மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, May 20, 2010

மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள்

எங்கு பார்த்தாலும் மின்வெட்டு. கிடைக்கின்ற சிறிது நேரத்தைப் பயன்படுத்தி நம் கம்ப்யூட்டர்களை இயக்கி பைல்களைத் தயார் செய்து அனுப்ப வேண்டியுள்ளது. அனைவருக்கும் நாம் வீணாக மின் சக்தியைப் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம்மேலோங்கியுள்ளது. தேவைப்படாத போது மின்விசிறிகளையும் விளக்குகளையும் அறைகளில் நாம் இல்லாத போது அணைத்து விட்டு தேவைப்படும்போது போட்டுக் கொள்கிறோம்.

ஆனால் கம்ப்யூட்டரில் என்ன செய்வது? அடிக்கடி அணைத்து பின் மீண்டும் இயக்க முடியாதே! இதற்கு கம்ப்யூட்டரிலேயே தரப்பட்டுள்ள சில வழிகளைப் பார்க்கலாம்.நாம் கம்ப்யூட்டரில் செயல்படாத போது மின் சக்தியை வீணாகப் பயன்படுத்தாமல் இருக்க விண்டோஸ் இயக்கத் தொகுப்பு சில வழிகளைத் தந்துள்ளது. இந்த வழி லேப் டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிகமாக உதவும் வகையில் உள்ளது.

முதலில் ஓர் எளிய வழியைப் பார்க்கலாம். டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதில் கிளிக் செய்க. இதனால் நமக்கு Display Properties விண்டோ கிடைக்கும். இதில் Screen Saver டேபில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவின் கீழாக Power என்ற பெயரில் ஒரு பட்டன் இருக்கும். இந்த பட்டனில் கிளிக் செய்தால் Power Options Properties என்ற விண்டோ கிடைக்கும். இதில் பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும். முதல் ஆப்ஷன்ஸ் மூலம் கம்ப்யூட்டர் சில காலம் எந்த செயல்பாட்டிலும் ஈடுபடாமல் இருந்தால் மானிட்டரை ஆப் செய்திடும்படி அமைக்க வழி செய்திருக்கும். இதில் எவ்வளவு நேரம் என்பதனை அம்புக் குறியைக் கிளிக் செய்வதன் மூலம் அமைக்கலாம். இந்த நேரம் அங்கு தரப்பட்டிருக்கும் நான்கு ஆப்ஷன்களில் மிகக் குறைந்ததாக இருப்பது நல்லது. இதனை செட் செய்தால் செட் செய்த காலத்தில் கம்ப்யூட்டர் செயல்பாடின்றி இருந்தால் மானிட்டர் தானாக ஆப் ஆகிவிடும். மீண்டும் மவுஸை சற்று ஆட்டினாலோ அல்லது கீ போர்டில் ஒரு கீயை தட்டினாலோ மானிட்டர் உயிர் பெறும்.


அடுத்த ஆப்ஷன் மூலம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவை ஆப் செய்திடலாம். குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் எந்த செய லையும் மேற்கொள்ளவில்லை என்றால் ஹார்ட் டிஸ்க்கிற்குச் செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் தேவைப்படுகையில் கிடைக்கும். இங்கும் நேரத்தை செட் செய்திட முன்பு கூறியபடி வசதி தரப்பட்டுள்ளது. இதனை நான் அவ்வளவாகப் பயன்படுத்துவது இல்லை; ஏனென்றால் இதனால் மிச்சப்படுத்தப்படும் மின்சாரம் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இருக்காது. இதற்குப் பதிலாக கம்ப்யூட்டரை ஸ்டேண்ட் பை என்னும் நிலையில் வைக்கலாம். ஹார்ட் டிஸ்க்கையும் இந்த வழக்கத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்றால் அதன் காலத்தை 30 நிமிடம் முதல் 1 மணி வரை அமைக்கலாம். மூன்றாவது ஆப்ஷன் கம்ப்யூட்டரை ஸ்டேண்ட் பை நிலையில் வைக்க உதவுகிறது. இதனால் மிக மிகக் குறைந்த அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆப்ஷனை அமைத்தால் மீண்டும் கம்ப்யூட்டர் இயக்கத்தைப் பெற கம்ப்யூட்டரில் உள்ள பவர் பட்டனை அழுத்த வேண்டியதிருக்கும். இருப்பதிலேயே மிகப் பயனுள்ள ஆப்ஷன் இதுதான். இதன் மூலம் மிக அதிகமாக மின்சக்தியை மிச்சம் செய்திடலாம். மேலும் விரைவாக இயக்கத்தைத் திரும்பவும் பெற முடிகிறது. அடுத்த ஆப்ஷன் ஹைபர்னேஷன் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அனைத்து பைல்களும் சேவ் செய்யப்பட்டு மின்சக்தி நிறுத்தப்படுகிறது


இதனால் நீங்கள் செட் செய்திடும் நேரம் மிக அதிகமாக இருக்க வேண்டும். இதிலிருந்து மீண்டும் கம்ப்யூட்டர் தன் இயக்கத்தைப் பெற சிறிது கூடுதலாக நேரம் எடுக்கும். மேலும் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த புரோகிராம்கள் அனைத்தும் தானாகத் திறக்கப் பட்டுக் காத்திருக்கும். மேலே கூறப்பட்ட வழிகளில் எது உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்குச் சரியாக உள்ளதோ அதனைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்


------------------- நன்றி -------------------


No comments:

Post a Comment