கர்சர் முனையில் உலகக் கோப்பை 2011 - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, February 15, 2011

கர்சர் முனையில் உலகக் கோப்பை 2011


உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான போட்டிகள் தொடங்க இருக்கின்றன. தேர்வுகள், அலுவலக வேலைகள், ரேஷன் கடை பொருள் வாங்குதல் என அனைத்தையும் ஒத்திபோட்டுவிட்டு, "டிவி' முன்னரும், முடிந்தால் கிரிக்கெட் நடக்கும் ஸ்டேடியத்தில், மனைவியை ஏமாற்றி வாங்கிய கள்ள மார்க்கெட் டிக்கெட்டில் கிரிக்கெட் பார்க்கச் செல்ல மக்கள் தயங்க மாட்டார்கள். 13 நகரங்களில், 14 நாடுகள் பங்கு பெறும் விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தியாவில் 10 நகரங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் இவை நடத்தப் படுகின்றன. பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 02 வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த போட்டிகளைத் தொடர்ந்தோ அல்லது குறிப்பிட்ட போட்டிகளை மட்டும் காணவேண்டும் என்றால் என்ன செய்யலாம்? நிகழ்ச்சி நிரலைத் தேடி அறிவது எப்படி?

இதற்கெனவே அருமையான ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷனுடன் தளம் ஒன்று http://www.cricbuzz.com/cricket-schedule/series/228/icc-world-cup-2011 என்ற முகவரியில் இயங்குகிறது.


இந்த தளத்திற்குச் சென்றால், உடன் கிரிக்கெட் மைதானம் போல ஓவல் வடிவில் திரை காட்டப்படுகிறது. சுற்றிலும் டேப்கள் அமைக்கப்பட்டுள்ளன. பங்கு பெறும் நாடுகள், நடைபெறும் நகரங்கள், நாட்கள், அமைக்கப்பட்டுள்ள இரண்டு குழுக்கள், குவார்ட்டர், செமி பைனல் மேட்ச்கள் என அனைத்திற்கும் டேப்கள் தரப்பட்டுள்ளன. இவற்றில் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், உடன் டேப்பில் குறிப்பிட்டது சார்பான அனைத்து தகவல்களும் தரப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, இந்தியா என்ற டேப்பில் கர்சர் செல்கையில், திரையின் நடுவே, இந்தியா எந்த நாட்டுக் குழுவினை எதிர்த்து, என்று, எங்கே விளையாட்டுக்களில் பங்கேற்கிறது என்ற விபரம் காட்டப்படும்.

அதே போல, குறிப்பிட்ட நாளுக்கான டேப்பில் கர்சர் சென்றால், அந்த நாளில் நடைபெறும் போட்டிகள் சார்பான தகவல்கள் தரப்படுகின்றன. போட்டிகள் நடைபெறும் நகரம், ஸ்டேடியத்தின் பெயர் கொண்ட டேப்பில் கர்சர் செல்கையில், அந்த ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கின்ற போட்டிகள், கலந்து கொள்ளும் குழுக்கள், நாட்கள் பட்டியல் காட்டப்படுகின்றன. அனைத்தும் மிக அழகாக, வேகமாகக் கிடைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் காலத்தில் நிச்சயமாக இந்த தளத்தில் தகவல்கள் உடனடியாக அப்டேட் செய்யப்படும். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, எப்படி எல்லாம் ஒரு நிகழ்வைக் காட்டலாம் என்று அறியவிரும்புபவர்களுக்கும் இது ஒரு நல்ல தளம்.


------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

1 comment: