பயர்பாக்ஸ் பிரவுசரில் கால்குலேட்டர் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, December 15, 2010

பயர்பாக்ஸ் பிரவுசரில் கால்குலேட்டர்




நமக்கு கால்குலேட்டர் எப்போதெல்லாம் தேவைப் படும் என்று முன்கூட்டியே கணக்கிட முடியாது. எப்போது வேண்டுமானாலும் தேவைப் படலாம். இன்டர்நெட்டில் உலா வருகையில், இது தேவைப்பட்டால், பிரவுசரை மூடி, பின்னர், புரோகிராம்ஸ் சென்று, கால்குலேட்டரை இயக்க நேரம் வீணாகிவிடும். இதற்கெனவே, பயர்பாக்ஸ் பிரவுசரில், அதன் டாஸ்க் பாரில் வைத்து இயக்கும் வகையில் ஒரு கால்குலேட்டர் தரப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சயின்டிபிக் கால்குலேட்டராக உள்ளது என்றால், அனைவருக்கும், குறிப்பாக மாணவர் களுக்கும், இளைஞர்களுக்கும் நன்மைதானே. இந்த பயர்பாக்ஸ் டாஸ்க்பார் சயின்டிபிக் கால்குலேட்டர் ஓர் ஆட் ஆன் தொகுப்பாக, புரோகிராமாகக் கிடைக்கிறது. இதனைப் பெற https://addons.mozilla.org/enUS/firefox/addon/6521/ என்ற முகவரிக்குச் செல்லவும். அடுத்து, அங்குள்ள “Add to Firefox” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

உடனே “Software Installation” டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் கிடைக்கும் “Install Now” பட்டனில் கிளிக் செய்திடவும். டாஸ்க் பார் சயின்டிபிக் கால்குலேட்டருக்கான புரோகிராம், உங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரில் பதியப்படும். அடுத்து “Restart Firefox” பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டர் நீங்கள் மேற்கொள்ள இருப்பதைப் புரிந்து கொண்டு, விண்டோஸ், டேப்ஸ், பிரவுசர் ஆகிய அனைத்தையும் புதிய இணைப்பு களுடன் தொடங்கும். பிரவுசர் மீண்டும் கிடைத்தவுடன், கால்குலேட்டர் ஐகானில் கிளிக் செய்து, டெக்ஸ்ட் ஏரியாவில் நீங்கள் என்ன கணக்குகளைப் போட விரும்புகிறீர்களோ, அவற்றை என்டர் செய்திடவும். இந்த கால்குலேட்டர் ஐகானில் ரைட் கிளிக் செய்து, உங்கள் எண் அடிப்படையை மாற்றிக் கொள்ளலாம்.

------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?




No comments:

Post a Comment