முழுத்திரையில் பிரிண்ட் பிரிவியூ - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, February 21, 2011

முழுத்திரையில் பிரிண்ட் பிரிவியூ


டாகுமெண்ட் அச்செடுக்கும் முன் அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை பிரிண்ட் பிரிவியூ காட்டும். இதன் தோற்றம் ஸ்கிரீனில் தெரியும் போது டாஸ்க் பார் மற்றும் டூல்பார்களும் காட்டப்படும். இதனால் அதன் தோற்றத்தின் முழு பரிமாணம் நமக்குக் கிடைக்காது. இவற்றைத் தற்காலிகமாக மறைத்து பிரிண்ட் பிரிவியூ காட்சியைக் காட்டும்படி செட் செய்திடலாம்.

இதற்கு டாகுமெண்ட்டைத் திறந்த பின்னர் File மெனுவில் Print Preview தேர்ந்தெடுக்கவும். அதன் பின் மேலாக உள்ள Close பட்டன் அருகே Full Screen பட்டன் கிடைக்கும்.இதில் கிளிக் செய்தால் திரை முழுவதும் டாகுமெண்ட் Print Preview கிடைக்கும். தோற்றத்தை மதிப்பிட்டு என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அவற்றை மேற்கொண்ட பின்னர் கீழாக Close Full Screen பிரிவில் கிளிக் செய்திடலாம். அல்லது Esc கீ அழுத்தலாம்.

சப்ஸ்கிரிப்ட் மற்றும் சூப்பர் ஸ்கிரிப்ட்

வேர்டில் சில வேளைகளில் பார்முலாக்கள் மற்றும் குறியீடுகள் அமைக்கையில் சப்ஸ்கிரிப்ட் மற்றும் சூப்பர் ஸ்கிரிப்ட், ( Subscript, Superscript ) அதாவது சொல்லுக்கு மேலாகவும் கீழாகவும் சிறிய அளவில் எண் அல்லது எழுத்து அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு Font மெனு சென்று அங்கிருக்கும் கட்டங்களை டிக் செய்து அமைக்க வேண்டும். பின் அதனை நீக்க வேண்டும். இதற்குப் பதிலாக சுருக்கு வழி ஒன்று உள்ளது. சொல்லுக்கு அருகே அமைத்திட வேண்டிய எண் அல்லது எழுத்தை அமைத்திடுங்கள். பின் அதனைத் தேர்ந்தெடுத்து Ctrl + Shift + = ஆகியவற்றை ஒரு சேர அழுத்தினால் சூப்பர் ஸ்கிரிப்டும் Ctrl + = அழுத்தினால் சப் ஸ்கிரிப்டும் கிடைக்கும்.


------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment