TCS நிறுவனம் 25000 பேர்களை பணிக்கு தேர்வு செய்கிறது! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, December 19, 2009

TCS நிறுவனம் 25000 பேர்களை பணிக்கு தேர்வு செய்கிறது!

டிசிஎஸ் நிறுவனம் வரும் 2010-2011 ம் ஆண்டில்  25000 பேர்களை பணிக்கு தேர்வு செய்ய இருக்கிறது.கணினித் துறையில் எற்பட்டு வரும் சாதகமான போக்கை மனதில் கொண்டு Tata Consultancy Sevrice தனது  அடுத்த ஆண்டுக்கான திட்டங்களை வகுத்துள்ளது.



       திரு.அஜாய் முகர்ஜி
                                                                                                
இதை அந்நிறுவனத்தின் பன்னாட்டவிலான பணியாளர் நிர்வாகி திரு.அஜாய் முகர்ஜி கூறும் போது "அடுத்த ஆண்டுக்கான வணிக திட்டத்தை நாங்க இப்போதே முடிவு செய்து விட்டோம். வரும் ஆண்டில் எங்களுக்கு கூடுதலாக தேவைப்படும் பணியாளர்கள் எண்ணிக்கை சுமார் 24,885 ஆக இருக்கும்.எங்களிடம் தற்போது 1.41 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள்.பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் எட்டாம் Semester-ருக்கு தயாராகும்போது எங்கள் வளாக நேர்காணல்கள் தொடங்கும்" என்றார்.




       திரு.என். சந்திரசேகரன்


டிசிஎ.ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், மேலான் இயக்குநரும் ஆன திரு.என். சந்திரசேகரன், "புதிய தொழில் நுட்பங்கள் வரும் பொது அவற்றை உரிய முறையில் பயன்படுதிக் கொள்ள ஏற்ற ஆராய்ச்சிகள் தேவை. எனவே கணினி அறிவியலில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபடும் 200 மாணவர்களுக்கு வரும் 5-ந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 40 பேர்கள் என்ற கணக்கில் நிதி உதவி செய்ய இருக்கிறோம். இந்த உதவி தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டு வரும் விரைவான வளர்ச்சிகளை பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை சிறந்த முறையில் ஆராய்ச்சியின் வாயிலாக பெறுவதற்கு வழி வகுக்கும்" என்றார்.    



---------------------------------நன்றி --------------------------------------


 

1 comment: