கம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, September 3, 2013

கம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்!

Protects PC with a USB Flash Drive
 Protect several computers with a single flash drive



உங்கள் கம்ப்யூட்டரைத் திறக்கும் திறவு கோலாக அல்லது மந்திரக் கோலாக, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம். பிரிடேட்டர் (Predator) என அழைக்கப்படும் புரோகிராம் இதற்கு உதவுகிறது. இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதுவரை நீங்கள் பாஸ்வேர்ட் கொடுப்பதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக, பூட்டியும் திறந்தும் வைத்திடும் பணியை மேற்கொள்பவராக இருந்தால், இந்த வசதியையும் பயன்படுத்திப் பார்க்கலாம். சினிமாவில் வரும் ரகசிய போலீஸ் மாதிரி, யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம்.

இதனை, யு.எஸ்.பி. போர்ட்டில் நுழைத்தால் மட்டுமே, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம். எடுத்துவிட்டால் பயன்படுத்த இயலாது.
இந்த யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் இல்லாமல், யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முயற்சித்தால், அனுமதி இல்லை (Access Denied) என்ற செய்தியைப் பெறுவார்கள். உங்கள் ப்ளாஷ் ட்ரைவினை, கம்ப்யூட்டரின் திறவு கோலாக மாற்ற, கீழ்க் குறித்துள்ள செயல்முறைகளின்படி செயல்படவும்.

1. முதலில் http://download.cnet.com/Predator-Free-Edition-32-bit/3000-2144_4-10915340.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து, Predator என்ற புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் அதனை இன்ஸ்டால் செய்திடவும்.

2. பிரிடேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கியவுடன், ப்ளாஷ் ட்ரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் இணைக்கவும். இதனால், உங்கள் கம்ப்யூட்டரின் ட்ரைவில் உள்ள எதுவும் மாற்றி அமைக்கப்படமாட்டாது. எனவே பயப்படாமல், இதனைப் பயன்படுத்தவும். இதனை இணைத்தவுடன், டயலாக் பாக்ஸ் ஒன்று கிடைக்கும். பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்குபடி உங்களைக் கேட்கும். ஓகே கொடுத்து தொடரவும்.

3. இப்போது Preferences என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் உள்ள சில முக்கிய செட்டிங்ஸ் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். “New password” என்ற பீல்டில் பாதுகாப்பான, யாரும் எளிதில் கண்டு கொள்ள முடியாத பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுக்கவும். இங்கு கிடைக்கும் Always Required என்ற பாக்ஸில், டிக் அடையாளம் ஏற்படுத்தினால், பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரைத் திறக்க, உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.

இறுதியாக, Flash Drives என்ற பிரிவில், சரியான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தேர்ந்தெடுக்கவும். இதனை முடித்த பின்னர், “Create key” என்பதில் கிளிக் செய்து, ஓகே அழுத்தி வெளியேறவும்.

4. இப்போது பிரிடேட்டர் புரோகிராம் முடிக்கப்படும். இது முடிந்தவுடன், டாஸ்க் பாரில் உள்ள பிரிடேட்டர் புரோகிராமின் ஐகானை அழுத்தவும். சில விநாடிகள் கழிந்த பின்னர், அந்த ஐகான் பச்சை நிறத்தில் மாறும். இதன் மூலம், பிரிடேட்டர் இயங்கத் தொடங்கியது குறித்து உங்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு 30 விநாடிகளுக்கொருமுறை, பிரிடேட்டர் உங்களுடைய ப்ளாஷ் ட்ரைவ் ப்ளக் செய்யப்பட்டுள்ளதா எனச் சோதனையிடும். இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சம் குறைந்து, இயக்கம் நின்றுவிடும்.
பிரிடேட்டர் இயக்கத்தினைத் தற்காலிகமாக நிறுத்த, டாஸ்க் பார் மெனுவில், “Pause monitoring” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் லாக் செய்யப்பட்டிருக்கையில், யாரேனும் பயன்படுத்த முயற்சி செய்தால், அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்கு கையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள “View log” மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இது மட்டுமின்றி, நீங்கள் பிரிடேட்டர் தரும் இணைய தளம் சென்றால், அதில் ஒவ்வொரு முறை யாரேனும் ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க முயன்று தோல்வி அடைந்தால், அதனை எத்தனை நிமிடங்களுக்கொருமுறை ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம் என்பதனை செட் செய்வதற்கான புரோகிராம் வழி தரப்பட்டிருக்கும்.

இதில் என்ன பிரச்னை என்றால், பிரிடேட்டர் யு.எஸ்.பி. ட்ரைவ் இயங்கவென, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினை நீங்கள் பயன்படுத்திய நிலையிலேயே வைக்க வேண்டும். மற்ற யு.எஸ்.பி ட்ரைவ்கள் பயன்படுத்துவதில் ஒன்றைக் குறைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும். அல்லது, ஒன்றில் இணைப்பு கொடுத்து, பல யு.எஸ்.பி. ட்ரைவ்களைப் பெறும் இணைப்பு ஒன்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.



------------------- நன்றி -------------------




இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment