
மவுஸ் இருக்கிறதா; அப்படியானால் பல ட்ரிக்குகளை நீங்கள் மேற் கொள்ளலாம்.


பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களைப் பயன்படுத்துகையில் இணையப் பக்கங்களில் உள்ள ஹைப்பர் லிங்க்குகளின் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு கிளிக் செய்தால் லிங்க்குடன் சம்பந்தப்பட்ட தளம் புதிய டேப்பில் திறக்கப்படும். அதே போல ஒரு டேப் மீது மவுஸ் வீல் கொண்டு கிளிக் செய்தால் அந்த டேப் மூடப்படுவதுடன் அது நம் பார்வையிலிருந்து அகற்றப் படும். டேப் ஓரமாக உள்ள சிறிய பெருக்கல் அடையாளத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய் வதைக் காட்டிலும் இது எளிதல் லவா!
மவுஸ் வீலைப் பயன்படுத்தி இ�ணைய தளப் பக்கங்களில் முன்னும் பின்னும் செல்ல முடியும். பயர்பாக்ஸ் பிரவுசரில் நிறைய டேப்கள் திறந்திருக்கையில் டேப் பாரின் இரு முனைகளிலும் ஒரு அம்புக் குறி அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் மறைந்திருக்கும் பிற டேப்களைக் காணலாம். இதைக் காட்டிலும் ஓர் எளிய வழி உள்ளது. டேப் பாரில் எங்கு வேண்டுமென்றாலும் உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று வைத்து உங்கள் மவுஸ் வீலை மேலும் கீழுமாக நகர்த்தவும். மறைந்துள்ள டேப்கள் காட்டப்படும்.
உங்கள் மவுஸ் பாய்ண்டர் ஸ்கிரீனில் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிப்பது கஷ்டமாக இருக்கிறதா? மவுஸ் பாய்ண்டர் ஸ்கீமைத் திறந்து பாய்ண்டரைப் பெரிதாகவோ அல்லது வேறு வடிவிலோ மாற்றிக் கொள்ளலாம். இதற்கு Start /Settings/Control Panel /Mouse எனச் செல்லவும்.
இங்கு Pointers டேபில் கிளிக் செய்திடவும். மேல் பிரிவில் புதிய பாய்ண்டர் ஒன்றை கீழ் விரியும் மெனுவில் இருந்து தேர்ந்தெடுக்கவும். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். உங்களுடைய கம்ப்யூட்டரில் இது போன்ற வேறு மவுஸ் பாய்ண்டர் ஸ்கீம் கிடைக்கவில்லை என்றால் http://support.microsoft.com/default.aspx?scid=kb;ENUS;q154500 என்ற தளத்திற்குச் செல்லவும். இந்த தளத்திலிருந்து எட்டு வெவ்வேறு மவுஸ் பாய்ண்டருக்கான திட்டத்தினை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
கிளிக் லாக் என்றொரு அருமையான வசதியை விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் எம்.இ. ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் காணலாம். இதன் விசேஷம் என்ன? பொதுவாக டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்திட அதன் தொடக்க இடத்தில் கர்சரை அழுத்திப் பிடித்துக் கொண்டு பின் அழுத்தியவாறே அப்படியே தேர்ந் தெடுக்கபட வேண்டிய இடம் வரை இழுத்து வந்து முடியும் இடத்தில் விட்டுவிடுவோம். டெக்ஸ்ட் செலக்ட் ஆகிவிடும்.
கிளிக் லாக் வசதியை இயக்கிவிட்டால் இது போல அழுத்திப் பிடித்துக் கொண்டே இழுக்கும் வேலை இல்லை. டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் ஒரு கிளிக்; முடிவில் ஒரு கிளிக். காரியம் முடிந்தது. டெக்ஸ்ட் செலக்ட் ஆகிவிட்டது. இந்த இரண்டிற்கும் இடையே உள்ள நேரத்தையும் நீங்கள் கிளிக் லாக் மூலம் செட் செய்திடலாம்.
