உங்கள் வலைப்பூவின் மதிப்பு என்ன? - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, November 1, 2009

உங்கள் வலைப்பூவின் மதிப்பு என்ன?

இங்கு மதிப்பு என்று நான் கூறுவது வலைப்பூவின் ( Rank அல்ல),உங்கள் வலைப்பூ எவ்வளவு பணம் மதிப்பு கொண்டது என்று.

( ஒன்னும் இல்லைங்க உங்க வலைபூவை நீங்கள் விற்க நினைத்தால்  அது எவளோக்கு போகும் என்பது தான் )

நான் அனைவரும் நமது வலைப்பூவின் ரேங்க்-ஐ தான் இவ்வளவு  காலமும் பார்த்து இருப்போம் ஆனால் இங்கு நாம் நமது வலைப்பூ எவ்வளவு பணம் மதிப்பு கொண்டது என்று பார்க்கலாம்.

இதற்கு இரண்டு தளங்கள் உதவுகிறது




How Much Is Your Website Worth? எனும்  இடத்தில உங்கள் வலைப்பூவின் முகவரியை கொடுத்த உடன்,அவர்கள் உங்கள் தளத்தை 12 வித பரிசோதனை செய்து

1.Detecting Website
2.Initial Analysis
3.Checking Site Usage
4.Checking Site Popularity
5.Checking Site Recognition
6.Checking Site Longevity
7.Checking Search Engines Recognition
8.Checking Inlink
9.Checking Search Engines Qty
10.Checking Search Engines Population
11.Checking Inlink #2
12.Calculating All Results

உங்கள் தளத்தின் பண மதிப்பை சொல்லிவிடுவார்கள்





இங்கு உங்கள் தள முகவரியை கூடுத்து Calculate என்று கூடுத்தால் உங்கள் தளத்தின் பண மதிப்பை சொல்லிவிடுவார்கள்

இது வரை நாம் நமது வலைப்பூவின் பண மதிப்பை பார்த்து  விட்டோம்,ஒருவேளை நீங்கள் உங்கள் தளத்தை விற்க நினைத்தால்? என்ன செய்வது? அதற்கும் ஒரு தளம் உதவுகிறது.




இங்கு சென்று நீங்கள் ஒரு தளத்தை விற்க நினைத்தலோ/வாங்க நினைத்தலோ பதிவு செய்தால் போதும்.அவர்கள் அதற்கு உண்டான Comission-ஐ எடுத்து கொண்டு மீதி தொகையை நமக்கு தந்து விடுவார்கள்.

இங்கு விற்பனை செய்ய சில வழிமுறைகள் சொல்லி தருகிறார்கள் http://flippa.com/help/sell இதை படித்து விட்டு நீங்கள் உங்கள் தளத்தை விற்பனை செய்யலாம்.


குறிப்பு :-

இந்த வலைப்பூ விற்பனையை சிலர் ஒரு தொழிலகவே செய்கின்றனர்.

எப்படி?என்றால்?

 ஒரு முக்கிய நிறுவனத்தின் முகவரியில் தளத்தை Register செய்து விடுவார்கள் பின்பு அது அந்த நிறுவனத்திற்கு தேவை படும்பொழுது அவர்கள் அதிக விலைக்கு விற்று விடுவார்கள்.

---------------------------------------------------நன்றி---------------------------------------------

1 comment:

  1. நல்ல தகவலை தொடர்ந்து அளித்து வருவதற்கு நன்றி

    ReplyDelete