இதன் மூலம், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று மட்டுமே கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், அதனை புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும் என்ற வசதி ஏற்பட்டுள்ளது.
'வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை' வலைத்தளத்தை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டில் ஒரு மொழியை தேர்வு செய்து பயன்படுத்தும் வசதி உள்ளது.
வலைத்தள முகவரி: www.tnvelaivaaippu.gov.in
வேலைவாய்ப்புக்காக புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, சாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த வலைத்தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு, தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். இதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. பதிவில் மாறுபாடு ஏதேனும் இருப்பின் அதனை உரிய சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பகத்தை நேரில் அணுகி சரிபார்த்துக் கொள்ளலாம்.
இந்த வலைத்தளத்தின் நோக்கம்...
ஒளிவுமறைவற்ற, திறமான புகாருக்கிடமில்லாத சேவையினை அளிப்பதற்கென வேலைவாய்ப்பகங்களைக் கணினி வழி இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்லைனில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறை தொடர்பான கேள்வி - பதில்கள் :
1. நேர்முனையில் (ஆன்லைனில்) பதிவு செய்வது எப்படி?
தோன்றும் படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் துல்லியமெனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.
2. கூடுதல் பதிவு செய்வது எப்படி ?
ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கொடுக்கவும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.
3. ஆன்லைனில் புதுபிக்க இயலுமா?
ஆம். ஆன்லைனில் புதுபிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுபிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பித்தல் விண்ணப்பிக்கலாம்.
4. எனது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா?
தங்களது தற்காலிகப் பதிவு எண்ணை பயன்படுத்துவோர் அடையாளமாகவும், பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்.
5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா?
ஆம். வேட்பர்கள் தாங்களே முகவரி மாற்றலாம்.
6. ஆன்லைன் முன்னுரிமைச் சான்று பதிய இயலுமா?
முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் அவ்வாறு பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.
7. எந்த வகை வேலை வாய்ப்புகளை நான் எதிர்பார்க்கலாம்?
அனைத்து மாநில அரசு/மாநில அரசுச் சார்ந்த/மைய அரசு / மைய அரசுச் சார்ந்த உள்ளாட்சி மற்றும் அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள் தங்கள் தேவைகளை பதிவுமுப்புப்படி பரிந்துரைக்குமாறுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நிரப்பிக்கொள்ளலாம். மைய அரசு நிறுவனங்கள் வெளிச்சந்தைகளிலும் ஆள் சேர்க்கின்றன.
8. பணிவிடுவிப்பான ஒரு நாள் எவ்வாறு பதிவு செய்வது?
வேலைவாய்ப்பகம் மூலம் பணிகிடைத்து ஒரு பணிக்காலியிடம் இல்லாததால் விடுவிப்பு ஆகிய தேதியிலுருந்து 90 நாட்களுக்குள் மீள்பதிவு செய்து பதிவுமூப்புபைப் பெற்று கொள்ளலாம்.
9. நான் ஒரு முதுநிலை பட்டதாரி. நான் பதிவு விண்ணப்பத்தை அளிக்க வேண்டியது சென்னையிலா? மதுரையிலா?
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டத்தினர் சென்னையிலும், இதர மாவட்டத்தினர் மதுரையிலும் பதியலாம்.
10. எந்த நேரத்தில் எத்தனை தகுதியினை நான் பதியலாம்?
எத்தனைக் கல்வித் தகுதிகள் வேண்டுமானாலும் பதியலாம். பின்னர் கூடுதல் தகுதிகள் ஏதும் பெற்றால் இணையதள ஆன்லைனில் பதியலாம்.
11 பதிவில் எதாவது குறைபாடு இருந்தால் எவ்வாறு சரி செய்வது?
அவ்வாறு சரி செய்ய அனைத்துச் சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் காணவும்.
12. 'வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை' வலைத் தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார்?
இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.
13. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை?
நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.
வலைத்தள முகவரி: www.tnvelaivaaippu.gov.in
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
உபயோகமான தகவல்! நன்றி!
ReplyDeletefine post
ReplyDeletetnteu results
tamilnadu results
india employment results
india results
tnteu.in results
pallikalvi.in results
share prices live
pallikalvi results
useful informative site
tn velai vaaippu
tn velai vaaippu