இதை எங்கிருந்து பெறுவது? என்று தேட வேண்டாம். உங்கள் சிஸ்டத்திலேயே உள்ளது. Settings/Control Panel/Mouse செல்லவும். பின் Button டேப் கிளிக் செய்திடவும். கீழாக உள்ள "Turn on Click Lock" என்ற பாக்ஸில் டிக் செய்திடவும். மீண்டும் கிளிக் செய்து அழுத்தியவாறே பழையபடி வேண்டும் என்றால் Settings பட்டன் அழுத்தவும்.
அடோப் போட்டோ ஷாப் அப்ளிகேஷன் புரோகிராமில் ஒன்றை ஸூம் செய்திட என்ன செய்கிறீர்கள்? டூல் பாரிலிருந்து ஸூம் டூலைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறீர்கள். அல்லது கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் ஸூம் செய்திட உங்களுக்குக் கை கொடுக்கிறது. ஆல்ட் + ஸ்பேஸ் பார் அழுத்தினால் ஸூம் குறைகிறது. இவற்றை எல்லாம் மறந்திடுங்க! படத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு ஜஸ்ட் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்துங்க.
வெப் பிரவுசிங் செய்திடுகையில் பயர்பாக்ஸ் பிரவுசரில் தேவையற்ற டேப் ஒன்று திறக்கப்படுகிறதா? அதன் உள்ளே என்ன உள்ளது என்று பார்க்கக் கூட உங்களுக்கு விருப்பம் இல்லையா? தேவையற்ற டேப் மீது உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். இப்போது மவுஸின் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தி ஒரு கிளிக் செய்திடுங்கள். டேப் அதனுடன் இணைந்த தளம் எல்லாம் காணாமலே போயிருக்கும்.
இணையதளத்தில் உள்ள டெக்ஸ்ட்டை ஒவ்வொரு வரியாகப் பொறுமையாகப் படிப்பவரா நீங்கள்! உங்களுக்கு உதவ மவுஸ் தயாராக உள்ளது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸ் ஸ்குரோல் வீலை நகர்த்துங்கள். ஒவ்வொரு வரியாகத் தள்ளப்படும். பயர்பாக்ஸில் பல புக்மார்க்குகளை ஏற்படுத்தி விட்டீர்கள். உங்கள் புக் மார்க்குகள் எல்லாம் நான்கு அல்லது ஐந்து வகைப் பட்ட பொருள் குறித்தவையாக உள்ளன. எடுத்துக் காட்டாக கம்ப்யூட்டர் டிப்ஸ் குறித்த தளங்களுக்கான புக்மார்க்குகள், ஆன் லைனில் பத்திரிக்கைகளைப் படிப்பதற்காக சில புக்மார்க்குகள், ஹார்ட் அட்டாக் வராமல் இருப்பதற்கான தளங்களுக்கானவை எனப் பல உள்ளன.
இவற்றை ஒவ்வொரு வகைக்கான போல்டர்களை உருவாக்கி அந்த போல்டர்களுக்குள் இவற்றை வகைப்படுத்தி போட்டு வைத்தால் புக் மார்க்குகளின் நீண்ட பட்டியலில் ஒவ்வொன்றாகத் தேடித் தேடி திறக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட போல்டர்களைத் திறந்து தேவையான புக் மார்க்குகளின் மீது கிளிக் செய்து திறந்து படிக்கலாம். சரி, போல்டர் ஒன்றில் ஒன்றுக்கொன்று சார்ந்த தளங்களின் பெயர்கள் தானே இருக்கப் போகின்றன. எப்படியும் அனைத் தையும் பார்க்க வேண்டும்.
மொத்தமாக இவற்றைத் திறக்க முடியுமா? முடியும் என்கிறது பயர்பாக்ஸ். சம்பந்தப்பட்ட போல்டர் மீது மவுஸ் ஸ்குரோல் வீல் கொண்டு கிளிக் செய்தால் அந்த போல்டரில் உள்ள அனைத்து புக்மார்க்குகளுக்கான அனைத்து இணைய தளங்களும் திறக்கப் படும்.
No comments:
Post a Comment