கம்ப்யூட்டரில் நாம் அதிகம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பு அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நாம் உருவாக்கிய ஆவணங்கள் மீண்டும் நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. நாம் என்ன திருத்தங்களை மேற்கொண்டோம் என்பது நினைவில் இருப்பதில்லை. அப்போதுதான், அடடா! இதற்கான இறுதி நிமிட பேக் அப் பைல் இருந்தால் நல்லது அல்லவா! என்று எண்ணுகிறோம். வேர்ட் இதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. நாம் தான் அதனை செட் செய்திட வேண்டும். அவை குறித்து இங்கு காணலாம்.
வேர்ட் தொகுப்பு இரண்டு வகையான பேக் அப் பைல் காப்பிகளை உருவாக்க வழி தருகிறது. முதலாவது பேக் அப், நீங்கள் குறிப்பிட்ட பைலில் ஏதேனும் மாற்றங்களை உருவாக்கும் முன் அமைக்கப்படுவது. இன்னொன்று குறிப்பிட்ட காலத்தில் ஏற்படுத்தப்படும் பேக் அப் காப்பி.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007 தொகுப்பு வைத்திருப்பவர்கள் ஆபீஸ் பட்டன் அழுத்திப் பின்னர், வேர்ட் ஆப்ஷன்ஸ் செல்லவும். வேர்ட் 2010, ரிப்பனில் பைல் டேப் காட்டும். அதில் ஆப்ஷன்ஸ் என்பதனைக் கிளிக் செய்திடவும்.)
2. டயலாக் பாக்ஸில் இடது பக்கம் உள்ள Advanced என்பதனைக் கிளிக் செய்திடவும்.
3. கீழாக உள்ள Save பிரிவிற்குச் செல்லவும்.இதில் Always Create Backup Copy என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
4. நீங்கள் விருப்பப்பட்டால் Allow Background Saves என்ற பெட்டியிலும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தலாம்.
5. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இங்கு ஏற்படும் பேக் அப் காப்பி, நாம் திறக்கும் டாகுமெண்ட் பைலை எடிட் செய்வதற்கு முன் ஏற்படுத்தப்படும் ஒரு காப்பி. இந்த பேக் அப் பைலின் துணைப் பெயர் மட்டும் WBK என மாறும். அதாவது வேர்ட் இங்கே அந்த பைலுக்கு வேறு பெயரினைச் சூட்டிப் பத்திரமாக வைத்துக் கொள்கிறது. இந்த பைலை வேறு ஒரு இடத்தில் சேவ் செய்து வைத்துக் கொள்ளுமாறு செட் செய்திட முடியாது. டாகுமெண்ட் பைலுடன் இந்த பேக் அப் பைலும் ஒரே டைரக்டரியில் தான் சேவ் செய்யப்படும். நீங்கள் டாகுமெண்ட்டை எடிட் செய்து சேவ் செய்திடுகையில், இறுதியாக மேற்கொள்ளப் பட்ட திருத்தத்துடன் பைல் சேவ் செய்யப்படும். அதற்கு முந்தைய நிலையில் இருந்த பைல், பேக் அப்பாக வைத்துக் கொள்ளப்படும். எனவே எத்தனை முறை நீங்கள் ஒரு பைலை சேவ் செய்தாலும், இறுதி வடிவத்தில் ஒரு ஒரிஜினல் பைலும், இறுதி திருத்தத்திற்கு முற்பட்ட பேக் அப் பைல் என இரண்டு பைல்கள் மட்டுமே அந்த டாகுமெண்ட்டிற்கு இருக்கும்.
இன்னொரு வகையான ஆட்டோமேடிக் பேக் அப் பைலை நாம் உருவாக்கலாம்
நாமாகவே, இவ்வளவு நிமிடங்களுக்குள் டாகுமெண்ட் டினை சேவ் செய்திடும்படி அமைக்கலாம். நாமாக, பைலை அவ்வப்போது சேவ் செய்திட மறந்துவிட்டால், பைல் தானாகவே சேவ் செய்திடப்படும். இது சேவ் செய்யப்படுவதனை நாம் உணர மாட்டோம். வேர்ட் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகி முடக்கப்படுகையில், தானாக சேவ் செய்யப்பட்ட பைல் நமக்குக் கிடைக்கும். அடுத்த முறை வேர்ட் தொகுப்பினை நாம் திறக்கையில், "Recovered" என்ற தலைப்பில் இறுதியாக சேவ் செய்யப்பட்ட பைல்கள் நமக்குக் கிடைக்கும். இந்த ஆட்டோ ரெகவர் (AutoRecover) பேக் அப் வழியை நாமாக செட் செய்துவிடலாம்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். (வேர்ட் 2007 தொகுப்பு வைத்திருப்பவர்கள் ஆபீஸ் பட்டன் அழுத்திப் பின்னர், வேர்ட் ஆப்ஷன்ஸ் செல்லவும். வேர்ட் 2010, ரிப்பனில் பைல் டேப் காட்டும். அதில் ஆப்ஷன்ஸ் என்பதனைக் கிளிக் செய்திடவும்.)
2. டயலாக் பாக்ஸில் இடது பக்கம் உள்ள Save என்பதனைக் கிளிக் செய்திடவும்.
3. Save AutoRecover Information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. வேர்ட் சேவ் செய்வதற்கான நீங்கள் விரும்பும் கால இடைவெளியை இங்கு அமைக்கவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை இங்கு அமைக்கலாம்.
5. நீங்கள் வேர்ட் 2010 பயன்படுத்து பவராக இருந்தால், Keep the Last Auto Recovered File If I Close Without Saving என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
6. மீண்டும், நீங்கள் விருப்பப்பட்டால், இந்த ஆட்டோ ரெகவர் பைல்களுக்கு, ஏற்கனவே வேர்ட் மாறாத நிலையில் வைத்திருக்கும், டைரக்டரி இடத்தை மாற்றி, நீங்கள் விரும்பும் டைரக்டரியை அமைக்கலாம்.
7. மாற்றங்களை ஏற்படுத்திய பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
உங்களுக்கு ஒரு எண்ணம் வரலாம். ஆவணங்களை நாம் உருவாக்குகையில், நாமாக அவ்வப்போது சேவ் செய்து விட்டால், இந்தப் பிரச்னை வராதே என்று நீங்கள் எண்ணலாம். இந்த எண்ணம் சரிதான். ஆனால் எத்தனை பேர் அடிக்கடி சேவ் செய்கிறோம். ஆவணத்தை உருவாக்கும் பணியில், நம் சிந்தனைப் போக்கிற்குத்தான் முதல் இடம் தருவோம். சேவ் செய்திட மறந்து போவோம். அல்லது நீண்ட கால இடைவெளியில், 15 நிமிடத்திற்கு ஒரு முறை, சேவ் செய்திடுவோம். மேலும் கம்ப்யூட்டர் இந்த வேலைகளை நமக்கென செய்திட முடியும் என்கிற போது, அதனை வேலை வாங்குவது தானே நல்லது. பேக் அப் பைல் இருந்தால், வேர்ட் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, பேக் அப் பைல்களைக் கொண்டு சரி செய்துவிடலாம்.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
No comments:
Post a Comment