களாக இருக்கலாம்.

எனவே இவற்றை ஸ்கேன் செய்து டவுண்லோட் செய்வது நல்லது. இப்போ தெல்லாம், பல இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள், இது போன்ற இணைக்கப் பட்ட பைல்களை ஸ்கேன் செய்திடும் வசதியினைக் கொண்டுள்ளன. இருப்பினும் ஹேக்கர்கள் வடிவமைத்து அனுப்பும் கெடுக்கும் புரோகிராம்கள் முன் இவை தோற்றுவிடும் வாய்ப்புகளும் இருக்கலாம் என்பதால், நாம் தான் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.

இதற்கென இலவசமாக ஸ்கேன் செய்திடும் தளம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் இதுதான். அப்படியே அந்த இணைப்பு பைலை scan@virustotal.com என்ற முகவரிக்கு இமெயிலாக அனுப்ப வேண்டியதுதான். இதற்கு அந்த இமெயில் அஞ்சலில், செய்தி உள்ள இடத்தில் உள்ள அனைத்து சொற்களையும் நீக்கவும். சப்ஜெக்ட் லைனில் SCAN என டைப் செய்திடவும். சில நிமிடங்களில் உங்கள் இமெயில் முகவரிக்கு, அந்த இணைப்பின் பாதுகாப்பு தன்மை குறித்த அறிக்கை கிடைக்கும். அதில் நீங்கள் அனுப்பிய பைல் எத்தனை வைரஸ் ஸ்கேனர்களால், ஸ்கேன் செய்யப்பட்டு அவை காட்டிய முடிவுகள் உங்களுக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கும். இந்த இணைய தள சேவை மிக நம்பிக்கைக்குரிய ஒன்றாக அனைவரும் மதிப்பிட்டுள் ளனர். எனவே இந்த தளம் ஸ்கேன் செய்து, கெடுதல் ஒன்றும் இல்லை என்ற பைல்களை, நாம் நம்பிக்கையுடன் திறந்து பயன்படுத்தலாம்.


இது இலவசம் என்பதால், மின் அஞ்சலில் கிடைக்கும் அனைத்து இணைப்பு பைல்களையும் இதற்கு அனுப்ப வேண்டாம். சந்தேகப்படும் அல்லது அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் இணைப்பு கோப்புகளை மட்டும் அனுப்பி முடிவினைப் பெறவும்.

மேலும் சந்தேகங்கள் இருப்பின், இணைப்பு பைலை டவுண்லோட் செய்து விட்டு, அதனைத் திறக்காமல் அல்லது இயக்காமல், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பில் அதனை ஸ்கேன் செய்து முடிவினைக் காணவும்.



---------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?


No comments:

Post a Comment