பாதுகாப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி? - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, May 4, 2010

பாதுகாப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி?


கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டில் நாம் நம் பாதுகாப்பிற்குப் பல இடங்களில் பாஸ்வேர்ட்களை அமைக்க வேண்டியுள்ளது. இதனை அமைக்கையில் பெரும்பாலும் நாம் நமக்குத் தெரிந்தவர்கள் பெயர், திருமண தேதி, ஊரின் பின்கோட் எண், பிறந்த நாள் போன்றவற்றைக் கலந்து அமைக்கிறோம். இந்த தகவல்கள் எல்லாம் உங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குத் தெரிந்ததாயிற்றே. அவர்கள் ஒரு பாதியைத் தெரிந்து கொண்டாலே அடுத்த பாதியை அவர்களே அறிந்து கம்ப்யூட்டரில் மற்றும் இணையத்தில் உங்கள் கோட்டையில் நுழைந்துவிடுவார்களே.

இதாவது பரவாயில்லை; உங்கள் வங்கி அக்கவுண்ட்டிற்கான பாஸ்வேர்டை அறிந்து கொண்டால் உங்கள் பணமெல்லாம் மாயமாய்ப் போய்விடுமே. இதற்கு என்ன செய்யலாம்? பாதுகாப்பான பாஸ்வேர்டை அமைக்க வேண்டும்; அதனையும் அதி பாது-காப்-பாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு சிலர் எத்தனை பாஸ்வேர்ட்களை மனதில் நினைவில் வைத்துக் கொள்வது என்று ஒரே பாஸ்வேர்டை அமைத்திருப்பார்கள். இது அதைக் காட்டிலும் மோசமானது. ஒன்றை அறிந்து கொண்டால் உங்களின் அத்தனை ரகசிய இடங்களும் அலிபாபா கண்ட குகையாகிவிடும். எனவே பாதுகாப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என்றும் அதனை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்றும் இங்கு காணலாம்.


1. பாதுகாப்-பான பாஸ்வேர்ட் என்பது எழுத்துக்களும் எண்களும் இணைந்த கோவையாக இருக்க வேண்டும். சொற்கள் அல்லது எண்கள் மட்டும் என்றால் ஒரு சிலரால் எளி-தாகக் கண்டுபிடிக்க முடியும். இரண்டும் கலந்தது என்றால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. இதனால் தான் சில வங்கிகள் மற்றும் இணைய தளங்கள் பாஸ்வேர்டில் கட்டாயம் எழுத்துக் களும் எண்களும் இருக்க வேண்டும் என கண்டிஷன் போடுகின்றன.


2.
ஒரு பாஸ்வேர்ட் குறைந்-தது 8 கேரக்டர்களும் அதிக பட்ச அளவில் 12ம் கொண்டு அமைக்கப்பட வேண்-டும். இதில் அமையும் எழுத்துக்-களில் கேப்பிடல் மற்றும் சிறிய எழுத்துக்கள் இருக்கலாம். குறைந்தது ஏதேனும் ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கலாம் (*-%$#@). உங்களுடைய பெயர், பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டதாக இருக்கக் கூடாது. எனவே எடுத்துக்காட்டாக s64&lq67 என இருக்கலாம். இதில் 9 கேரக்டர்கள் உள்ளன. பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்கள் உள்ளன. முதலில் இதனை நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும். ஆனால் போகப்போகச் சரியாகிவிடும். இதற்குப் பதிலாக brilliant போன்ற சொற்களை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால் எளிதாக யாரும் கண்டுபிடித்து விடுவார்கள்.

3. இன்னொரு கெட்ட பழக்கம் நம்மிடையே உண்டு. அது பாஸ்வேர்ட்களை எழுதி வைப்பது. எத்தனை நாட்களுக்கு எழுதி வைத்துள்ள ஏட்டினை பாதுகாப்பாக வைக்க முடியும். நீங்கள் இல்லாத போது இதனை யாரும் பார்த்துவிட்டால் எளிதாக மற்றவர்கள் பயன்படுத்தி விடுவார்களே! எனவே கூடுமானவரை எதிலும் எழுதிவைக்காமல் மனதிற்குள் வைத்துக் கொள்ளலாம்.


4. ஒரு சிலர் ஆண்டாண்டு காலமாய் பாஸ்வேர்டினைத் தங்கள் சொந்தப் பெயர் போல மாற்றாமல் வைத்திருப்பார்கள். இதுவும் தவறாகும். அடிக்கடி பாஸ்வேர்டினை மாற்ற வேண்டும். ஏனென்றால் பல இணைய தளங்கள் அனுப்பும் மால்வேர் போன்ற புரோகிராம்கள் இந்த பாஸ்வேர்டினை அறியும் வகையில் உருவாக்கப்படுகின்றன. அவையும் பாஸ்வேர்டினை அறிந்து அந்த புரோகிராமினை அனுப்பியவர்களுக்கு அனுப்பி வைக்கின்றன. இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றுவது நல்லது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.

என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com


------------------- நன்றி -------------------

No comments:

Post a Comment